முக்கிய திட்டங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

Image result for panniselvam letter to pm

 

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:–

 • 14–வது நிதிக்கமிஷன் பரிந்துரைப்படி மத்திய வரித் தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு 32 சதவீதம் முதல் 42 சதவீதம் வரை நிதி ஒதுக்கீடு செய்வதை தாங்கள் அறிவீர்கள். இதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் மத்திய வரி வருவாய் தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படும் பங்கு மிகவும் குறைந்து விட்டது.

 

 • 13–வது நிதிக்கமிஷன் பரிந்துரைப்படி தமிழ்நாட்டுக்கு மத்திய வரி வருவாய் தொகுப்பில் இருந்து969 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டது. இது 14–வது நிதிக்கமிஷன் பரிந்துரைக்குப் பிறகு 4.023 சதவீதமாக குறைந்து போனது. 14–வது நிதிக் கமிஷனின் சமச்சீரற்ற நிலை காரணமாக தமிழ்நாட்டுக்கு கடுமையான நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

 

 • மாநிலங்களுக்கான வரி வருவாய் பகிர்ந்தளிப்பில் தமிழ்நாட்டுக்கு மிக குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்வது, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிக பெரும் இழப்பாகும். ஆனால் தமிழகம் போன்ற நிலையில் உள்ள சில மாநிலங்கள் அதிக ஆதாயம் அடைந்துள்ளன.

 

 • தமிழகம் சிறப்பான நிதி நிர்வாகத்தை மேற்கொண்ட போதிலும் அனைத்து வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்குரிய வருவாய் பற்றாக்குறைக்கான மானியமும் தரப்படவில்லை.

 

 • நிதி ஒதுக்கீட்டுக்காக 1971–ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டிருப்பது பாதகமானது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த தமிழ்நாடு இலக்கை எட்ட முயற்சிகள் எடுத்தது. எனவே 1971–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி நிதிக் கமிஷன் செயல்பட்டிருப்பது சரியானது அல்ல. இதன் மூலம் நிதிக் கமிஷன் தன் கொள்கையில் இருந்து விலகி சென்றுள்ளது.

 

 • தமிழக அரசு நிதி நிர்வாகத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிர்வாகம் உரிய முறைப்படி அங்கீகரிக்கப்படவில்லை.

 

 • மற்றொரு புறம் வருவாய் பற்றாக்குறைக்கான மானியங்களும் தரப்படவில்லை. இது தமிழகம் போன்ற சிறந்த நிதி நிர்வாகத்தை செய்யும் மாநில அரசுகளை முழுமையாக சீர்குலைப்பதாக உள்ளது.

 

 • மத்திய வரி வருவாய் தொகுப்பில் இருந்து தமிழ் நாட்டுக்கான ஒட்டு மொத்த ஒதுக்கீடு59 சதவீதத்தில் இருந்து 1.69 சதவீதமாக அதாவது வெறும் 0.1 சதவீதமாக மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. 13–வது நிதிக்கமிஷன் பரிந்துரைப்படி தமிழகம் ரூ.4669 கோடி பெற்றது.

 

 • ஆனால் தற்போது நிதிக்கமிஷன் தமிழ்நாட்டுக்கு எந்த சிறப்பு நிதி ஒதுக்கீட்டையும் செய்யவில்லை.

 

 • நிதிக்கமிஷனின் இந்த முடிவால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய திட்ட உதவியும் குறைந்து விட்டதால், தமிழ் நாட்டுக்கான இழப்பு மேலும் அதிகமாகிறது. எனவே 14–வது நிதிக் கமிஷனின் பரிந்துரைகள் தமிழ்நாட்டுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

 

 • மத்திய அரசின் 2015–16ம் ஆண்டுக்கான பட்ஜெட் பரிந்துரைகளும் தமிழ்நாட்டுக்கு இடர்பாடுகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.

 

 • பெட்ரோல், டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ. 4 சிறப்பு வரி, செல்வ வரி அகற்றம், மத்திய உதவி பெறும் பட்டியலில் இருந்து 12 திட்டங்கள் நீக்கப்பட்டது. 13 முக்கிய தேசிய திட்டங்களுக்கு மாநில அரசுகளின் பங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் மாநில அரசின் சுமையை அதிகமாக்கியுள்ளது.

 

 • மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களில் மாநிலங்களின் நிதி பங்களிப்பு 25 சதவீதமாக மட்டுமே இருக்க வேண்டும். இதை மனதில் கொண்டு மத்திய அரசு செயல்படுதல் வேண்டும்.

 

 • நிதி ஆயோக் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ள திட்டங்களுக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ. 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 14–வது நிதிக் கமிஷன் பரிந்துரையில் தமிழகம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், நிதி ஆயோக் ஒப்புதல் அளித்துள்ள திட்டங்களுக்கான தமிழ் நாட்டுக்குரிய பங்கை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

 

 • ஆழ்கடலில் மீன்பிடித்தல், சென்னை அருகே உள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், சென்னை மோனோ ரெயில் திட்டம் போன்ற திட்டங்களுக்கு அதிக சிறப்பு நிதி தேவைப்படுகிறது. எனவே இந்த முக்கிய திட்டங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய நிதி ஆயோக் அமைப்புக்கு தேவையான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

 • இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.