“நேற்று இன்று நாளை”: ஒலிம்பிக் பகுதி 1

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Rio-2016

 

  • 1960 ம் ஆண்டு, அமெரிக்காவில் நிறவெறிக்கான போராட்டம் உச்சநிலையை அடைந்து கொண்டிருந்த காலகட்டம், போராட்டத்தின் உச்சகட்டமாக 1968ல் ஆப்ரோ அமெரிக்கர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கொலை செய்யபட்டார். அதன் எதிரொலியாக அதே ஆண்டு மெக்சிகோ நகரில் நடைபெற்ற 19வது ஒலிம்பிக் போட்டிகளை ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழுந்தது. எதிர்ப்புகளை தாண்டி அமெரிக்க அணியில் கருப்பிணந்த்தவர்கள்(அப்ரோ அமெரிக்கர்கள்) ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டது.

 

  • அக்டோபர் 16ம் தேதி 1968ம் ஆண்டு மெக்ஸிகோவின் ஒலிம்பிக் விளையாட்டு அரங்கில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதில் ஆப்ரோ அமெரிக்கர்களான டாம் ஸ்மித் முதலிடத்தையும் ஜான் கார்லோஸ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இதற்கான விருது வழங்கும் நிகழ்வின் போது நடந்த அந்த நிகழ்வு வரலாற்றில் நிறவெறிக்கு எதிராக நடந்த போராட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது.

 

  • பரிசு வழங்கும் விழாவில் ஒரு கையில் கருப்பு கையுரையையும் மற்றொரு கையில் கருப்பு காலணியையும் அணிந்து கைகளை உயர்த்தி நிறவெறிக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர் வெற்றி பெற்ற டாம் ஸ்மித்தும், ஜான் கார்லோசும்’. அதோடு நில்லாமல் அமெரிக்காவின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது கருப்பு கையுரையை தூக்கிபிடித்தனர். உச்சகட்டமாக ஆப்ரா அமெரிக்க தொழிலாளர்களின் வறுமையை காட்டும் விதமாக தனது மேல் சட்டையை சுழற்றினார் கார்லோஸ்,.

 

  • “நான் வெற்றிபெற்றால் அமெரிக்கன் என்பார்கள், தோற்றுவிட்டால் கருப்பின அமெரிக்கன் என்பார்கள், அவர்களுக்கு எதிராக எதையாவது செய்தால் நீக்ரோ என்பார்கள். நாங்கள் கருப்பர்கள்தான், நாங்கள் கருப்பாய் இருப்பதில் பெருமை கொள்கிறோம். அமெரிக்காவின் கருப்பினத்தவர்கள் நாங்கள் இன்று செய்ததை புரிந்து கொள்வார்கள்.” என்று தங்களது செயலுக்கு விளக்கம் அளித்தார் டாம் ஸ்மித்.

 

  • அதேசமயம் இரண்டாவது இடம் பிடித்த ஆஸ்திரேலியாவின் பீட்டர் நார்மன் மனித உரிமை அமைப்பின் சின்னத்தை அணிந்து போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார். இந்த போராட்டம் உலக அலவில் மிகப்பெரிய பாதிப்பை எற்படுத்தியது. இந்த போராட்டத்தை நடத்தியதை கண்டித்து டாம் ஸ்மித் மற்றம் ஜான் கார்லோஸ் அகியோரை அணியிலிருந்து உடனடியாக நீக்கியதுடன் அவர்கள் போட்டிகளில் பங்கேற்க தடையும் விதித்தது அமெரிக்கா. இதேபோல் ஆஸ்திரேலியாவின் பீட்டர் நார்மன் 1972 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள 13 முறை தேர்வாகியும் அவருக்கு வாய்ப்பு மறுக்கபட்டது. டாம் ஸ்மித் மற்றும் ஜான் கார்லோசின் போராட்டத்தை போற்றும் வகையில் அமெரிக்காவில் உள்ள சான்ஜோஸ் பல்கலைகழகத்தில் 2005ம் ஆண்டு அவர்களுக்கு சிலை அமைக்கபட்டது.

 

  • நாடுகளுக்கு இடையே நட்புறவை பிரதிபலிக்கும் களமாக மட்டுமின்றி, அடக்குமுறைக்கு எதிரான போராட்டக் களமாகவும் ஒலிம்பிக் கடந்த காலத்தில் திகழ்ந்தது என்பதற்கு சிறந்த உதாரணம் 1968ம் ஆண்டு மெக்சிகோவில் நடந்த ஒலிம்பிக்