உணவே மருந்து

maanavan

  • தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாக கருதப்படுகிறது.
  • பசியின் கொடுமையை “பசிப்பிணி என்னும் பாவி” என்றது மணிமேகலை காப்பியம்.
  • “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என மணிமேகலையும் . புறநானூறும் கூறுகின்றன.
  • திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் உணவே மருந்தாகும் தன்மையை திருவள்ளுவர் தெளிவாக கூறியுள்ளார்.
  • முன் உண்டது செரித்தது கண்டு உண்பார்க்கு மருந்துண்ணும் தேவை ஏற்படாது என்பது வள்ளுவர் வாக்கு.
  • நம் நாட்டு சமையலுக்கு புழுங்கல் அரிசியே சிறந்தது.
  • நோய்க்கு முதல் காரணம் உப்பு.
  • “மீதூண் விரும்பேல்” என்றவர் ஒளவை.
  • நீரின்றமையாது உலகு எனக் கூறியவர் – வள்ளுவர்.
  • உடலைக் காத்தலின் தேவையை வலியுறுத்தியவர் – திருமூலரும்.

அறுசுவையின் பயன்கள்:

  1. இனிப்பு – வளம்
  2. துவர்ப்பு- ஆற்றல்
  3. கைப்பு – மென்னை
  4. கார்ப்பு – உணர்வு
  5. உவர்ப்பு – தெளிவு
  6. புளிப்பு – இனிமை

நோய் நீக்கும் மூலிகைகள்

கீழக்காய்நெல்லி:

  • இதனை கீழாநெல்லி, கீழ்வாய்நெல்லி என்று கூறுவர்.
  • மஞ்சள் காமாலைக்கு கைகண்ட மருந்தாக பயன்படுகிறது.
  • இதனை கற்கண்டுடன் சேர்த்து உண்பதால் சிறுநீர்த் தொடர்பான நோய்கள் நீங்கும்.

துளசி:

  • துளசி செயிடின் இலைகளை நீரில் இட்டு கொதிக்க செய்து ஆவி பிடித்தால் மார்புசளி, நார்க்கோவை, தலைவலி நீங்கும்.
  • துளசி இலைகள் பூசினால் படை நீங்கும்.

தூதுவளை:

  • இது செடி வகை இல்லை, இது கொடி வகையை சேர்ந்தது.
  • இக்கொடியில் சிறு முள்கள் உண்டு.
  • இதனை தூதுளை, சிங்கவல்லி என்றும் அழைப்பர்.
  • வள்ளலார் இதனை “ஞானப்பச்சிலை” என்று கூறுவார்.
  • இது குரல் வளத்தை மேம்படுத்தும், வாழ்நாளை நீடிக்கும்.

குப்பைமேனி:

  • குப்பைமேனி, நச்சுக்கடிகளுக்கு நல்ல மருந்து.
  • இதனை “மேனி துலங்க குப்பைமேனி” என்று சிறபிப்பர்.

கற்றாழை:

  • இது வறண்ட நிலத்தாவரம்.
  • இதனை “குமரி” என்பர்.
  • பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்குவதால் “குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு” என்பர்.
Click Here To Get More Details

 

No Comments

Sorry, the comment form is closed at this time.