ஜீன் திடீர் மாற்றத்தின் வகைகள்

Review Score0

ஜீன் திடீர் மாற்றத்தின் வகைகள்

  • ஜீன் திடீர் மாற்றங்களை கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
  1. பதிலீட்டு திடீர் மாற்றம்
  • இவ்வகை திடீர் மாற்றத்தில் டி.என்.ஏ.வின் மூவெழுத்து கோடானில் உள்ள ஒன்று அல்லது பல நைட்ரஜன் காரப்பொருட்கள் நீக்கப்பட்டு அவற்றிற்குபதிலாக வேறு நைட்ரஜன் காரப்பொருட்கள் ஈடு செய்யப்படுகின்றன. இவ்வாறு உண்டாகும் ஒரு புதிய கோடான் புரத உற்பத்தியின் போது ஒரு வேறுப்பட்ட புரத்த்தை உற்பத்தி செய்து அதன் விளைவாய் புதிய புறத்தோற்ற பண்புகள் வெளிப்படுகின்றன.
  • இத்தகைய பதிவீட்டு திடீர் மாற்றம் பெரிய அளவில் புறத்தோற்ற மாற்றங்களை ஏற்படுத்துவதால் அவை மரபியல் மற்றும் பரிணாம முக்கியத்துவம் வாய்ந்தாகும்.
  • பதிலீட்டு திடீர்மாற்றம் இருவகைப்படும்
  1. ஓத்த பதிலீடு

இதில் ஒரு பியூரின் நைட்ரஜன் காரப்பொருள் மற்றொரு பியூரின் காரப்பொருளாலோ அல்லது ஒரு பைரிமிடின் காரப்பொருள் மற்றொரு பைரிமிடின் காரப்பெபாருலோ மட்டுமே பதிலீடு செய்யப்படுகிறது.

  1. வேறுபட்ட பதிலீடு

இவ்வகையில் ஒரு பியூரின் நைட்ரஜன் காரப்பொருள் மற்றாரு பைரிமிடின் காரப்பொருளாலோ அல்லது ஒரு பைரிமிடின் காரப்பொருள் வேறோரு பியூரின் காரப்பொருலோ ஈடு செய்யப்படும்.

Click Here To Get More Details