Vaaimai | TNPSC | TET Study Materials | வாய்மை
Review Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

வாய்மை எனப்படுவ(து) யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொல்

பொருள்: வாய்மை எனப் போற்றப்படும் பண்பு எது வெனில், அது மற்றவருக்கு எவ்வகையிலும் தீங்கு தராத சொற்களைப் பேசுதல்.

 

பொய்மையும் வாய்மை இடத்தை புரைதீர்ந்த

நன்மை பயக்கு மெனின்

பொருள்: பிறர்க்குக் குற்றமற்ற நன்மையைத் தருமாயின் பொய்யும் உண்மையாகக் கருதப்படும்.

 

தனநெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்

பொருள்: தன் நெஞ்சம் அறிந்து பொய் கூறக்கூடாது .  கூறின், தன் நெஞ்சமே தன்னை வருத்தும்

 

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்

பொருள்: ஒருவன் தன் உள்ளம் அறிய பொய்யில்லாமல் நடப்பானானால், அத்தகையவன் உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் ஆவான்.

 

Click Here To Get More Details