Uses Of Radiation | TNPSC | TET Study Materials

கதிரியக்கத்தின் பயன்கள்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

கதிரியக்கத்தின் பயன்கள்

மருத்துவம்:

  • கதிரியக்க கோபால்ட் CO-60, U-238 ஆகியவை புற்றுநோய் மற்றும் கட்டிகளைக் குணப்படுத்தும் சிகிச்சையில் பயன்படுகின்றன.
  • கதிரியக்க அயோடின் |131 தைராய்டு புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுகிறது.
  • பாஸ்பரஸ் -32 அல்லது ட்ரான்சியம் -90 ஆகியவை தோல்புற்று நோயைக் குணப்படுத்தும்.
  • மருத்துவக் கருவிகளில் உள்ள கிருமிகளை நீக்க கதிர்வீச்சு பயன்படுகிறது.
  • கதிரியக்கத் தன்மையுள்ள Fe-59 ஐ பயன்படுத்தி இரத்த சோகை நோயை குணப்படுத்தலாம்.

விவசாயம்:

  • கதிரியக்க பாஸ்பரஸ் (P-32) உரங்களுடன் சேர்க்கப்பட்டு வளரும் தாவரங்கள் உரத்தை எவ்வளவு கிரகிக்கிறது என்று அறியப் பயன்படுகிறது.
  • ரேடியோ ஐசோடோப்பிலிருந்து வெளிவரும் கதிரியக்கத்தைப் பயன்படுத்தி உயர்விளைச்சல் தரும் புதிய ரக நெல், கோதுமை ஆகியவை உருவாக்கப்படுகின்றன.

அறிவியல்:

  • கதிர்களை பயன்படுத்தி அணு உட்கருவின் அமைப்பு மற்றும் பண்பை அறிய முடிகிறது.
  • கதிர்வீச்சுகளின் உதவியால் பொருள்களின் அமைப்பு வாய்ப்பாட்டை கண்டறியப்படுகிறது.
  • கதிரியக்க அயோடினை பயன்படுத்தி கரைசல்களில் தங்கியிருக்கும் மிகச்சிறிய அளவு சில்வர் கசடுகளையும் கண்டறியலாம்.
  • கதிரியக்க ஐசோடோப்புகள் வேதிவினைகளின் சுவடறி தனிமங்களாகப் பயன்படுகிறது.
  • நியூட்ரான் கிளர்வு ஆய்வு மூலம் ஆர்செனிக் நச்சுத் தன்மையைக் கண்டறிவதில் கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுகின்றன.
Click Here To Get More Details