வல்லபாய் பட்டேல் வரலாறு

வல்லபாய் பட்டேல் வரலாறு

Image result for வல்லபாய் பட்டேல் வரலாறு

இந்தியத் துணைப் பிரதமர்
பதவியில்
15 ஆகஸ்டு 1947 – 15 டிசம்பர் 1950
பிரதமர் ஜவகர்லால் நேரு
முன்னவர் உருவாக்கப்பட்டது
பின்வந்தவர் மொரார்ஜி தேசாய்
இந்தியாவின் உள்துறை அமைச்சர்
    பதவியில்
    15 ஆகஸ்டு 1948 – 15 டிசம்பர் 1950
பிரதமர் ஜவகர்லால் நேரு
முன்னவர் உருவாக்கப்பட்டது
பின்வந்தவர் சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 31, 1875
நடீயாத், மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா (இப்போது இந்தியா)
இறப்பு திசம்பர் 15, 1950 (அகவை 75)
மும்பை, இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள் மனிபன் படேல், தாயாபாய் படேல்
படித்த கல்வி நிறுவனங்கள் மிடில் டெம்பில்
தொழில் வழக்கறிஞர்
சமயம் இந்து சமயம்

 

  • சர்தார் வல்லப்பாய் படேல் (பி.31.10.1875 – இ.15.12.1950) (Sardar Vallabhbhai Jhaverbhai Patel, குஜராத்தி: વલ્લભભાઈ પટેલ, இந்தி: सरदार वल्लभभाई पटेल) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார்.
  • சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.

 

 

வாழ்க்கை வரலாறு

 

  • சர்தார் வல்லபாய் படேல் லேவா படேல் சமூகத்திலிருந்து ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்தார். சர்தார் வல்லபாய் படேலின் சொந்த ஊர் கரம்சாத் ஆகும். இவருக்கு சோமாபாய், நர்சிபாய் மற்றும் விதால்பாய் பட்டேல் என்ற மூன்று அண்ணன்களும், காசிபாய் என்ற தம்பியும் தைபா என்ற தங்கையும் உடன் பிறந்தவர்கள் ஆவார். அவரது தந்தை சுவாமிநாராயணனின் சம்ப்ரதாயின் ஒரு பக்தராக இருந்தார். அவரது தந்தை 20 கிமீ தொலைவில் உள்ள சுவாமிநாராயண் கோயிலுக்கு நடந்தே அழைத்துச் செல்வார்.
  • அது அவரது உடலை கட்டுகோப்பாகவும் வலிமையாகவும் உருவாக்க உதவியது. படேல் தனது 22 வயதில் தன்னுடைய மெட்ரிக்குலேசன் கல்வியில் தேர்ச்சி அடைந்தார். பட்டேல் தனக்குள்ளாகவே வழக்கறிஞர் ஆக வேண்டும் என தீர்மானித்து இங்கிலாந்து சென்று வழக்குரைஞர் படிப்பு படித்தார். அவர் மற்ற வழக்குரைஞர்களின் புத்தகங்களை வாங்கி படித்து இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி அடைந்தார்.
MAANAVAN PEDIA STATE AND GOVERNMENT PLANNING WORLDS AWARDS AND REWARDS MAANAVAN ARTICLE EXAM TIPS AUDIO CURRENT AFFAIRS TAMIL VIDEOS MATHS VIDEOS ONLINE TEST DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS GOVERNMENT EXAM
No Comments

Sorry, the comment form is closed at this time.