டி என்பி எஸ்சி – குரூப் – IV என் கனவு….”

Deal Score+6

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

டி என்பிஎஸ்சி –  குரூப் – IV  என் கனவு….” 

 

டி என்பிஎஸ்சி –  குரூப் – IV  என் கனவு….” 

2016-10-27_13-29-17

 

 • டிஎன்பிஎஸ்சி (Group-IV) தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டுமென முடிவு செய்தவுடன் முதலில் மனநிலையை அதற்கேற்றவாறு உருவாக்கி விடவேண்டும்.

 

 • பொதுவாக குரூப் – 4 தேர்வினை 13 லட்சம் மாணவர்கள் வரை எழுதுவதற்கு வாய்ப்புண்டு. இவ்வளவுபேர் எழுதக்கூடிய தேர்வில் நமக்கெல்லாம் வேலை கிடைக்கவா போகிறது? என்று தான் நமது மனதில் முதலில் நினைக்கிறது. இம்மாதிரி எண்ணங்கள் தான் நமக்கு முதல் எதிரி.

 

 • இடையூறு… தடைக்கல்….  எல்லாமே. இந்த எதிர்மறை எண்ணத்தை போக்கிட அழுத்தம் திருத்தமாக ஆணியடித்தாற் போல் சொல்கிறேன் நாம் நினைக்க வேண்டியது என்னவென்றால்…… எத்தனை லட்சம் பேர் இந்தத் தேர்வினை எழுதினாலும் நாம் நன்கு எழுதினால் நமக்கு நிச்சயம் வேலை கிடைக்கும் என்பது தான் நூற்றுக்கு நூறு உண்மை.

 

 • குறுகிய நாட்கள் கடந்தவுடன் 5 மணி நேரம் என்பதை படிப்படியாக அதிகரித்து 8 to 12 மணிநேரம் வரை தினசரி படியுங்கள்.

 

 • இதனை ஒரு தவமாக நினைத்து தினசரி 8 to 12 மணி நேரம் படித்து முடியுங்கள்.

 

 • இப்போது நீங்கள் சொல்வீர்கள் நான் ஜெயித்து விடுவேன் என்று மந்திரச்சாவி உங்கள் வசப்பட்டு விடும்.

 

 • தற்போதைய கேள்விகள், கடுமையாகவும்,  யோசித்து விடையளிக்கக்கூடிய வகையிலும் அமைகிறது. எனவே,  இத்தகைய சூழலில், தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள் பாடத்திட்டத்தைப் புரிந்து படித்து பல மாதிரித் தேர்வுகளை எழுத வேண்டும்.

 

 • உங்களின் மனோபாவம் (Attitude), தன்னம்பிக்கை (Self-confidence) ஆகியவற்றை வளர்த்துக்கொண்டு, அரசு பணியில் சேருவேன் என்ற உறுதியை எடுத்தால் வெற்றி உறுதி. நிமிர்ந்து பாருங்கள்.. உங்கள் எதிரிலேயே மகத்தான வெற்றி தெரிகிறது!

 

 • உங்களை எப்போது பார்த்தாலும் மட்டம் தட்டி ஏளனமாக எள்ளி நகையாடும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் பேசுவதை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.

 

 • நாம் இந்த ஜென்மத்தில் பிறந்திருப்பது ஒரு தடவை தான். இப்பிறவியில் உயர்ந்த நிலையில் வாழ வேண்டும் என்பதை ஒவ்வொரு நாளும் இரண்டு நிமிடமாவது ‪அழுத்தமாக நினையுங்கள்.

 

 • *இப்போது நல்ல முயற்சி செய்யத் தவறிவிட்டால் இப்பிறவி முழுவதும்* *கஷ்டப்படவேண்டியிருக்கும் என்பதை மனதில் வையுங்கள்*.

 

தேர்விற்கு செல்லும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை

 

 • தேர்விற்கு முன்பு புதிதாக ஏதும் படிக்க முயற்சிக்க வேண்டாம். ஏற்கனவே படித்த பாடங்களை நன்கு நினைவுப்படுத்திக் கொண்டாலே போதுமானது.

 

 • தேர்வு மையத்தினை தேர்வு நாளுக்கு முன்பே சென்று அறிந்து வர வேண்டும். ஏனெனில் தேர்வு நாளன்று தேர்வு மையத்தினை தேடுவதால் ஏற்படும் பதற்றத்தை தவிர்க்கலாம்.

 

 • தேர்விற்கு தங்களுக்கு பழக்கப்பட்ட பந்துமுனை (பால் பாயிண்ட்) பேனாக்களை தேர்வு செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக பந்துமுனை போனாவின் முனையானது கூர்மையாக இல்லாமல் தட்டையாக உள்ளவாறு வாங்கிக் கொள்ள வேண்டும. ஏனெனில் கூர்மையான பேனாவினால் விடையினை குறிக்கும் பொழுது விடைத்தாளில் சேதமடைய வாய்ப்புள்ளது.

