என்ஜினீயரிங் படிப்புக்கு மே 1-ந்தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

என்ஜினீயரிங் படிப்புக்கு மே 1-ந்தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்

You Can Apply For Engineering Course May 01

 • என்ஜினீயரிங் படிப்புக்கு மே 1-ந்தேதி முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு ஜூன் 27-ந் தேதி தொடங்குகிறது.
 • தமிழகம் முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் மாணவ-மாணவிகள் சேர்வதற்கு எந்தவித நுழைவுத்தேர்வும் கிடையாது. கடந்த ஆண்டு போலவே பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும். மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு 30-ந்தேதி வெளியிடப்படும்.

மே 1-ந் தேதி முதல்

 • மே 1-ந்தேதி முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்காக மாணவ-மாணவிகள் தங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களை ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம். மே 12-ந்தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. அதன்பிறகு மாணவ-மாணவிகள் எடுத்த மதிப்பெண்களை ஏற்கனவே ஆன்-லைனில் பதிவு செய்திருந்த விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யவேண்டும்.
 • பதிவு செய்வதற்கு மே 31-ந்தேதி கடைசி நாள். ஆனால் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை அண்ணா பல் கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க ஜூன் 3-ந்தேதி கடைசிநாள்.

ஜூன் 27 முதல் கலந்தாய்வு

 • கடந்த ஆண்டு நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.500-க்கு டி.டி. எடுத்தால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஆன்-லைன் மூலமே பணம் செலுத்த வேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களையும் சேர்த்து (நகல்கள்) அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும்.
 • அனுப்ப வேண்டிய முகவரி ‘செயலாளர், தமிழ்நாடு என்ஜினீயரிங் அட்மிஷன், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, சென்னை-600025’.
 • என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஜூன் 20-ந்தேதியும், தரவரிசை பட்டியல் ஜூன் 22-ந்தேதியும் வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூன் 27-ந்தேதி தொடங்க உள்ளது.
நீட் தேர்வு
 • ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது நீட் தேர்வுக்கு விலக்குகோரி சட்டசபையில் மசோதா நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதலை பெற்றதுபோல இப்போதும் அதற்கான முயற்சியில் தமிழக அரசு இறங்கி உள்ளது. கடந்த வாரம் மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து இதுதொடர்பாக பேசினோம். அவரும் இதுகுறித்து பரிசீலிப்பதாக கூறினார்.
 • தமிழகம் முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அந்த பாடத்திட்டத்தில் புதிய தொழில்நுட்பமும், வேலைவாய்ப்பும் சேர்க்கப்பட்டு உள்ளது. வருகிற கல்வி ஆண்டில் அந்த புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.
அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம்
 • மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சமீபத்தில் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. தொழில்நுட்ப கல்லூரிகளை பொறுத்தவரை (ஐ.ஐ.டி. நீங்கலாக) அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம் பெற்றுள்ளது.
 • சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு விரைவில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படுவார்கள்.