மின் வாரிய பணிகளுக்கு எழுத்து தேர்வு : ‘ஹால் டிக்கெட்’ வெளியீடு எப்போது?

Deal Score0

  • மின் வாரியத்தில், 1,900 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு, வரும், 27ம் தேதி நடக்க உள்ள நிலையில், ‘ஹால் டிக்கெட்’ வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
    மின் வாரியத்தில், 250 இளநிலை உதவியாளர்கள் – கணக்கு; 25 சுருக்கெழுத்தர்கள்; 100 ரசாயன பரிசோதகர்கள்; 900 கள உதவியாளர்கள்; 100 இளநிலை உதவியாளர்கள் – நிர்வாகம்; 500 தொழில் நுட்ப உதவியாளர்கள் – எலக்ட்ரிகல்; 25 தொழில் நுட்ப உதவியாளர்கள் – மெக்கானிக்கல் என, மொத்தம், 1,900 பதவிகளை எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்ப, முடிவு செய்யப்பட்டது.

 

  • தேர்தல் நடத்தை விதி : ஏப்ரல், மே மாதங்களில், அண்ணா பல்கலை மூலம், எழுத்து தேர்வு நடத்தப்பட இருந்தது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நடத்தை விதி அமலில் இருந்ததால், எழுத்து தேர்வு, ஆக., 27, 28ம் தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கு, மூன்று வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், இதுவரை, ஹால் டிக்கெட் வெளியிடப்படவில்லை.

 

  • இதுகுறித்து, தேர்வுக்கு விண்ணப் பித்தோர் கூறியதாவது: தேர்வுக்கு, சில தினங்கள் இருக்கும் போது தான், இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. சரியான விபரங்களை குறிப்பிட்டு இருந்தும், ஹால் டிக்கெட் கிடைப்பதில்லை; அப்படியே கிடைத்தாலும், பிழைகள் உள்ளன.

 

  • ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் : இதற்கு தீர்வு காண, அதிகாரிகளை தொடர்பு கொள்வதற்குள், தேர்வே முடிந்து விடுகிறது; எனவே, ஹால் டிக்கெட்டை விரைவாக வெளியிட வேண்டும். அப்போது தான், அதில் தவறு இருந்தால், முன்கூட்டியே சரி செய்ய முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஒரு லட்சம் பேர், தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். தேர்வை நடத்தும் அண்ணா பல்கலையிடம் இருந்து, அறிவிப்பு வந்ததும், ஹால் டிக்கெட் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படும்’ என்றார்.

 

  • இயக்குனர்கள் பதவி 100 நாட்களாக காலி : தமிழ்நாடு மின் வாரியத்தில், மின் உற்பத்தி இயக்குனராக இருந்த சிவபிரகாசம், மின் திட்ட இயக்குனராக இருந்த சம்பத், கடந்த ஏப்., மாதம் ஓய்வு பெற்றனர். இதுவரை, அந்த பதவிகளுக்கு, யாரையும் நியமிக்கவில்லை.

 

  • இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது: இப்பதவிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒரு நாள் கூட, காலியாக இருக்கக் கூடாது. இப்பதவிக்கு நியமிக்க வேண்டிய அதிகாரிகளின் பட்டியல், தமிழக அரசுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால், 100 நாட்களை கடந்தும், அதிகாரிகள் நியமிக்கப்படாமல் இருப்பதால், பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
GOVERNMENT EXAM