சமூக பாதுகாப்பு திட்டங்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

சமூக பாதுகாப்பு திட்டங்கள்

Social Security Schemes

 • முதியோர் ஓய்வூதியத் திட்டங்கள்
 • ஆதரவற்ற உடல் ஊனமுற்றோர் ஓய்வூதியத் திட்டம்
 • தமிழ்நாடு துயர் துடைப்புத் திட்டம்
 • விபத்து நிவாரண திட்டம்
 • தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்

சமூக பாதுகாப்பு திட்டங்கள்

 • தமிழ்நாட்டில் உற்றார் உறவினர் ஆதரவின்றி வழியற்ற முதியோர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும் சமூக நலத்துறையின் கீழே ஐந்து சமூக நலத்திட்டங்கள் வருவாய்த் துறை மூலம் செயல்படுத்தி வருகிறது.

1, முதியோர் ஓய்வூதியத் திட்டம் (1.04.1962)

2, ஆதரவற்ற உடல் ஊனமுற்றோர் ஓய்வூதியத்திட்டம்    

(1.11.1974 முதல்)

3, ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம் (1.06.1975)

4, ஆதரவற்ற வேளாண்மை தொழிலாளர்கள் ஓய்வூதியத்திட்டம் (15.03.1981 முதல்)

5, கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியத் திட்டம் (25.04.1986)

 • முதியோர் ஓய்வூதியத் திட்டம் அரசாணை எண் 73
 • நிதி (ஓய்வூதியம்) நாள் 22.01.1962
 • உடல் ஊனமுற்றோர் உதவித் திட்டம் 1.11.1974 அரசாணை எண் நிதித்துறை நாள் 27.5.1975
 • ஆதரவற்ற வேளாண்மை தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் 15.03.1981 அரசாணை பல்வகை எண் 164, சமூக நலத்துறை நாள் 12.05.19981
 • கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியத் திட்டம் 25.5.1986 அரசாணை பல்வகை எண் 1465 சமூக நலத்துறை நாள் 3.5.1984

முதியோர் (உதவித் தொகை) ஓய்வூதியத் திட்டம்

 • இத்திட்டம் பிழைப்புதிவு இல்லாமலும், காப்பாற்றுபவர் இல்லாமலும் உள்ள அனைத்து முதியோர்க்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
 • இத்திட்டம் 1.04.1962 முதல் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
 • இத்திட்டத்தின் மூலம் உதவித்தொகை பெற குறைந்தபட்ச வயது – 60
 • மற்ற ஆதரவற்ற நபர்களுக்கு குறைந்த பட்ச வயதுவரம்பு -65
 • மாதம் ஒன்றுக்கு முதியோர் ஓய்வூதியம் ரூ.200 வழங்கப்பட்டு வருகிறது.
 • மத்திய அரசு மாதம் ஒன்றுக்கு ரூ. 75 வீதம் 65 வயது மேல் உள்ளவர்களுக்கு வழங்குகிறது.

 

Click Here to Download