உலக புகைப்பட தினம்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

PHOTOGRAPHY-FIELD

 

 • சென்னை: ஆயிரம் வார்த்தைகள் சொல்வதை ஒரு புகைப்படம் உணர்த்தி விடும். மக்களிடம் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் புகைப்படத்துக்கு மட்டுமே உண்டு. எனவே தான் புகைப்பட தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது.

 

 • ஒரு நல்ல புகைப்படத்திற்காக மணிக்கணக்கில் ஏன் நாள் கணக்கில் கூட காத்திருக்கின்றனர் புகைப்படக்கலைஞர்கள்.

 

 • புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இன்று 177வது புகைப்பட தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

 

 • உலகிலேயே சிறந்த நிழல் படம்… காலம் தின்ற கண்ணாடிக்குள் கரையான் அரித்த அட்டையில் ஒட்டியிருக்கும் என் அம்மாவின் சிரித்த முகம்! என்று புகைப்பட தினத்தில் கவிதை எழுதியுள்ளார் ஒரு கவிஞர்.

 

 • கேமரா அப்ஸ்குரா என்ற கருவி மூலம் 13ம் நூற்றாண்டில் தனது பயணத்தை தொடங்கிய புகைப்படக்கலை, தற்போது பல பரிமாணங்களையும் கடந்து நிற்கிறது. டிஜிட்டல் கேமிரா, ஸ்மார்ட்போன் போன்றவற்றை பயன்படுத்தி யார் வேண்டுமெனாலும் எளிதாக புகைப்படத்தை எடுக்கலாம்.

 

புகைப்படக்கலை

 

19-1471602194-photo467-600

 

 

 • புகைப்படம் எடுப்பது என்பது ஒரு தனிக்கலை.

 

 • ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கும் சமம்… ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள புகைப்படங்கள் உதவுகின்றன.

 

போட்டோகிராபி

 

noname12

 

 • 1839 ஆம் ஆண்டு சர் ஜான் ஹெர்செல் என்பவர் கண்ணாடியை பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையை கண்டுபிடித்தார். அவர்தான், இக்கலைக்கு போட்டோகிராபி என்று பெயர் வைத்தார்.

 

ஒளியின் எழுத்து

 

 • போட்டோகிராபி என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்த சொல்லாகும். அதன் அர்த்தம் ஒளியின் எழுத்து என்பதாகும். அதே ஆண்டு, லூயிஸ் டாகுரே என்பவர், சில்வர் காப்பர் பிளேட்டில் பிம்பங்கள் விழும் வகையிலான புகைப்படம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.

 

பிலிம் புகைப்படங்கள்

 

 • 1888 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஈஸ்ட்மேன் முதல் முறையாக பேப்பர் பிலிம்களை பயன்படுத்தி பாக்ஸ் கேமராவில் புகைப்படம் எடுக்கும் முறையை கண்டறிந்தார்.

 

கேமரா அறிமுகம்

 

630

 

 • 1900 இல் பாக்ஸ் பிரவுனி என்ற வகை கேமராக்களை கோடாக் அறிமுகப்படுத்தினார். 35 மில்லி மீட்டர் ஸ்டில் கேமராக்களை 1913 இல் ஆஸ்கர் பர்னாக் வடிவ மைத்தார். இது புகைப்படத்துறையையே புரட்டிப்போட்டது.

 

டிஜிட்டல் கேமராக்கள்

 

samsung-galaxy-camera-new2

 

 • முதல் டிஜிட்டல் கேமராவை சோனி நிறுவனம் 1981 ஆம் ஆண்டு தயாரித்தது. அதன் பின்பு, தற்போது வரை டிஜிட்டல் கேமராக்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

 

அதிர வைத்த ஐலான்

 

19-1471602486-iyan356-60

 

 • ஆயிரம் வார்த்தைகள் சொல்லததை ஐலான் சிறுவனின் புகைப்படம் உலகிற்கு உணர்த்தியது. சிரியாவைச் சேர்ந்த 3 வயது சிறுவன் ஐலான், தனது குடும்பத்தினருடன் படகில் துருக்கிக்கு அகதியாக வந்தபோது, படகு கடலில் கவிழ்ந்ததில் ஐலான் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது உடல் செப்டம்பர் 2 ம் தேதி கடற்கரையில் சடலமாக ஒதுங்கிய காட்சியைப் பார்த்து உலகமே அதிர்ந்து போனது.

 

எளிதான புகைப்படக்கலை

 

Nikon_D300_by_BraveDesign

 

 • முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது மிகவும் அரிதான செயலாக இருந்தது. ஆனால், தற்போது தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் புகைப்படம் எடுப்பது எளிதாகி விட்டது. அனைவரும் தற்போது புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். குழந்தைகள் கூட புகைப்படம் எடுக்கின்றன.

 

[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]