physics nobel prize 2016

புதிய கண்டுபிடிப்புக்கு வித்திட்ட மூவருக்கு இயற்பியல் நோபல்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

படம்: நோபல் அகாடமி.

 

 • 2016-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு, பிரிட்டனை பூர்விகமாகக் கொண்ட அமெரிக்க விஞ்ஞானிகள் 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 • இயற்பியலுக்கான நோபலின் ஒரு பகுதி அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டேவிட் ஜே.தவ்லெஸ் என்பவருக்கும், இன்னொரு பாதி அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலைக் கழக விஞ்ஞானி டங்கன் ஹால்டேன் மற்றும் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக் கழக விஞ்ஞானி ஜே.மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் என்பவருக்கும் பகிர்ந்து வழங்கப்படுகிறது.

Image result for david j. thouless

 • குவாண்டம் கோட்பாட்டின் கீழ் வரும் பருப்பொருள் ஆய்வில் இதுவரை அறியப்படாத மூலக்கூறுகள் (Quantum matter) பற்றிய புதிய கண்டுபிடிப்புகளுக்காக இவர்களுக்கு நோபல் வழங்கப்பட்டுள்ளது.

 

 • அதாவது, சாதாரண பருப்பொருள் புரோட்டான்கள், நியூட்ரான்களால் ஆனது, ஆனால் இயற்பியலில் exotic matter என்பது அசாதாரண மூலகங்களைக் கொண்டது. இந்த ‘அன்னிய பருப்பொருள்’ என்பதை dark matter (கண்டுபிடிக்கக் கூடிய எந்த கதிர்வீச்சையும் வெளிப்படுத்தாது) என்று கூட அழைக்கலாம். ஆனால் இது பருப்பொருளுக்கு எதிரான கூறுகளையும் கொண்டதால் எதிர்ப் பருப்பொருள் (anti matter) என்றும் அழைக்கப்படுவதுண்டு. அதாவது இது வரை கண்டுபிடிக்கப்படாத பலதரப்பட்ட கீழ்நிலை அணுமூலகங்களால் ஆன பருப்பொருள் எனலாம். கருந்துளைகளும் இதில் அடங்கும்.

 

 • இதுவரை அறியப்படாத பருப்பொருள் மூலக்கூறுகள் ஆய்வில் இவர்கள் மேற்கொண்ட பாதைதிறப்பு ஆய்வுகளுக்காகவே தற்போது இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

 

 • இத்தகைய அறியப்படாத, வழக்கத்திற்கு மாறான பருப்பொருள் எடுக்கும் வழக்கத்துக்கு மாறான கட்டங்கள் அல்லது நிலைகள் பற்றிய அரிய ஆய்வாகும் இது. அதாவது அதிமின்கடத்திகள் (super conductors), அதிநீர்மங்கள் (superfluids), காந்தப்புல மென்படலங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய மிகவும் சிக்கலான கணிதவியல் மாதிரிகளைப் பயன்படுத்தினர். இவர்களது கண்டுபிடிப்பு எலக்ட்ரானிக்ஸ் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

நேனோ தொழில்நுட்ப லண்டன் மைய இயற்பியல் பேராசிரியர் விளக்கம்:

 

 • கோஸ்டர்லிட்ஸ், தவ்லெஸ், ஹால்டேனுக்கு வழங்கப்பட்ட நோபல் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

 

 • நம்மைச் சுற்றியுள்ள பொருள்களின் இயக்கம் மிகவும் சிக்கல்வாய்ந்தவை. இயற்பியலின் பணி என்னவெனில் இந்த பருப்பொருள் உலகம் இயங்கும் எளிமையான விதிகளை அடையாளம் கண்டு புதிய நிகழ்வுகளை கணிப்பதே. இது உண்மையில் மிகமிகக் கடினமான பணி. ஏனெனில் ஒரு சராசரியான பொருளில் டிரில்லியன் டிரில்லியன் கணக்கில் அணுக்கள் உள்ளன. அனைத்தும் ஒன்றுடன் ஒன்று வினையாற்றுபவை.

 

 • இந்த மூவரின் மேதைமை என்னவெனில் உண்மையான பருப்பொருள் மூலக்கூறுகள், குறிப்பாக மென்படலங்கள் மற்றும் அணுச்சங்கிலித் தொடர்கள் ஆகியவற்றை கணிதவியல் மாதிரியான topology (இடத்தியல்) என்பதைக் கொண்டு அணுக்கள் எப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதை கண்டுபிடித்தனர்.

 

Phase transitions என்றால் என்ன?

 

 • பொதுவாக பருப்பொருளிள் பண்புக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்கள் என்பதே phase transitions என்று குறிக்கப்படுகிறது. உதாரணமாக பனி, நீராக உருகி, நீராவியாக மாறுவது என்று கூறலாம். திடம, நீர்ம, வாயு ஆகியவற்றின் பண்பு மாற்றங்கள் தவிர பொருட்களின் மின் பண்புகளிலும் திடீர் மாற்றங்கள் ஏற்படும் என்பதை இந்த 3 விஞ்ஞானிகள் நிறுவினர். ஒரு பொருள் குளிரடையும் போது அதன் மின் தாக்கத்தை தாங்கும் சக்தி திடீரென குறையும்.

 

 • இதுவரையிலான பருப்பொருள் இடத்தியல் பண்புக்கூறுகள் (topological transitions) மெலிதான படலங்கள், படிவுகளில் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் இந்த விஞ்ஞானிகள் பலதரப்பட்ட பொருள்களிலும் விசித்திரமான மின் பண்புகள் இருப்பதை காட்டியுள்ளனர்.

 

 • ஏன் இந்த மின் பண்பு மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது பற்றிய முக்கியமான கோட்பாட்டு விளக்கங்களைக் கொண்டது இம்மூவரின் ஆய்வுகள்.

 

 • இதன் மூலம் புதிதான பண்புக்கூறுகள் கொண்ட புதிய பொருட்களை வடிவமைக்க முடியும், எதிர்கால தொழில்நுட்பங்கள் பலவற்றிற்கு குறிப்பாக மின்னணுவியல் துறையில் எதிர்கால தொழில்நுட்பங்களை இவர்களது கண்டுபிடிப்புகள் தீர்மானிக்கும்.

 

 • கடந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் நியூட்ரினோக்கள் குறித்த ஆய்வுகளுக்காக டகாகி கஜிதா மற்றும் ஆர்தர் பி.மெக்டோனல்டு ஆகியோருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]