Learning Guides/Start here
PYTHON IN THE AI ERA

AI coding செய்கிறது; இன்னும் Python கற்க வேண்டுமா?

“AI code எழுதித் தருதே; அப்போ Python ஏன் கற்கணும்?” நல்ல question. AI தந்த code run ஆகுதா, உங்கள் data-க்கு correct result தருதா என்று check செய்ய Python basics உதவும். ஒரு marks example-ல் பார்ப்போம்.

Written by Sathish Kumar K. · Founder & AI Educator, MaanavaN·6 min read
Quick answer
PYTHON + AI · SEE THE DIFFERENCE STEP 01 / 04

5 marks. ஒன்று missing.

marks = [80, 70, None, 90, 60]

Missing mark = 0 என்று assume செய்யலாமா?

Tap each step to follow the example
01 / THE ANSWER

Python கற்கலாம். எல்லா syntax-யும் memorize செய்ய வேண்டாம்.

AI code எழுதித் தரட்டும். நீங்கள் எந்த data உள்ளே போகிறது, code என்ன செய்கிறது, output சரியா என்று பார்க்கப் பழகுங்கள். Error வந்தால் காரணம் கண்டுபிடித்து fix-ஐ மீண்டும் run செய்யுங்கள்.

Simple answer: AI-யுடன் code எழுதலாம். Python basics தெரிந்தால் AI கொடுத்த code-ஐப் புரிந்து, தவறு இருந்தால் கண்டுபிடிக்க முடியும்.

AI tools மட்டும்?Python இப்போது தேவையில்லை
App அல்லது data project?Python basics கற்கவும்
02 / REAL SCENARIO

ஒரு mark காலியாக இருந்தால்?

5 பேரின் average mark வேண்டும் என்று AI-யிடம் கேட்கிறீர்கள். அது code எழுதித் தருகிறது. ஆனால் ஒரு மாணவரின் mark இன்னும் வரவில்லை. அந்த இடத்தில் None உள்ளது. Code-ஐ run செய்தால் என்ன ஆகும்?

AI எழுதிய codepython
marks = [80, 70, None, 90, 60]
average = sum(marks) / len(marks)
print(average)
RUN RESULT · ERRORTypeError: unsupported operand type(s) for +: 'int' and 'NoneType'

ஒரே marks list. இரண்டு results.

Mark வரவில்லை என்றால் 0 என்று எடுத்துக்கொள்ளலாமா?

Missing mark-ஐ skip செய்தால்75300 ÷ 4 students
Missing mark-ஐ 0 என்றால்60300 ÷ 5 students

ஒரு student's mark இன்னும் வரவில்லை. அதை 0 என்று வைத்தால், average குறையும்; அவர் 0 எடுத்தார் என்ற தவறான impression-ம் வரும். Missing mark-ஐ skip செய்யலாமா என்று teacher-கிட்ட confirm செய்து, அந்த rule-ஐ AI-க்கும் சொல்லுங்கள்.

Skip rule-க்கு code + output பாருங்கள் +

None number இல்லை. அதனால் sum() error தருகிறது. Missing mark-ஐ skip செய்ய valid_marks line சேர்க்கிறோம். எல்லா marks-ம் missing ஆக இருந்தால், கீழே உள்ள if divide-by-zero error வராமல் பார்த்துக்கொள்ளும்.

marks = [80, 70, None, 90, 60]
valid_marks = [m for m in marks if m is not None]
if valid_marks:
    print(sum(valid_marks) / len(valid_marks))
else:
    print("No marks yet")
OUTPUT 75.0

இங்கே marks என்பது variable; அதில் பல values இருப்பது list. None வந்ததும் sum() நிற்கிறது. இந்த basics தெரிந்தால் AI-யிடம் என்ன fix வேண்டும் என்று சரியாகக் கேட்க முடியும்.

03 / WHAT THE DATA SAYS

Python இப்போது எங்கே use ஆகிறது?

