“நேற்று இன்று நாளை” : ஒலிம்பிக் பகுதி 2

Deal Score0

Capture

 

  • 1-வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் வருகின்ற ஆகஸ்ட் 5 முதல் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் 18 வரை பாரலிம்பிக் போட்டிகளும் நடைபெற இருக்கிறது. ஒரு பக்கம் ஒலிம்பிக் ஜோதி வலம் வந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் ஒலிம்பிக் பதக்கங்கள் தயாராகி விட்டன.

 

  • ரியோ டி-ஜெனிரோவில், நாணயங்கள் தயாரிக்கும் அரசுக்கு சொந்தமான மையத்தில் ஒலிம்பிக் பதக்கங்கள் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டது. இந்த நாணயத்தில் 5 வளையங்கள் கொண்ட ஒலிம்பிக் சின்னம், பிரேசிலின் ஒலிம்பிக் லோகோ-வுடன், 2016 என்ற எண்ணும் பொறிக்கப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி, வெண்கல ஒலிம்பிக் நாணயங்கள் தயாராகி விட்டது. பிரேசில் நாணயங்களை பாரம்பரிய முறையில் தயாரிக்கும் பொற்கொல்லர்கள் தான், ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான பதக்கங்களை தயாரித்துள்ளனர்.

 

  • கலை நுணுக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பதக்கங்கள். “புதிய உலகம்” என்ற குறிக்கோளைக் கொண்டுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ரியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிக்காக 5 ஆயிரத்து 130 பதக்கங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 500 கிராம் எடை கொண்ட இந்தப் பதக்கங்களில் 30 விழுக்காடு மறுசுழற்சி செய்யப்பட்ட வெள்ளி மற்றும் வெண்கலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மறுசுழற்சி செய்யப்பட்ட polyethylene terephthalate வகை பிளாஸ்டிக் தான் ribbon-கள் செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

  • பாரலிம்பிக் வீரர்களுக்கான பதக்கங்கள் சற்று வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கண் பார்வை இல்லாதவர்களும் தங்களுக்கு கிடைத்த பதக்கம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை அறிந்து கொள்ள பதக்கத்திற்குள் சப்தம் எழுப்பும் கருவியும் உள்ளது. அதிக சப்தம் எழுப்பும் பதக்கம் தங்கம் என்றும், குறைந்த அளவில் சப்தம் எழுப்பும் பதக்கம் வெள்ளி என்றும், சப்தம் எழுப்பத பதக்கம் வெண்கலம் என்றும் அறிந்து கொள்ள முடியும். பதக்கத்தில் Braille எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

 

  • சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் தாமஸ் பேக், இந்தப் பதக்கங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். Forest Stewardship Council மூலம் அங்கீகரீக்கப்பட்ட freijo மரப் பலகையில் தான் இதற்கான பெட்டி செய்யப்பட்டுள்ளது.

 

  • பதக்கங்கள் மட்டுமின்றி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள மேடையும் இயற்கையாக மறுசுழற்சிக்கு உதவும் பொருட்களாலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.