tnpsc group 1 exam

TNPSC:பிப்., 19ல் ‘குரூப் – 1’ தேர்வு

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for tnpsc group 1 image

 

  • துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளில், 85 இடங்களுக்கான, ‘குரூப் – 1′ தேர்வு, பிப்., 19ல் நடக்கும்’ என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

 

  • தமிழக அரசுத்துறையில், 29 துணை கலெக்டர்கள், 39 முதல் நிலை, டி.எஸ்.பி.,க்கள், எட்டு வணிக வரித்துறை உதவி கமிஷனர்கள், ஒரு மாவட்ட பதிவாளர், ஐந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் எட்டு மாவட்டங்களில், தீயணைப்பு அதிகாரி என, குரூப் – 1 பதவிகளில், 85 காலியிடங்களுக்கு, பிப்., 19ல், முதல் நிலை தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், ஆன்லைன் பதிவு துவங்கியுள்ளது; டிச., 12ல் முடிகிறது. விண்ணப்ப கட்டணத்தை, கிரடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம், ஆன்லைன் வங்கி கணக்கு மூலமும் செலுத்தலாம்.

 

  • கடைசி நாள் வரை காத்திருக்காமல், அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாளில், அதிகம் பேர் விண்ணப்பிக்கும் போது, ஆன்லைனில், தொழில்நுட்ப பிரச்னைகள் எழலாம். இதனால், விண்ணப்பங்களை கடைசி நாளில், சமர்ப்பிக்க முடியாமல் போனால், அதற்கு தேர்வாணையம் பொறுப்பாகாது.

 

  • இதற்கான தகுதி உட்பட, மேலும் விபரங்களை, 044 – 2533 2855, 2533 2833 மற்றும் 1800 425 1002 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.