வில்லி பாரதம்

06mar_TH_Music-_07_2333854f

  • கி.பி. 17 ஆம் நுாற்றாண்டில் வில்லிபுத்துாராழ்வார் எழுதிய பாரதம் தோன்றியபின் அதன் செல்வாக்கால், முன்னைய பாரதங்கள் வழக்கொழிந்தன என்பர்.
  • இதற்கு வியாச பாரதமே முதனுால் என்றும் அகத்தியபட்டர் எழுதிய பாலபாரதம் முதனுால் என்றும் இரு கருத்துக்கள் உள்ளன.
  • வியாச பாரதம் 18 சருக்கமும் நுாறாயிரத்திற்கு மேற்பட்ட சுலோகங்களும் கொண்டது. வில்லி அவற்றில் முதல் பத்துச் சருக்கங்களின் தலைமைக் கதையை மட்டுமே கட்டுக் கோப்பாகப் பாடியுள்ளார்.
  • திருமுனைப்பாடி நாட்டில் சனியுரில் வீரராகவன் என்ற வைணவ அந்தணருக்கு மகனாகப் பிறந்த வில்லிபுத்துாரார் தமிழிலும் வடமொழியிலும் நல்ல புலமை பெற்றவர்.
  • வக்க பாகையை ஆண்ட கொங்கர்குல மன்னன் வரபதியாட் கொண்டான் தம்மைப் புறந்தந்ததால் அவ்வள்ளலை நுாலின் கண் பலவிடத்தும் புகழ்ந்துரைக்கக் காண்கிறோம். வில்லி புத்துாராரின் மகன் வரந்தருவார் தம் தந்தையின் நுாலுக்குச் சிறப்புப்பாயிரம் தந்துள்ளார்.
  • வைணவ சமய நுாலாயினும் வில்லிபுத்துாரார் தம் சிவபரத்துவ ஈடுபாட்டைப் புலப்படுத்துமிடங்களும் உள்ளன.
  • ஓரேனந் தனைத்தேட ஒளித்தருளும் இருபாதத்து ஒருவன் அந்தப்போரேனம் தனைத்தேடிக் கணங்களுடன் புறப்பட்டான் புனங்கள் எல்லாம் சீரேனல் விளைகிரிக்குத் தேவதையாம் குழவியையும் செங்கை ஏந்திப்பாரேனை உலகனைத்தும் பணிவுடனே புகழ்ந்திடத்தன் பதிபின் வந்தாள் வில்லிபுத்துாரார் வரம்பின்றி வடசொற்களைக் கலந்து சந்த இனிமை பொருந்தத் தம் நுாலைப் பாடியுள்ளார்.

சொல்லணி, பொருளணிகள் மலிந்த இக் காப்பியம் 4300 பாடல்களைக் கொண்டது.

 

Click Here To Get More Details

 

No Comments

Sorry, the comment form is closed at this time.