 

 • தேர்வு நுழைவுச்சீட்டினை பதிவிற்கும் செய்யும் பொழுது புகைப்படம் இல்லையெனில் தேர்வுக்கு செல்லும் பொழுது நுழைவுச்சீட்டுடன் இரண்டு புகைப்படங்களையும் சேர்த்து எடுத்துச் செல்ல வேண்டும்.

 

 • தேர்வுக்கு முதல் நாள் குறைந்தது 8 மனிநேரம் உறக்கம் அவசியம் என்பதால் இரவு உணவை விரைவாக அருந்திவிட்டு காலம் தாழ்ந்தால் நேரத்துடன் உறங்க செல்ல வேண்டும்.

 

 • தேர்விற்கு தேவையான பேனாக்கள் மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டினை ஞாபகமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

 

தேர்வு நாளன்று

 

 • தேர்வு நாளன்று காலை சிற்றுண்டியை அருந்திவிட்டு செல்வது அவசயமாகும்.

 

 • தேர்வு அறைக்கு செல்லும் பொழுது உடன் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்வது அவசியம்.

 

 • அரைமணி நேரம் முன்னதாகவே தேர்வு மையத்தில் இருக்க வேண்டும்.

 

 • தேர்வு அறையினுள் அறை மேற்பார்வையாளர் விளைத்தளினை அளித்தவுடன் தங்கள், பெயர், பதிவு எண், தேர்வின் பெயர், கையொப்பம் ஆகிய பகுதிகளை நிதானமாக பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

 

 • வினாத்தாளினை பெற்றவுடன், வினாத்தாளின் பக்கங்கள் மற்றும் கேள்வி எண்கள் சரியாக உள்ளதா என்பதை சோதித்துக் கொள்ளவும், ஏனெனில் ஏதேனும் குறைபாடு இருப்பின் உடனே அறை மேற்பார்வையாளரிடம் தெரிவித்து வேறு வினாத்தாளினை பெற இயலும், வினாத்தாளில் உள்ள வரிசை எண்ணை விடைத்தாளில் அளிக்கப்பட்டுள்ள தகுந்த இடத்தில் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

 

 • விடைத்தாளினை பூர்த்தி செய்தபின், உங்களுக்கு நன்றாக படித்த பாடப்பிரிவுகளில் சிறந்தவராக இருந்தால் பொதுத்தமிழ் கேள்விகளுக்கு முதலில் விளையளிக்க தொடங்கலாம் அல்லது அறிவு கூர்மை மற்றும் திறனறிதலில் சிறப்பானவராக இருந்தால் அந்த வினாக்களில் இருந்து பதிலளிக்க தொடங்கலாம்.

 

 • குழப்பமான வினாக்களுக்கு உடனே பதில் அளிக்காமல் அடுத்தவினாவிற்கு பதில் அளிக்க முயற்சி செய்ய வேண்டும், ஏனெனில் முந்தைய குழப்பமான வினாவிற்கான விடை பின்பு வரும் கேள்விகளை படிக்கும் பொழுது உங்கள் நினைவிற்கு வர வாய்ப்புள்ளது.

 

 • வினாவினை படித்து வினாவிற்கான விடையை உடனே விடைத்தாளில் குறித்து விட வேண்டும். கடைசியாக குறிக்கும் பழக்கம் ஆபத்தானது.  ஏனெனில் விடைத்தாளில் விடையினை குறிப்பதற்காக போதுமான கால அவகாசம் இறுதியில் இல்லாமல் போய்விடும்.

 

 • கேள்விகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் கேட்கப்படும் தமிழ் வழிக்கேள்வியில் ஏதேனும் சந்தேகமோ அல்லது பிழையாக இருப்பதாக உணர்ந்தால் ஆங்கில வழி கேள்வியினை படித்து பின்பு விடையளிக்க வேண்டும். ஏனெனில் ஆங்கில வழியில் கேட்கப்பட்டுள்ள கேள்வி பதிலே இறுதியானது.

 

 • நன்கு பயிற்சிபெற்று தேர்விற்குத் தயாரான நபர்கள் மேற்சொன்ன குறிப்புகளை பின்பற்றினால் தேர்வில் வெற்றி பெறுவது உறுதி.

 

 • தேர்வில் வெற்றி பெற்று நேர்மையான அலுவலராக வலம் வர maanavan team சார்பாக வாழ்த்துகிறோம்

 

 • எல்லாரும் ஏங்குவது ஒரே ஒரு வெற்றிக்குத்தான்.

 

 • அந்த வெற்றியை நோக்கி ஆர்வம் கொண்டு பீடு நடை போடுங்கள்.

 

 • வெற்றியை அடையும் வரை அலுப்பில்லை…. சளைப்பில்லை…… களைப்பில்லை…. காரியத்தில் கண்ணாயிருங்கள்.

 

 • உங்களுக்கு ஒர் அரசுப்பணி காத்திருக்கிறது.

 

 • தபால்காரர் உங்களது நியமன ஆணையினை (Appointment Order) உங்களை தேடிக்கொண்டு வரும் நாளை எதிர்நோக்குங்கள்.

 

 • மீண்டும் சொல்கிறேன் நம்பிக்கைதான் வாழ்க்கை.

 

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களுடன் மாணவன்

 

[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]