TNPSC Exam Success Tips In Tamil

TNPSC தேர்வுகளில், ஜெயிக்கலாம் வாங்க

Review Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

 வணக்கம் நண்பர்களே !!!

  • TNPSC தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கை நம்முள் பலருக்கு இருக்கும். காரணம், இன்றைய சூழ்நிலை அப்படி .என்னதான் முட்டிமோதி கல்லூரியில் படித்தாலும், வேலை என்று ஒன்று கிடைப்பது பெரும்பாடாகவே உள்ளது .அதையும் தாண்டி கிடைக்கும் வேலையை செய்ய நம் மனம் ஒப்பிவில்லையாயினும் செய்தாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம்.
  • என் நண்பர்களுல் பலர் என்ஜினியரிங் முடித்துவிட்டு, ஒரு ITI மாணவன் செய்யும் வேலைக்கு விண்ணப்பித்து, 4000, 5000 சம்பளத்துடன் வேலைக்கு செல்கிறார்கள். MCA / MBA முடித்தவர்களின் நிலையோ அதைவிடக்கேவலம். வேறுவழியே இல்லாமல், மார்க்கெட்டிங் வேலையில் சேர்ந்து, மார்க்கெட்டில் கூவி விற்பதுபோல பொருள்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள் .
  • அத்தகைய நிலையில் இருக்கும் நண்பர்கள் , TNPSC தேர்வில் படித்து வெற்றிபெறவேண்டும் என்று நினைக்கிறார்கள். இன்னும் வேலை கிடைக்காமல், வீட்டில் சும்மா இருப்பதற்கு பதில் படிக்கலாமே என்ற எண்ணம் கொண்டவர்கள், இல்லத்தரசிகள் என்று பலரின் சிந்தனை TNPSC-ன் பக்கமே உள்ளது. அத்தகைய TNPSC தேர்வில் வெற்றிபெற, என்னால் முடிந்த சில ஆலோசனைகளை வழங்குகிறேன்.

 

qqq

 

