உச்சதார் அவிஸ்கார் யோஜனா

Review Score0

Image result for Uchatar avishkar Yojana

 

உச்சதார் அவிஸ்கார் யோஜனா

  • உச்சதார் அவிஸ்கார் யோஜனா திட்டத்தை தொடங்கு வதன் பிரதான நோக்கம், மாணவர்களை புற உலகோடு நன்கு பரிச்சயம் உடையவர்களாக மாற்றுவதும், அவர்களுக்கு சந்தை குறித்தான மனப் பான்மையை ஏற்படுத்துவதுமேயாகும். இந்தியாவின் முதன்மையான கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது இவை பின்பற்றப்படவேண்டும்.

 

  • இத்திட்டத்தை உயர்கல்வித் துறை மட்டுமே நிர்வகிக்கிறது. ஐஐடி போன்ற இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனங்களில் மட்டுமே இத்திட்டத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.

 

குறிக்கோள்கள்

  • அரசின் இந்த கல்வி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் பின்னால் ஒன்றுக்கு மேற்பட்ட குறிக்கோள்கள் உள்ளன. இந்தியாவில் உயர்கல்வி பெறும் மாணவர்கள் பாட அறிவை மட்டுமே பெற்றிருப்பார்கள்.

 

  • பொருட்கள் உற்பத்தியாகுமிடங்களிலும், தொழிற்சாலை களிலும் என்ன நடக்கிறதென்ற நடைமுறை அறிவு உண்மையில் அவர்களுக்கு இருக்காது. எனவே பாட அறிவுக்கும் நடைமுறை அறிவுக்குமான இடைவெளியை நிரப்புவதே இத்திட்டத்தின் குறிக்கோளாகும்.

 

நடைமுறைப் பயன்பாடு

  • உயர்கல்வித் துறை, ஐஐடிக்கு மட்டுமே தற்சமயம் உச்சதார் அவிஸ்கார் யோஜனா வை நடைமுறைப்படுத்தியுள்ளது. இத்திட்டத் தின்படி மாணவர்கள், நடைமுறை அறிவைப் பெற தொழிற்சாலைகளுக்கு அனுப்பபடுவது படிப்பின் இறுதியாண்டிலேயே செயல் படுத்தப்படும். திட்டத்தின் தேவைக்கேற்ப நம் நாட்டுக்குள்ளேயே அல்லது வெளி நாட்டுக்கோ மாணவர்கள் அனுப்பப்படுவர்.

 

வழிகாட்டு நெறிமுறைகள்:

1)    திட்டத் தொடக்கம்

ஐஐடியானது தானாகவே ஒரு தொழிற் சாலையுடன் கூட்டுத் துணிகர முயற்சி யாக திட்டத்தைத் தொடங்கும்.

2)    சாத்தியக்கூறு ஆய்வு

திட்டத்தால் எதிர்பார்க்கும் பலன், சாத்தியக் கூறு பற்றி கணக்கிடுதல்

3)    திட்டச் செலவை தாங்குதல்

அதிகபட்ச செலவை அந்தக் கல்வி நிறுவனம் ஏற்க வேண்டும். சம்பந்தப்பட்ட தொழில்துறை திட்டச் செலவில் நான்கில் ஒரு பங்கை ஏற்கும்.

4) திட்ட அனுமதி

கான்பூர் ஐஐடியைச் சேர்ந்த சிறப்புக் குழு ஒன்று திட்டங்களின் அனுமதியைப் பொறுப்பேற்கும்.

5)    திட்ட நிதி

  • அடுத்த பொருளாதார ஆண்டில் செயல் படுத்தும் இத்தகைய திட்டங்களுக்கு, பிப்ரவரி 15 அன்றோ அல்லது அதற்கு முன்போ திட்டத்தை சமர்பித்திருக்க வேண்டும்.

 

  • அரசு நிதியளிப்பதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. திட்டத்துக்காக வெளியிலிருந்து திறமையுடைய ஆட்களை அமர்த்த நேர்ந் தாலோ, குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் தொழில்சார் உபகரணங்கள் இல்லாதிருந்து வாங்கவோ, வாடகைக்கு எடுக்கவோ நேர்ந்திருந்தாலோ; திட்டத்தை நிறைவு செய்ய வெளி அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டதற்கான செலவுகளுக்கோ தொழிற்சாலை சோதனைகளுக்கு தேவை யான அத்தியாவசிய பொருட்களுக்காகவோ திட்ட நிதி அளிக்கப்படும்.

 

  • ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 15-க்கு முன்போ அல்லது பிப்ரவரி 15-அன்றோ திட்ட நிதிக்கான விவரங்கள் அனுப்பித்தரப் படவேண்டும். நிதியானது ஒரு வருடத்தில் இரண்டு தவணையாக அனுப்பித் தரப்படும்.

 

  • மத்திய அரசானது இத்திட்டத்திற்காக ஒரு பொருளாதார ஆண்டில் ரூ. 25 கோடி ஒதுக்க முன்வந்துள்ளது. மொத்த நிதியானது பல்வேறு துறைகளின்வழி திரட்டப்படும். திட்டச் செலவில் பாதித் தொகை மறுவள ஆதார மேம்பாட்டுத் துறையிலும் 25% திட்டம் எந்தத் துறை சார்பானதோ அத்துறையிலும், மீதமுள்ள 25% திட்டத்தோடு தொடர்புடைய துறையிலும் அளிக்கப்படும்.
LATESTS GOVERNMENT JOBS