கிராம கணக்குகள் பராமரித்தல்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

கிராம கணக்குகள் பராமரித்தல்

Rural Accounts Maintenance

 • கிராம கணக்குகள் பராமரித்தல்
 • வருவாய் பதிவேடுகள்
 • குடிமக்கள் கிராம கணக்ககளை பார்வையிடல்
 • தமிழ்நாடு நகர்புற நிலவரி சட்டம்
 • நில உரிமையை விட்டக் கொடுத்தல்
 • வருவாய் தீர்வாயம்

கிராம கணக்குகள் பராமரித்தல்

 • கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அரசாணை எண் 581, வ.து. நாள், 3.4.1987ன் படி பணிகள் அட்டவணை (Job chart) நிர்ணயம் செய்யப்பட்டது.
கிராமக் கணக்குகள் பராமரிப்பது குறித்து விரிவாக குறிப்பிடும் நூல் – கிராமக் கணக்குகள் நடைமுறை நூல்.

நிலையான ‘அ’ பதிவேடு :

 • இது புலன்களையும் அவைகளில் ஏற்படும் மாறுதல்களையும் காண்பிக்கும் நிலையான பதிவேடு ஆகும்.
 • நடைமுறையில் ஏற்படும் மாறுதல்களைப் பதிவு செய்ய இடைச்செருகலாக வெற்றுக் காகிதங்கள் வைக்கப்பட்டுள்ளன.
 • இப்பதிவேட்டில் முதல் பகுதியாக வருவாய்க் கிராமத்தின் வரலாற்று குறிப்பு (Descriptive Memoir) வழங்கப்பட்டுள்ளது.
 • இப்பதிவேடு நடைமுறையில் 12 கலங்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
 • இப்பதிவேடு இரட்டைப் பிரதிகளாக வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒன்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் ஒன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
 • மாறுதலுக்குண்டான ஆணை எண் (ம) யாரால் வழங்கப்பட்டது என்ற விவரங்களை பதிவு செய்து வட்டாட்சியர் (அ) கீழ் நிலையில் உள்ள வருவாய் ஆய்வாளர் நிலைக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதற்கு அத்தாட்சியாக ‘அ’ பதிவேட்டில் சுருக்ககொப்பம் செய்ய வேண்டும்.
 • எக்காரணத்தைக் கொண்டும் கிராம நிர்வாக அலுவலர் இப்பதிவேட்டில் மாற்றங்கள் செய்யக் கூடாது.
 • தற்போது விவசாய நிலங்களுக்கு ஒரு பதிவேடும், கிராம நத்தத்திற்கு ஒரு பதிவேடாக ஒரு வருவாய் கிராமத்திற்கு இரண்டு ‘அ’ பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

‘A’ பதிவேட்டின் உள்ளடக்கம் :

 • இது ஒவ்வொரு வகையின் கீழ் உள்ள நிலத்தின் பரப்பையும் தீர்வை வீதத்தையும் காட்டுகிற ‘A’ பதிவேட்டின் தொகுப்பாகும்.
 • அரசு நிலம், கைப்பற்றில் உள்ளவை, கைப்பற்றில் இல்லாதவை, என்பனவற்றின் கீழ் தனித்தனியே காட்டப்பட வேண்டும்.

‘B’ பதிவேடு :

 • இந்தப் பதிவேடு இனாம்களின் நிலைப்புல பதிவேடாகும்.
 • 1963ம் ஆண்டு தமிழ்நாடு இனாம் ஒழிப்பு சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு பெரும்பாலான கிராமங்களில் இனாம் நிலங்கள் ரயத்துவாரி நிலங்களாக மாற்றப்பட்டு அதற்குண்டான நடவடிக்கைகள் முடிவடைந்து விட்டது.
 • ஆனால், ஏதோ சில இனாம்களின் ஒழிப்பு தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.  அந்த ஒரு சில இடங்களில் மட்டும் இப்பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.
 • இப்பதிவேட்டில் விடுவரி விவரங்களை குறிப்பிட வேண்டும்.

நில பதிவேடு B1 :

 • இது நில உரிமை பட்டயத்திற்கான நிலைப்பதிவேடு B யினின்றும் வேறுபட்ட தனிப்பதிவேடாகும்.
 • இப்பதிவேடு தமிழ்நாடு ஜமீன் (ஒழிப்பு (ம) ரயத்துவாரி மாற்றம்) சட்டம் 1948 (1948ம் வருட 26வது சட்டம்) ன் கீழ் முடிவு செய்யப்பட்ட கிராமங்களுக்கு உரியதாகும்.
 • இப்பதிவேடு 2 பாகங்களாக பராமரிக்கப்பட வேண்டும்.

 

Click Here to Download