  • அரசுவேலைதான் உங்களுக்குவேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருங்கள் . அதற்காக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கஷ்டப்பட்டு இஷ்டத்துடன் படிக்க ஆரம்பியுங்கள் .
  • சோம்பேறித்தனத்தை ஒழித்து மூட்டைக்கட்டுங்கள் வேலை கிடைத்த பின் , எப்படியும் தானாக அந்த சோம்பேறித்தனத்தை அனுபவித்துக்கொள்ளலாம் . நாளை படிக்கலாம் என்ற எண்ணத்துடன் இருப்பவர்கள் , எக்காலத்திலும் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்பதை மனதில் நிறுத்தி வையுங்கள் .
  • நேரத்தை வீணடிக்காதிர்கள் . உங்களுல் பலர் , குடும்பச்சூழ்நிலையின் காரணமாக , பல்வேறு இடங்களில் வேலை செய்துகொண்டிருப்பீர்கள் .உங்களுக்கு கிடைப்பது மிச்சில மணிநேரங்களாக இருக்கும் . அதை முடிந்தவரை வீணாக்காமல் , படிக்க ஆரம்பியுங்கள் . குடும்பம் முக்கியம்தான் . ஆனால் , அக்குடும்பத்தை காப்பாற்ற , நிலையான கௌளரவமான வேலை தேவை என்பதை மனதில்பதியவைத்துக்கொள்ளுங்கள் .
  • எந்த நேரத்திலும் ,எப்படிப்பட்ட மனநிலையிலும் உங்களின் முடிவில் இருந்து மாற்றிக்கொள்ளாதிர்கள் . ஒருமுறை முயற்சித்தேன் , இரண்டுமுறை முயற்சித்தேன் , எழுதிய தேர்வுகள் அனைத்தும் தோல்வியிலே முடிந்துவிட்டது என்று மனதை விட்டுவிடாதிர்கள் . தேர்வில் வெற்றிபெறுவதற்கும் ஒரு நேரம் அமையவேண்டும். அந்த பொன்னான நேரத்திற்காக காத்திருப்பதில் எவ்வித குற்றமுமில்லை .
  • உங்களின் நண்பன், மனைவி, கணவன், குழந்தை, பெற்றோர், உறவினர் என்று யார் என்ன சொன்னாலும், முயற்சிப்பதை விட்டுவிடாதிர்கள். இன்று வசைபாடுபவர்கள், நாளை உங்களுக்கு வேலை கிடைத்ததும், பல்லிளித்துக்கொண்டு நிற்பார்கள். முக்கியமாக, நண்பர்கள் மற்றும் உறவினர்களின் எகத்தாள பேச்சுகளை காதிலே ஏற்றிக்கொள்ளாதீர்கள்.
  • படிப்பதை, குருட்டு மனப்பாடம் செய்வதெல்லாம் கல்லூரி வரை வேண்டுமானால் பயணளிக்கலாம். ஆனால், TNPSC தேர்வுகளில் குருட்டு மனப்பாடம் என்பது, தன் கண்ணையே குருடாக்கிக்கொள்வது போன்றதுதான் . எனவே, முடிந்த வரை புரிந்து படிக்க முயற்சியுங்கள். (மண்டையில் ஏறமாட்டேங்குதுங்கனு சொல்றவங்க மனப்பாடம் பன்னிடுங்க. ஒரு சில டைம், அது கை கொடுக்கும் )
  • நாம் என்ன படிக்கவேண்டும் என்பதே தெரியாமல், 6 முதல் 12 வரை உள்ள அனைத்து புத்தகங்களையும் படிக்கவேண்டும் என்ற நினைப்பில் படிக்க ஆரம்பித்தீர்கள் என்றால், 6க்கு அடுத்து 7 ஆம் வகுப்பு புத்தகங்களைக்கூட உங்களால் படிக்க முடியாது. தேர்வுக்கான அறிவிப்பு வரும்போது, சிலபஸ் வெளியிடுவார்கள் . அதில், என்னென்ன பாடங்கள் படிக்கவேண்டும் என்பதை குறிப்பிட்டிருப்பார்கள் .அந்த CHAPTER-களை மட்டும் படித்தால் போதும் . இல்லையேல் ‘வீழலுக்கு இறைத்த நீராகி விடும் ’
  • படிக்கமுடியவில்லை, வீட்டில் பிரச்சினை, கணக்கு கடினம், எதை படிப்பது, எப்படி படிப்பது என்ற கேள்விகளால் மனம் குழப்பத்தில் சிக்கிக்கொள்ளும் . இந்த பதிவின் இறுதியில், தமிழ் பாடங்களை எப்படி படிக்கலாம் என்பதை, அனுபவத்திலிருந்து தெரிவிக்கிறேன். அதன்படி முயற்சி செய்துபாருங்கள்.
  • மணமாகாத தோழர் மற்றும் தோழிகளுக்கு, மனது அலைபாய்கிறது, காதல் பிரச்சினை, குடும்ப சூழ்நிலை, நண்பர்களிடையே பிரச்சினை என்பதெல்லாம், நாம் படிக்கும் போது கண்டிப்பாக நம் மனதை அலைபாய வைத்துவிடும் .தேர்வில் வெற்றிபெறும்வரை காதல்களுக்கு சஸ்பெண்ட் ஆர்டரும் , நண்பர்களுக்கு மெமோவும் கொடுத்துவிடுங்கள். குடும்ப பிரச்சினைகளை மனதில் இருந்து ட்ரான்ஸ்பர் செய்துவிடுங்கள். இதைச்செய்தால், உங்களுக்கு அப்பாய்ன்ட்மென்ட் காத்திருக்கும் .
  • உங்கள் நண்பர்களுடன் அமர்ந்து குழுவாகப் படிக்கும்போது, அவன் இதைப்படித்துவிட்டாயா? அதைப்படித்துவிட்டாயா என்று கேள்வி கேட்டால், அவனை உங்கள் லிஸ்டில் இருந்து தூக்கிவிடுங்கள். நாம் படிப்பதையும் கெடுத்து, நம்மை குழப்பத்தில் ஆழ்த்திவிடுவார்கள்
  • சரி !!! தமிழ்பாடத்தை எப்படி படிப்பது என்று பார்க்கலாம். மேலே கூறியவற்றை சரியானபடி பின்பற்ற முடியும் என்பவர்கள், கீழே தொடர்ந்து படிக்கலாம் . இல்லையேல் ‘ஒன் ஸ்டெப் பேக் மேன்’ தான் .

