Education News

கணினி ஆசிரியர் தேர்வை தமிழில் ஏன் நடத்தவில்லை?: உயர்நீதிமன்றம் கேள்வி

  • கணினி ஆசிரியர் தேர்வை தமிழில் ஏன் நடத்தவில்லை என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வரும் வெள்ளிக்கிழமைக்குள் (செப்டம்பர் 6) பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த தயானா, சென்னையைச் சேர்ந்த குழந்தைவேல், ரோஹிணி, விழுப்புரத்தைச் சேர்ந்த விஜயகுமார், ஞானவேல் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது.
  • அந்த அறிவிப்பாணையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த அறிவிப்பாணையின்படி கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்தன. குறிப்பாக இந்தத் தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டது.  கேள்விகளும் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டிருந்தன.
    தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு என அறிவித்து விட்டு தேர்வை ஆங்கிலத்தில் நடத்தியது ஏற்புடையதல்ல. மேலும் இந்தத் தேர்வு எந்த மொழியில் நடத்தப்படும் என்பது தொடர்பாக முறையாக அறிவிக்கவில்லை. எனவே இந்த தேர்வை ரத்து செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.
  • இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தேர்வு எந்த மொழியில் நடத்தப்படும் என்பது குறித்து அறிவிப்பாணையில் எதுவும் குறிப்பிடாத நிலையில், தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட்ட நுழைவுச் சீட்டில் ஆங்கிலத்தில் மட்டுமே இந்த தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்வை தமிழ் வழியில் நடத்த வாய்ப்புகள் இருந்தும் கூட ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழில் தேர்வை நடத்தாமல் புறக்கணித்துள்ளது. இதனால் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.
    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கணினி ஆசிரியர் தேர்வை தமிழில் ஏன் நடத்தவில்லை என கேள்வி எழுப்பி, இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வரும் வெள்ளிக்கிழமைக்குள் (செப். 6) பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker