அதிர்வுகளின் வகைகள் | tnpsc study materials

maanavan physics

 • இயல்பு அதிர்வுகள்
 • திணிப்பு அதிர்வுகள்
 • ஒத்த அதிர்வுகள்

இயல்பு அதிர்வுகளுக்கு எடுத்துக்காட்டு:

 • இழுக்ககக் கட்டப்பட்ட கம்பியின் அதிர்வுகள்.
 • அதிர்வூட்டப்பட்ட இசைக்கவையின் அதிர்வுகள்
 • அலைவுறும் தனி ஊசல்

திணிப்பு அதிர்வுகள்:

 • வீணை, வயலின் போன்ற இசைக்கருவியில் ஏற்படும் அதிர்வுகள் அதிர்வுறும் பொருளின் இயல் அதிர்பெண்ணும் பொருளின் மேல் செயல்படும் சீரான புறவிசையில் அதிர்பெண்ணும் சமமாயிருப்பின் பெரும வீச்சுடன் அதிர்வுகள் ஏற்படும்.
 • இதுவே ஒத்ததிர்வு எனப்படும். இதனால் தொங்கு பாலத்தின் மீது படைவீரர்கள் அணிவகுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

எதிரொலி:

 • சிறிய அறையில் நேரடி அலைகளும் எதிரொலிப்பு அலைகளும் ஒரே சமயத்தில் நமது செவியை அடையும். அறை பெரிதாக இருப்பின் அலைகள் செல்லவேண்டிய தூரம் அதிகமாகின்றது. அந்த அலைகள் நம்மை அடைய 1/10 நொடிகளுக்கு மேல் எடுத்துக் கொண்டால் அந்த ஒலியலைகளை நாம் தனியாக கேட்கின்றோம்இதனையே எதிரொலி என்கிறோம்.
 • எதிரொலிக்கும் தளத்தின் தொலைவு 17 மீட்டருக்கு மேல் இருந்தால் நேரடி ஒலியும் எதிரொளிக்கப்பட்ட ஒலியும் தனித்தனியாக கேட்கும்.
 • மின்னல் என்பது நேர் மின்னூட்டம் மற்றும் எதிர் மின்னூட்டம் கொண்ட மேகங்கள் ஒன்றின் மீது ஒன்று கடந்து செல்லும்போது மின்னிறக்கம் ஒன்று ஏற்படுகிறது. மின்னிறக்கத்தின் போது ஏற்படும் ஒளியே மின்னல் என்று அழைக்கப்படும்.
 • மின்னல் மற்றும் இடியோசை ஒரே சமயத்தில் ஏற்பட்டாலும், நாம் முதலில் மின்னலும் பின்பு இடியோசையே கேட்கிறோம். காரணம் மின்னலின் திசை வேகம் காற்றில் 3×108 மீவி இடியோசையின் திசைவேகம் 340 மீவி எனவே, மின்னல் முதலில் நாம் உணர்கிறோம்.
 • இரவில் ரேடியோ நிகழ்ச்சியை நாம் தெளிவாக கேட்க முடியும். ஏனென்றால் சூரிய ஒளியால் அயனி அடுக்கு பாதிக்கப்படுகின்றன. ஆனால், இரவில்  அவ்விதம் பாதிக்கப்படுவதில்லை.
 • சுருதி என்பது ஒலியின் அதிர்வெண்ணைச் சார்ந்துள்ளது. பெண்களின் சுருதி ஆண்களின் சுருதியைவிட அதிகமாகும்.
 • ஒலியின் செறிவானது அதிர்வுகளின் வீச்ச மற்றும் அதிர்வடையும் பொருளின் பரப்பைச் சார்ந்துள்ளது. வீணையின் நாதத்தையும் புல்லாங்குழல் ஏற்படுத்த இசையையும் நாம் வேறுபடுத்தி அறியக் காரணமாக இருப்பது அவற்றின் சுரப்பண்பாகும்.
Click Here To Get More Details

 

No Comments

Sorry, the comment form is closed at this time.