தமிழ்ப்பாடங்களை படிக்கும் முறை

  • 6- 12 வரை உள்ள மனப்பாட திருக்குறள்களை தினம் இரண்டு என்ற வீதம் இப்போதிலிருந்து (இந்த பதிவின் தேதியிலிருந்து) படியுங்கள் . ஒவ்வொரு குறளின் விளக்கமும், அர்த்தமும் புரிந்து கொண்டு படியுங்கள் . காலையில் படிக்கும் குறள்களை, மாலையில் மீண்டும் ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள் .
  • வாரம் இரு செய்யுள் பாடல்களை (எ.கா, சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானுறு ETC) மனப்பாடம் செய்யுங்கள். காப்பியங்கள் வருகின்றன எனில், பாடப்பகுதியில் இடம்பெற்ற கதையையும், கதை நிகழும் விவரத்தையும், கண்டிப்பாக சேர்த்து மனப்பாடம் செய்துகொள்ளுங்கள் . இதையும் இருவேளையும் படிக்கவேண்டும்
  • அடுத்து, செய்யுளில் உள்ள நூல்களின் பெருமைகள் மற்றும் நூலாசிரியரின் சிறப்புகளையும் சேர்த்து செய்யுள் மனப்பாடம் செய்யும்போதே படித்துக்கொள்ளுங்கள்.
  • முதலில் 6 ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் தொடங்கி வரிசையாக படியுங்கள் .
  • மிச்சம் உள்ள 5 நாட்களில், தினம் ஒரு உரைநடைப் பாடம் என்ற கணக்கில் படியுங்கள். ஒரு பாடம் படித்தாலும், தெளிவாக படிக்கவும்
  • இவையனைத்துமே மாத்திரை சாப்பிடுவது போல், தினமும் காலை ஒருவேளையும், மாலை ஒருவேளையுமாய் படிக்கவேண்டும் . இவ்வாறு படிக்கும்போது, குழப்பங்கள், சந்தேகங்கள் போன்றவை இருக்காது .
  • இதில் இலக்கியம் மற்றும் உரைநடையைப் பார்த்தோம் அடுத்தபதிவில், இலக்கணம் எவ்வாறு படிப்பது என்பதனை பார்க்கலாம் .

தமிழ் இலக்கணம் படிக்கலாம் வாங்க

  • சென்ற பதிவில் தமிழ் இலக்கியம் மற்றும் உரைநடை ஆகியவற்றை எப்படி படிப்பது என்று பார்த்தோம். இப்போது தமிழ் இலக்கணத்தை எப்படி கரைத்துக் குடிப்பது என்பதைக் காணலாம் .
  • கிட்டத்தட்ட தமிழ் இலக்கணமும், மனைவியும் ஒன்றே தான். புரிந்து கொண்டவனுக்கு வாழ்வளிக்கும். புரிந்து கொள்ள முடியாதவனுக்கு வாழ்வழியும் .
  • தமிழ் இலக்கணத்திற்கு நோட்ஸ் வேண்டும், எனக்கு அது புரியவில்லை, இது புரியவில்லை, ‘மா’ முன் நேர் னா என்ன? உயிரெழுத்துகள் வந்தா வல்லினம் மிகுமா மிகாதா னு உங்கள படுத்தி எடுக்கும் தமிழ் இலக்கணம் என்னைப் பொறுத்தவரை ஒரு 5 – ஆம் வகுப்பு மாணவன் போடும் கணக்குப் பாடங்களுக்குச் சமம் .
  • நண்பர்களுக்கு கீழ்க்கண்டவாறு தமிழ் இலக்கணம் குறித்த எண்ணங்கள் இருக்கலாம்

