யாப்பு | yappu - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET
Review Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

() செய்யுள் உறுப்புகள் (நினைவு கூர்தல்)

  • யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.
  • யாத்தல், – செய்தல், கட்டுதல்
  • எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பன யாப்பின் உறுப்புகள் ஆகும்.

இது ஆறு வகைப்படும்.

  1. எழுத்து
  • குறில்,நெடில்,ஒற்று என மூவகையாக பிரித்துக்கூறுவர்.
  • எழுத்து ,அசைக்கு உறுப்பாக அமையும்.
  • முதலெழுத்தும் சார்பெழுத்தும் ஆகிய எழுத்துகள்.

 

ஆசிரியப்பா

ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்

    ஓசை

  • ஆசிரியப்பா அகவலோசை பெற்று வரும்

    அடி

  • அளவடிகளைக் கொண்டது.

 சீர்

  • இயற்சீர் பயின்றும் அயற் சீர் விரவியும் வரும்.
  • கருவிளங்கனி, கூவிளங்கனி ஆகிய இரு வஞ்சியுரிச் சீர்களும் வாரா.

தளை

  • ஆசிரியத்தளை பயின்றும் பிறதளை கலந்தும் வரும்.

முடிவு

  • ஈற்றடியின் ஈற்றுச்சீர் ‘ஏ’ காரத்தில் முடிவது சிறப்புடைத்து; பிற ஈறுகளைக் கொண்டும் முடியும்.

சிறுமை, பெருமை

  • பாட்டின் அளவு மூன்றடிச் சிறுமையும் பாடுவோன் உள்ளக்கருத்தினளவு பெருமையுங் கொண்டது.

 

ஆசிரியப்பாவின் வகை

  • ஆசிரியப்பாவானது நேரிசையாசிரிப்பா, இணைக் குறளாசிரியப்பா நிலைமண்டில் ஆசிரியப்பா அடிமறிமண்டில் ஆசிரியப்பா என நான்கு வகைப்படும்.

 

  1. நேரிசையாசிரியப்பா
  • ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தோடு ஈற்றயலடி சிந்தடியாகவும் ஏனையடிகள் அளவடிகளாகவும் வருவது நேரிசையாசிரியப்பாவாகும்.
Click Here To Get More Details