சட்டம் ஒழுங்கு பராமரித்தல்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

சட்டம் ஒழுங்கு பராமரித்தல்

Maintenance of Law And Order

 • கிராம நிர்வாக அலவலர் பணிகள்
 • சட்டம் ஒழுடங்கு பராமரித்தல்
 • புதையல்கள்

சட்டம் ஒழுங்கு பராமரித்தல்

காவல் பணிகள்

 • கிராமத்தில் பொது மக்கள் அமைதியை பாதுகாக்கும்  பொருட்டு அனுசரிக்கு நடவடிக்கைகளுக்கு காவல் அலுவலர்கள் என்று பெயர்
 • கிராம நிர்வாக அலுவலர்கள், காவல் துறை அலுவலர்களுக்கு கீழ்கண்ட நடவடிக்கைளில் உதவி செய்ய சட்டப்படி கடமை பட்டவர் ஆவார்
 • காவல் துறை கிராமத்தில் யாதொரு குற்றமும் நடவாதபடி தடுக்கும் போதும்.
 • மறியல், ஊர்வலங்கள், பொது அமைதிக்கு பங்கள் விளைவிக்கும் போதும் சாதிச் சண்டைகள் இவைகளின் போதும், வாரண்டுகளையும் சோதனை வாரண்டுகளை நிறை வேற்றும் போதும், வாரண்டுகளையும் சோதனை வாரண்டுகளை நிறை வேற்றும் போதும்.
 • பொது அனுமதிக்கு எதிராக எழும் சட்ட – ஒழுங்கு பிரச்சினைகள் போதும் கிராம நிர்வாக அலுவலர் காவல் துறையினருக்கு உதவி செய்தல் வேண்டும்.

2.  ரயில்வே துறையினருக்கு உதவுதல்

 • ரயில்வே தண்டவாளங்களுக்கு சேதம் அல்லது ரயில்வே சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் போதும்.
 • ரயில்வே சம்பந்தமான குற்றம் செய்யும் நபர்களை கண்டுப் பிடிப்பதிலும்.
 • ரயில்வே நிலையங்களில் ஆக்கிரமிப்புகள், தடுப்புகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் போதும்.
 • சட்டமும், ஓழுங்கும் பிரச்சினைகள், அரசியல் கட்சிகள் அறிவித்து நடத்தும் போராட்டம், கடையடைப்பு, பந்த்  போதும், ரயில்வே தண்டவாளங்களுக்கு கிராம உதவியாளர்களின் பாதுகாப்புப் பணிகளின் போதும்.
 • போன்ற பணிகளின் போது கிராம எல்லைக்குட்பட்ட ரயில்வே துறையினருக்கு கிராம அலுவலர் உதவி வேண்டும்.

3.  ஆயுதம்

 • கிராமத்தில் வெடிபொருள் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டம் கீழ் உரிமை பெற்றவர்கள் தங்களுடைய உரிமைகளும் () உரிமங்களையும் புதுபித்து வருகிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.
 • சட்டத்திற்கு புறம்பாக வெடிகுண்டு/வெடிபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது வெடிபொருள் உரிம்ம் பெற்ற இடங்களுக்கருகில், வெடி விபத்து ஏற்பட வாய்ப்பிருந்தாலோ அதனை உடனே வட்டாட்சியருக்கும், காவல்  துறையினருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

விபத்துக்கள்

 • ஆகாய விமானம், ஹெலிகாப்டர் இறங்கி விட்டாலோ அல்லது விழுந்து விட்டாலோ உடனே வட்டாட்சியருக்கும் ,காவல் துறையினருக்கும் கிராம நிர்வாக அலுவலர் தகவல் தெரிவிக்க வேண்டும்.
 • சாலை விபத்து, கட்டிடங்கள் இடிந்து விபத்துக்கள் மற்றும் வெடி விபத்துக்கள் மூலம் உயிர் சேதம் ஏற்பட்டால், காயம் பட்டவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

 

Click Here to Download