தமிழ் இலக்கணம் படிக்கும் முறைகள்

  •  முதலில், தமிழ் இலக்கணத்தைப் பொறுத்தவரை , சமச்சீருக்கு முந்தைய தமிழ் பாட புத்தகங்களான 6, 7, 8 ம் வகுப்பு புத்தகங்களை கையில் வைத்துக் கொள்ளுங்கள்
  • அந்த புத்தகங்களில் இலக்கண பகுதிகளை வரிசையே 6 ம் வகுப்பு, 7 ம் வகுப்பு, 8 ம் வகுப்பு என்ற மாத்திரத்தில் படியுங்கள்
  • ஒவ்வொன்றைப் படிக்கும் போதும், அதைப் பற்றிய முக்கிய குறிப்புகளை, ஒரு புது நோட்டில் எழுதிவைத்துக் கொள்ளுங்கள் .
  • எடுத்துக்காட்டுகள் மிக முக்கியம். ஒவ்வொரு எடுத்துக்காட்டு எழுதிய பின்பும், அதைப் போலவே நீங்களாகவே ஒரு எடுத்துக்காட்டை எழுத முனையுங்கள்.
  • இலக்கணத்தைப் பொறுத்தவரை, நீங்கள் ஆரம்பித்த பின்பு போர் அடித்தால் மூடிவைத்துவிட்டு சென்றுவிடுங்கள் . ஆனால் , சிறிது நேரத்திற்கு பின், மீண்டும் போர் அடித்தாலும் இலக்கணப் புத்தகத்தைத்தான் படிக்க வேண்டும். அப்போதுதான் என்ன காரணத்திற்காக நம்மால் படிக்கமுடியவில்லை என்பதனை உணர முடியும் புத்தகத்தை தொறந்தாலே போர் அடிக்குதுங்கனு யாராச்சும் சொன்னா வாழ்க்கை டர்ராயிடும் சார் )
  • இதற்கு இருவேளைகள் படிக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில், மாலை அல்லது காலை நேரத்தில் முயற்சித்துப்பாருங்கள் . ( தயவு செய்து மதிய நேரத்தில் கங்கணம் கட்டி படிப்பேன் என்று திரியாதீர்கள். அடிக்கும் வெயிலுக்கு, இப்போதெல்லாம் பவர்கட் ஆகாததால் புத்தகம் உங்களுக்கு தலைமூட்டையாகிவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்)
  • சரியான முறையில் இதை நீங்கள் செய்தால், இன்னும் இரண்டு மாதங்களில் இலக்கணத்தை முடித்துவிடலாம் . அதன்பின் சமச்சீர் புத்தகங்களில் உள்ள இலக்கணங்களை ஒருமுறைப்பார்த்தாலே, தானாகவே உங்களுக்கு விளங்கும் .எவ்வளவுக்கெவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்களோ , அவ்வளவு வேகமாகவும் எளிமையாகவும் முடித்துவிடலாம்
  • அடுத்து ,இந்த தமிழ் இலக்கணத்தை சார்ந்துதான் 100 க்கு 30 முதல் 40 கேள்விகள் வருகின்றன. அது குறித்து அறிய, பழைய வினாத்தாள்களை எடுத்துப்பாருங்கள். பரிட்சைக்கு ஒருவாரம் முன் பார்த்தால் போதும் என்பவர்கள், அதற்கு முன் தமிழ் இலக்கணத்தை படிக்காமல் இருந்திருந்தால் , தயவுசெய்து பரிட்சைக்கும் முன் எடுத்து படிக்கவேண்டாம் என்று அறிவுருத்தப்படுகிறது. அதையும் மீறி பார்த்தால், பல குழப்பங்கள் எழுந்து ,நீங்கள் அரைகுறையாக பிற பாடங்களை மேய்ந்து மனப்பாடம் செய்தவையும் குழம்பிப்போக வாய்ப்புகள் உண்டு .

 

TAMIL VIDEOS MATHS VIDEOS DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS GOVERNMENT EXAM