கிராம நிர்வாக அலுவலரின் பணிகள் மற்றும் கடமைகள்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

கிராம நிர்வாக அலுவலரின் பணிகள் மற்றும் கடமைகள்

Village Administrative Officer’s Tasks and Duties

  • கிராம நிர்வாக அலுவலரின் பணிகள் மற்றும் கடமைகள்

கிராம நிர்வாக அலுவலரின் பணிகள் மற்றும் கடமைகள்

  • அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் பல துறைகளில் மக்களின் நேரடித் தொடர்புக்குட்பட்ட இன்றியமையாத் துறையாக வருவாய் நிர்வாகத்துறை இயங்கி வருகிறது.
  • சிறப்பு ஆணையர் (ம) வருவாய் நிர்வாக ஆணையரின் தலைமையில் வருவாய் நிர்வாகத்துறை இயங்கி வருகிறது.
  • இத்துறையின் பெயர் அரசு ஆணை நிலை எண் 249, வருவாய்துறை நாள் 27.05.2003 ன் படி வருவாய் நிர்வாகம் (ம) பேரிடர் மேலாண்மை (ம) பேரிடர் தணிக்கும் துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கிராம நிர்வாகம் :

  • மாவட்ட வருவாய் நிர்வாகத்திற்கு முதன்மை ஆதாரமாகவும் மற்றும் முதுகெலும்பாகவும் கிராம நிர்வாக அமைப்பு தொடர்ந்து இருந்து வருகிறது.

முந்தைய கிராம நிர்வாக நடைமுறை :

  • தமிழ்நாட்டில் 14.11.1980 க்கு முன்னர் ஒரு வருவாய் கிராமத்திற்கு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிராமங்கள் அடங்கிய பகுதிக்கு ஒரு பகுதி நேர முனிசிப், கர்ணம் ஆகிய பகுதி நேரப் பணியாளர்கள் பணியாற்றி வந்தார்கள்.

இன்றைய கிராம நிர்வாகம் :

  • 1980 ம் ஆண்டில் கிராம நிர்வாக அமைப்பை மாற்றம் செய்ய அரசு முடிவு செய்தது.
  • எனவே, பகுதிநேர கிராம அலுவலர்கள் ஒழிப்பு அவசரச்சட்டம் எண் – 10/80,  மேதகு ஆளுநர் அவர்களால் 13.11.1980 அன்று பிரகடனம் செய்யப்பட்டு 14.11.1980 முதல் அமலுக்கு வந்தது.
  • பின்னர் 1981 ம் ஆண்டு தமிழ்நாடு பகுதிநேர கிராம அலுவலர்கள் ஒழிப்புச்சட்டம் (எண் 3/81) ன் படி இப்பதவிகள் ஒழிக்கப்பட்டன.
  • பகுதி நேர கிராம நிர்வாக அலுவர்களுக்கு பதிலாக முழுநேர கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் கிராமங்களில் மாநில அளவில் 12506 பேர் பணி நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
Click Here to Download