விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் | vedaivetta vinaa

Review Score+1

tamil-grammar

  • ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ள ஒருவரை ஒருவர் வினாவுகின்றனர் அவ்வாறு வினாவும் வினா, அறிவினா, அறியவினா, ஐயவினா, கொளல் வினா, கொடைவினா, ஏவல் வினா என ஆறுவகைப்படும்.
  1. அறிவினா

தம் அறிவோடு பிறர் அறிவை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும் பிறர் அறிவை அளந்தறியவும் அறியாதவர்க்கு உண்மைப் பொருளை உணர்த்தவும் தாம் அறிந்த ஒரு பொருள் பற்றிப் பிறரிடம் வினாவுவது அறிவினா ஆகும்.

  1. அறியா வினா

இப்பாடற் பொருள் யாது? என் மாணவன் ஆசிரியரிடம் வினாதல்.

மாணவன் தான் அறியாத பொருளை அறிந்து கொள்ள வினாவுதல் அறியா வினாவாகும்.

  1. ஐய வினா

இதுவோ அதுவோ என ஐயுற்றுத் தன் ஐயத்தைப்போக்கிக் கொள்ள வினாவுவதால் ஐய வினாவாகும்.

  1. கொளல் வினா

ஒன்றனைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டுப் பிறரிடம் வினாவும் வினா கொளல் வினாவாகும். பத்தாம் வகுப்பு மாணவன் புத்தகக் கடைக்குச் சென்று “பத்தாம் வகுப்புத் தமிழ்ப் புத்தகம் உள்ளதோ?” என்று வினாவுவது கொளல் வினாவாகும்.

  1. கொடை வினா
  • இல்லாதவர்க்கு ஒரு பொருளைக்கொடுத்தற்பொருட்டு வினாவுவது கொடை வினாவாகும்.
  1. ஏவல் வினா
  • ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற்பொருட்டு வினாவப்படும் வினா ஏவல் வினாவாகும். ஆசிரியர் மாணவனிடம் “இப்பாடலை மனப்பாடம் செய்து விட்டாயா?” என்று வினாவுதல் ஏவல்வினா ஆகும். மாணவன் மனப்பாடம் செய்யவில்லை என்று கூறினால் அவனை மனப்பாடம் செய்யும்படி ஏவவும் மனப்பாடம் செய்து விட்டேன் என்று கூறினால் “பார்க்காமல் எழுதிக்காட்டு” என்று ஏவவும் வினாவினாராதலின் இது ஏவல் வினாவாயிற்று.

 

Click Here To Get More Details