Study Materials

TNPSC Compounds Physics Study Materials

சேர்மங்கள்சோடியம் பை கார்பனேட் (ரொட்டிச் சோடா) , சோடியம் கார்பனேட் , சோடியம் குளோரைடு , சேர்மங்களின் பெயர்களும், வாய்பாடுகளும்

More Topics Join Course

சேர்மங்கள்

சேர்மங்கள்:

  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட எடை விகிதத்தில் வேதியியல் முறையில் இணைந்து சேர்மங்கள் உருவாகின்றன.

சில பொதுவான சேர்மங்கள்:

சேர்மம் வாய்ப்பாடு பயன்கள்
அம்மோனியா NH3 செயற்கை உரம் தயாரிப்பில் பயன்படுகிறது.
கால்சியம் கார்பனேட் CaCo3 பற்பசை தயாரிப்பதில் பயன்படுகிறது.
கார்பன்டை ஆக்சைடு CO2 புவியின் வெப்பநிலையை இவ்வாயு கட்டுப்படுத்துகிறது.  தாவரங்கள் உயிர் வாழ்வதற்கும், ஒளிச்சேர்க்கை செய்வதற்கும் பயன்படுகிறது.
மீத்தேன் CH4 இயற்கை வாயுவில் முக்கிய பொருளாக பயன்படுகிறது.
சோடியம் குளோரைடு NaCl சாதாரண உப்பாக உணவுப் பொருளில் பயன்படுகிறது.  மனித இரத்தத்தில் மற்றும் உயிர்ச் செல்களில் காணப்படுகறிது.  அவற்றின் முறையான இயக்கத்திற்கு அவசியமாகிறது.
சோடியம் ஹைட்ராக்ஸைடு NaOH இது எரிசோடா எனப்படுகிறது.  இது சோப்பு தயாரிக்கப் பயன்படுகிறது.
நீர் H2O புவியின் பரப்பில் 71% நீராக உள்ளது.  எல்லா உயிரினங்களில் உடலில் பகுதிப் பொருளாக நீா் உள்ளது.  97% நீர் கடலில் உள்ளது.  கடல்நீரில் தனிமங்களும் சேர்மங்களும் உள்ளன.

 

சில சேர்மங்களின் பெயர்களும், வாய்பாடுகளும்

பொதுப் பெயர் வேதிப் பெயர் வாய்ப்பாடு
மண் சிலிக்கன் டை ஆக்ஸைடு SiO2
நீர் ஹைட்ரஜன் ஆக்ஸைடு  H2O
சலவைச் சோடா சோடியம் கார்பனேட் Na2CO3
ரொட்டிச் சோடா சோடியம் பை கார்பனேட் NaHCO3
சோப்பு சோடியம் பால்மிடேட் C15H31CooNa
சர்க்கரை சுக்ரோஸ் C12H22O11
சலவைத் தூள் கால்சியம் ஆக்ஸிகுளோரைடு CaOCl2
சாதாரண உப்பு சோடியம் குளோரைடு Nacl
P.V.C பிளாஸ்டிக் பாலிவினைல் குளோரைடு (-CH2-CH-)n – Cl

 

  • ஹைட்ரஜன் –எரியும் வாயு
    • ஆக்ஸிஜன் – எரிவதற்கு துணைபுரியும் வாயு
    • நீர் – தீயணைக்கும் திரவம்
  • சலவைத் தூள் : சலவைத் தொழிலிலும், ஆக்ஸிஜனேற்றியாகவும், கிருமிநாசியாகவும், நுண்ணுயிரிக் கொல்லியாகவும் பயன்படுகிறது.
  • சலவைத் தூள் குளோரோஃபாம், அயோடோஃபாம் போன்ற சேர்மங்களைத் தயாரிக்கவும், குடிநீர் சுத்திகரிப்பிலும் பயன்படுகிறது.
  • பிளாஸ்டிக் : மின்சாரப் பொருட்கள், மேஜை, நாற்காலிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், சிறப்பு வகைப் பெயின்டுகள், கோந்து (பசை), ப்ளக், ஸ்விட்ச், வானொலி மற்றும் டி.வி., கேபினட் போன்ற மின்சாரக் கருவிகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

PDF Download

Compounds – Sodium bag carbonate (baking soda), Sodium carbonate, Sodium chloride, Names and terms of compounds

Join Course

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker