திசைவேகம் & முடுக்கம் | tnpsc study materials

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

 • திசைவேகம் எனப்படுவது பொருள் ஒரு வினாடியில் அடையும் இடப்பெயர்ச்சி ஆகும். அல்லது ஒரு வினாடியில் பொருள் அடையும் இடப்பெயர்ச்சி அல்லது இடப்பெயர்ச்சியின் மாறுபாட்டுவீதம் பொருளின் திசைவேகம் எனப்படும்.
 • மாறுபாட்டு வீதம் என்பது ஒரு வினாடியில் ஏற்படும் மாற்றம்
 • திசையுடன் சேர்ந்து வேகத்தைக் குறிப்பிட்டால், அது திசைவேகம் எனப்படும்.
 • திசைவேகம் என்பது குறிப்பிட்ட திசையில் செல்லும் பொருளின் வேகமாகும்.
 • திசைவேகம் = இடப்பெயர்ச்சி / எடுத்துக்கொண்ட நேரம்
 • திசைவேகத்தின் அலகு மீ / வி (m/s)
 • திசைவேகம் ஒரு வெக்டார் அளவாகும். (எண் மதிப்பு, திசை கொண்டது)
 • SI அலகு முறையில் திசைவேகத்தின் அலகு மீட்டர் / வினாடி.
 • திசைவேகம் எதிர்குறி மதிப்பினையும் பெறலாம். ஒரு குறிப்பிட்ட திசையில் திசைவேகம் நேர்குறி எனில் அதற்கு எதிர் திசையில் திசைவேகம் எதிர்குறி மதிப்பாகும்.

சீரான திசைவேகம்

 • பொருள் ஒன்று சமகால அளவுகளில் சமமான இடப்பெயர்ச்சிகளை அடைந்தால் அது சீரான திசைவேகம் எனப்படும்.

சீரற்ற திசைவேகம்

 • பொருள் ஒன்று சமகால இடைவெளிகளில் வெவ்வேறு தொலைவுகளைக் கடந்தால் அதன் இயக்கம் சீரற்ற திசைவேகம் எனப்படும்.

முடுக்கம் (Acceleration)

 • முடுக்கம் என்பது திசைவேக மாற்றத்தைக் குறிக்கும். ஒரு வினாடியில் திசைவேகத்தின் ஏற்படும் மாற்றம் முடுக்கமாகும்.
 • முடுக்கம் = திசைவேகமாறுபாடு / எடுத்துக்கொண்ட நேரம்
 • முடுக்கத்தின் அலகு மீ / வீ2 (m/s2)
 • இயங்கும் பொருளின் திசைவேகம் குறையுமானால், அது எதிர்முடுக்கம் கொண்டுள்ளது எனலாம்.
 • நேர்கோட்டில் சீரான இயக்கத்தினால் உள்ள பொருளின் திசைவேக மாறுபாடு சுழி ஆகும். ஆனால், சீரற்ற இயக்கத்தில் உள்ள பொருளின் திசைவேகம் தொடர்ந்து காலத்தைப் பொருத்து மாறுபட்டுக் கொண்டிருக்கும்
 • காலத்தைப் பொருத்துப் பொருளின் திசை வேகம் அதிகரித்தால், முடுக்கம் நேர்குறி உடையது. இத்தகைய இயக்கம் முடுக்கப்பட்ட இயக்கம் எனப்படும்.
 • காலத்தைப் பொருத்துப் பொருளின் திசைவேகம் குறைந்தால் அது எதிர் முடுக்கம் எனப்படும். இத்தகைய இயக்கம் எதிர்முடுக்கமடைந்த இயக்கம் எனப்படும்.

சீரான முடுக்கம்

 • நேர்கோட்டுப் பாதையில் இயங்கும் பொருளின் திசைவேகம் சமகால இடைவெளிகளில், சம அளவு அதிகரிக்கவோ குறையவோ செய்தால், பொருளின் முடுக்கம் சீரான முடுக்கம் எனப்படும்.

புவியீர்ப்பு முடுக்கம்

 • புவிப்பரப்பில் சராசரி மதிப்பு8 மீ / வி2, இது ‘g’ என்ற எழுத்தால் குறிக்கப்படுகின்றது.
 • G = 9.8 மீ / வி2 அதாவது, பொருள் மேல்நோக்கி எறியப் படும்போது அதன் திசைவேகம் ஒவ்வொரு வினாடியும்8 மீ / வி குறையும். விழும் போது அதன் திசைவேகம் ஒவ்வொரு வினாடியும் 9.8 மீ / வி அதிகரிக்கும்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]