46%

2025 Stack Overflow survey-ல், AI output சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்று 46% developers சொன்னார்கள்; நம்பிக்கை இருக்கு என்றவர்கள் 33%. அதனால் AI code கிடைத்ததும் run செய்து result-ஐ check பண்ணுங்கள். இந்த numbers survey-க்கு பதில் அளித்த developers பற்றியது; உங்கள் code சரியா என்று தனியாக test செய்ய வேண்டும்.

Survey பார்க்க
~50%

GitHub August 2025 analysis-ல், புதிய AI projects-ல் கிட்டத்தட்ட பாதி Python-ஐ main language-ஆ use செய்திருந்தன. அதனால் பல AI project examples-ஐப் படிக்க Python basics உதவும். இது GitHub projects பற்றிய data; Python கற்றால் job கிடைக்கும் என்ற promise அல்ல.

GitHub report

இதன் point என்ன? AI வேகமாக code எழுதும். ஆனால் “இந்த result சரியா?” என்று கேட்பது உங்கள் வேலை. World Economic Forum-ன் 2025 report AI, big data skills-உடன் analytical thinking-க்கும் demand இருக்கும் என்று சொல்கிறது. Report பார்க்க

04 / CHOOSE YOUR START

உங்கள் goal-க்கு Python எவ்வளவு தேவை?

Path A · Use AI tools

AI tools மட்டும் use செய்யப் போகிறீர்களா?

Email எழுத, notes சுருக்க, research செய்ய AI use செய்கிறீர்களா? நல்ல prompt கொடுக்கவும், AI answer-ஐ check செய்யவும், private data-ஐ share செய்யாமல் இருக்கவும் முதலில் பழகுங்கள். இதற்காக இப்போதே Python தொடங்க வேண்டியதில்லை.

Free GenAI course
Path B · Build software, data or AI

App அல்லது AI project build செய்ய வேண்டுமா?

App அல்லது data project build செய்யப் போகிறீர்களா? Python basics-ல் start செய்யுங்கள். Variable, list, if condition, loop, function, error ஆகியவற்றை ஒரு small project-ல் கற்றுக்கொள்ளுங்கள். AI-யிடம் விளக்கம் கேளுங்கள்; code-ஐ நீங்களே run செய்து பாருங்கள்.

Explore Python course
05 / A PRACTICAL FIRST WEEK

7 நாட்கள். ஒரு small Python project.

  1. Day 1–2உங்கள் name, age-ஐ input வாங்கி print செய்யும் program எழுதுங்கள். Variables, strings இதிலேயே புரியும்.
  2. Day 3–4Mark 50-க்கு மேல் இருந்தால் pass என்று காட்டுங்கள். பிறகு வேறு marks கொடுத்து test செய்யுங்கள்.
  3. Day 5–6ஒரு list-ல் marks வைத்து average காணுங்கள். Missing mark வந்தால் skip செய்ய வேண்டுமா என்று முடிவு செய்து fix செய்யுங்கள்.
  4. Day 7AI-யிடம் code-ஐ மாற்றச் சொல்லுங்கள். அது தந்த fix-ஐ run செய்து, இரண்டு விதமான marks வைத்து check செய்யுங்கள்.

7 நாளில் Python முழுவதும் கற்க முடியாது. ஆனால் இந்த marks project-ல் ஒரு rule-ஐ மாற்றி, output ஏன் மாறியது என்று explain செய்ய முடிந்தால் நல்ல start.

FURTHER READING

Sources & references

The numbers above link to their original reports. The learning path is MaanavaN guidance.

  1. Stack Overflow Developer Survey 2025 · AIsurvey.stackoverflow.co
  2. GitHub Octoverse · Python in AI projectsgithub.blog
  3. World Economic Forum · Future of Jobs 2025weforum.org
YOUR NEXT STEP

இப்போது எந்த path-ல் start செய்வீர்கள்?

AI tools மட்டும் use செய்கிறீர்களா? GenAI basics-ல் தொடங்குங்கள். App அல்லது data project build செய்யப் போகிறீர்களா? Python basics-ல் start செய்து ஒரு small project try பண்ணுங்கள்.

எதில் start செய்வது? MaanavaN team-கிட்ட கேளுங்கள்