உரைநடை இலக்கியம்

 

தமிழ் உரைநடை

  • தமிழுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாக இலக்கியச் செல்வங்கள் கிடைத்த பெருமை உண்டு.
  • தொல்காப்பியத்தில் உரைநடையைப் பயன்படுத்துவது குறித்து விதிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
  • சிலப்பதிகாரத்தில் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் இடம்பெற்றுள்ளது.
  • நக்கீரர், நச்சினார்க் கினியர் முதலியோர் அக்காலத்திலேயே உரையெழுதத் தொடங்கிவிட்டார்கள் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
  • அதேபோல் சாசனக் கல்வெட்டுக்களிலும் உரைநடை கையாளப்பட்டன என்று சான்றுகள் காட்டப்பட்டு உள்ளன.
  • இவ்வளவு கூறப்பட்டிருப்பினும், தமிழ் உரை நடை வளர்ச்சி இருநூறு ஆண்டுகள் வரம்புக்கு உட்பட்டதுதான் என்றே சொல்ல வேண்டும்.
  • உரைக்கப்படுவதுதான் உரைநடை. ஆகவே பெரும் பகுதி மக்கள் தினசரி தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளக் கையாண்டு வரும் வாய்மொழி வழக்கு அல்லது பழகு தமிழில் எழுதப்படுவதே உண்மையான ஜீவனுள்ள உரைநடையாக விளங்க முடியும்.
  • வாய்மொழி வழக்காக வழங்கும் பழகு தமிழில் உரைநடை இலக்கியம் படைக்கும் போது, அது வாழ்க்கையோடும், வழக்கோடும் ஒட்டி வளர முடியும். இத்தகைய உரைநடை வளர்ச்சி தமிழில், ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆண்டுவந்த காலத்தில்தான் தொடங்கியது.
  • ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதத்தைப் பரப்புவதற்காக விவிலிய நூலைத் தமிழில் மொழி பெயர்த்தனர். நம்மவர் ஆங்கிலேய அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளை வகித்தனர். மொழி பெயர்ப்பாளர்களாக விளங்கினார்கள். இவர்கள் காலப் போக்கில் ஆங்கில மொழியிலுள்ள நல்ல உரை நடை இலக்கியங்களையும், அறிவியல் நூல்களையும் கற்றுக் கொண்டது, தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு உதவியது. மேலும் அச்சு இயந்திரம் வந்தவுடன், புத்தகங்களும் பத்திரிகைகளும் பிரசுரமாயின. இதனால், வாசகர்கள் கூட்டமும் பெருகியது. இந்த வாசகர்களுக்குப் பழக்கமான, அவர்களது வாய்மொழி வழக்கிலுள்ள நடையிலேயே பெரும் பாலான நூல்கள் வெளியாகின. தமிழ் உரை நடை வளர்ச்சி இவ்வாறுதான் தொடங்கியது.

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.