ரயில் தண்டவாளத்தில் ஜல்லி கற்கள் இருப்பது ஏன்?

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for why gravels are used in railway tracks

 

  • ரயில் தண்டவாளத்தைப் பார்க்கும் போது, அனைவரது மனதிலும் கட்டாயம் ஏன் தண்டவாளத்தில் மட்டும் கற்கள் நிரப்பட்டப்பட்டுள்ளது என்ற கேள்வி எழும். இப்படி தண்டவாளத்தில் கற்கள் இருப்பதற்கு பின்னணியில் கட்டாயம் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும்.

 

 

  • இந்த கட்டுரையில் ரயில் தண்டவாளத்தில் கற்கள் இருப்பதற்கான சில காரணங்கள் தான் கொடுக்கப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

 

 

  • தண்டவாளத்தில் செல்லும் ரயில் அதிக எடையுடன் இருக்கும். மேலும் அது வேகமாகவும் செல்லும். அப்போது அழுத்தம் அதிகம் இருப்பதால், தண்டவாளங்கள் விலகாமல் இருப்பதற்கு, தண்டவாளங்களில் ஜல்லிக்கற்கள் போடப்பட்டுள்ளன.

 

 

  • பொதுவாக வெப்பத்தினாலும், நிலஅதிர்வு மற்றும் கடினமான வானிலையின் போதும் இரயில் தன்டவாளங்கள் சுருங்கவும் விரியவும் செய்யும். இதனால் தண்டவாளங்கள் விலக வாய்ப்புள்ளது. இதைத் தடுக்கவே தண்டவாளங்களில் கற்கள் உள்ளன.

 

 

  • ஏன் கூர்மையான கற்கள் உள்ளது என்று தெரியுமா? ரயில் தண்டவாளங்களில் இருக்கும் கூர்மையான கற்கள் மர விட்டங்கள் வழுக்கி சென்றுவிடாமல் தடுக்கும்.

 

 

  • தண்டவாளங்கள் ஏன் உயரத்தில் அமைக்கப்படுகின்றன? ஜல்லிக் கற்களை மேல் எழுப்பி தண்டவாளங்கள் அமைக்கப்படுவதற்கு காரணம், நீரின் தேக்கத்தால் தண்டவாளங்கள் மூழ்காமல் இருப்பதற்கு தான்.

 

 

  • களைகளின் வளர்ச்சி மற்றும் இதர தாவரங்களின் வளர்ச்சியினால் தண்டவாளங்களில் ரயில் செல்வதில் இடையூறு ஏற்படாமல் தடுக்கவே ஜல்லிக் கற்கள் போடப்பட்டுள்ளன.

 

 
[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]