வேற்றுமை வகைகள்

Deal Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

  • பெயர்ச் சொல்லின் பொருளை வேறுபடுத்துவதற்கு அதன் ஈற்றில் (இறுதியில்) சேர்க்கும் சொற்கள் வேற்றுமை உருபுகள் எனப்படும்.
  • அவை, , ஆல், கு, இன், அது, கண் முதலியன.

  உருபு

  • இது வேற்றுமையைக் காட்டும் உருவம் அல்லது அடையாளம் ஆகும்.
  • முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை என்று வேற்றுமை எட்டு ஆகும்.
  • முதல் வேற்றுமை, எழுவாய் வேற்றுமை எனவும், எட்டாம் வேற்றுமை, விளிவேற்றுமை எனவும் பெயர் பெறும்.
  • மேலே காட்டிய எடுத்துக்காட்டுகளில் முல்லை என்னும் பெயர்ப்பொருள் எட்டுவகையாக வேற்றுமை அடைந்திருக்கிறது.

விளக்கம் 

1. முல்லை மலர்ந்தது முதல் வேற்றுமை; எழுவாய்ப் பொருள்
2. முல்லையை இரண்டாம் வேற்றுமை; ஐ என்பது இரண்டாம் வேற்றுமை உருபு, செயப்படுபொருள்.
3. முல்லையால் மூன்றாம் வேற்றுமை; ஆல் : மூன்றாம் வேற்றுமை உருபு, கருவிப்பொருள்.
4. முல்லைக்கு நான்காம் வேற்றுமை; கு : நான்காம் வேற்றுமை உருபு, கோடல்பொருள். (கொள்ளுதல்)
5. முல்லையின் ஐந்தாம் வேற்றுமை; இன் : ஐந்தாம் வேற்றுமை உருபு, நீங்கல் பொருள்.
6. முல்லையினது ஆறாம் வேற்றுமை; அது : ஆறாம்
வேற்றுமை உருபு, கிழமைப்பொருள். (உடைமைப்பொருள்)
7. முல்லைக்கண் ஏழாம் வேற்றுமை; கண் : ஏழாம்
வேற்றுமை உருபு, இடப்பொருள்.
8. முல்லையே ! எட்டாம் வேற்றுமை; விளிப்பொருள். (அழைப்பு)

 

  • இந்த எடுத்துக்காட்டுகளில் முதல் வேற்றுமைக்கும், எட்டாம் வேற்றுமைக்கும் வேற்றுமை உருபுகள் இல்லை.
  • மற்றவற்றில் அவ்வுருபுகள் பெயர்ச்சொல்லின் இறுதியில் வந்து பெயர்ப்பொருளை வேறுபடுத்தின.

இத்தொடர்களில் மூன்று உறுப்புகள் உள்ளன.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]