நீங்களும் குரூப்-2 அதிகாரி ஆகலாம்

நீங்களும் குரூப்-2 அதிகாரி ஆகலாம்

ஜெ.கு.லிஸ்பன்குமார்

 

 • தமிழக அரசுப் பணியில் பல்வேறு துறைகளில் அதிகாரி அந்தஸ்திலான பணிகளில் சேர தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வு (நேர்காணல் பதவிகள்) அரியதொரு வாய்ப்பை வழங்குகிறது (உதவியாளர் உள்ளிட்ட நேர்காணல் இல்லாத பதவிகளுக்குத் தனியாக வேறொரு குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறது).

 

2016-08-06_10-38-08

 

யார் எழுதலாம்?

 

 • ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப் படிப்பு முடித்தவர்கள் குரூப்-2 தேர்வை எழுதலாம்.

 

வயது வரம்பு

 

 • பொதுப் பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், பொதுப் பிரிவு உள்பட அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு ஏதும் கிடையாது.
 • ஆனால், துணை வணிகவரி அதிகாரி பணிக்கு மட்டும் வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • கூடுதல் கல்வித் தகுதியாக பி.எல். முடித்திருந்தால் 2 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.
 • இதே வயது வரம்புத் தளர்வு, பொதுப் பிரிவினருக்கும் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு வயது வரம்பை 32 ஆக நிர்ணயித்துள்ளனர்.
 • மேலும், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத் திறனாளிகள்) பணிக்குப் பொதுப் பிரிவினர் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

 

காலியிடங்கள்

 

 • துணை வணிகவரி அதிகாரி,
 • சார்-பதிவாளர்,
 • சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி,
 • உதவி தொழிலாளர் ஆய்வாளர்,
 • இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (பொது),
 • இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்
 • லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர்,
 • டிஎன்பிஎஸ்சி உதவி பிரிவு அதிகாரி,
 • உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர்,
 • இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை தணிக்கை ஆய்வாளர்,
 • தொழில் கூட்டுறவு சங்க மேற்பார்வையாளர்,
 • கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வேளாண்மை விற்பனைத் துறை மேற்பார்வையாளர்,
 • கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர்,
 • பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2) என 18 விதமான பதவிகளில் காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட உள்ளன.

 

குரூப்-2 தேர்வானது,

 

 1. முதல்நிலைத் தேர்வு,
 2. முதன்மைத் தேர்வு,
 3. நேர்காணல் என மூன்று நிலைகளை உள்ளடக்கியது. முதல்நிலைத் தேர்வை வடிகட்டும் தேர்வு என்று சொல்லலாம்.

 

 • “ஒரு காலியிடத்துக்கு 10 பேர்” என்ற விகிதாச்சார அடிப்படையில் முதல்நிலைத் தேர்விலிருந்து முதன்மைத்தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

 

முதல்நிலைத் தேர்வு

 

 • முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு (75 கேள்விகள்), பகுத்தாராயும் திறன் (25 கேள்விகள்) பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.
 • அத்துடன் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 வினாக்கள் கேட்பார்கள். மொத்தம் 300 மதிப்பெண்கள்.

 

முதன்மைத் தேர்வு

 

 • இரண்டாம் கட்ட தேர்வான, முதன்மைத்தேர்வு விரிவாக விடை அளிக்கும் வகையில் அமைந்திருக்கும். இதற்கு 300 மதிப்பெண்கள்.

 

நேர்காணல்

 

 • நேர்முகத் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள்.
 • முதன்மைத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

 

விண்ணப்பிக்கும் முறை

 

 • முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட உள்ளது. இதற்கு tnpscexams.net என்ற முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
 • விண்ணப்பக் கட்டணம் ரூ. தேர்வுக் கட்டணம் ரூ.75. இதை நெட் பேங்கிங் மற்றும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக ஆன்லைனிலேயே செலுத்திவிடலாம்.
 • மேலும், இந்தியன் வங்கி கிளைகள் மற்றும் தபால் அலுவலகங்களில் கட்டணத்தைச் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 • தேர்வுமுறை, பொது அறிவு, பொதுத் தமிழ், பொது ஆங்கிலப் பாடங்களுக்கான பாடத்திட்டம் தொடர்பான விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (tnpsc.gov.in) விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

 

இட ஒதுக்கீடு

 

 • தமிழ்வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசுப் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில், குரூப்-2 தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்சக் கல்வித் தகுதியான பட்டப் படிப்பைத் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மொத்தமுள்ள காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும்.

 

முதலில் தெரிவி!

 

 • அதேபோல், வருவாய் உதவியாளர் பணியில் பெண்களுக்கான 30 சதவீத ஒதுக்கீட்டில், 10 சதவீதம் ஆதரவற்ற விதவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
 • பட்டப் படிப்பைத் தமிழ்வழியில் படித்தவர்களும், ஆதரவற்ற விதவைகளும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே இந்த விவரத்தைப் பதிவுசெய்துவிட வேண்டும்.
 • அவ்வாறு செய்யாமல் முதன்மைத் தேர்வு நேரத்திலோ நேர்முகத் தேர்வு சமயத்திலோ சொன்னால் தங்களுக்கான உரிமைகளைப் பெற முடியாது.

 

TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS GOVERNMENT EXAM
No Comments

Sorry, the comment form is closed at this time.