தனிம வரிசை அட்டவணையும் எலக்ட்ரான் கட்டமைப்பும்

தனிம வரிசை அட்டவணையும் எலக்ட்ரான் கட்டமைப்பும்

  • தொகுதிகள் I-ல் இருந்து பூஜ்யம் வரை உள்ள தனிமங்கள் பொதுவாக முதன்மைத் தொகுதி தனிமங்கள் என அழைக்கப்படுகின்றன.
  • தனிமங்களின் பண்புகள், அட்டவணையில் அவற்றின் இருப்பிடம், எலக்ட்ரான் கட்டமைப்பு ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
  • தொகுதி II-ல் உள்ள தனிமங்கள் 2 வெளி எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளன.
  • மெக்னீசியம் அணு, அதன் 3-வது வெளிக்கூட்டில் இரண்டு எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளது. எனவே இது தொதுதி II-ல் வைக்கப்பட்டுள்ளன.
  • ஆர்கான் வெளிக்கூட்டில் நிலைப்பு அமைப்பான எட்டு எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளது. எனவே அது பூஜ்யத் தொகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
  • ஒரு பொட்டாசியம் அணு அதன் வெளிக்கூட்டில் ஒரு எலக்ட்ரானைப் பெற்றுள்ளது. எனவே, தொகுதி I-ல் தொடர் 4-ல் வைக்கப்படுள்ளது.
  • ஒரு தனிமத்தின் அணுவின் வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரான்களே அதன் வேதிப் பண்புக்குக் காரணமாக அமைகின்றன. இதனால் தான் ஒரு தொகுதியில் உள்ள தனிமங்கள் அனைத்தும் பண்புகளில் ஒத்திருக்கின்றன.
  • அரிய வாயுக்கள் மிகவும் நிலைப்புத் தன்மையுடைய எலக்ட்ரான் அமைப்பினைப் பெற்றிருக்கின்றன. எனவே வினைதிறன் அற்றவை.
  • தனிம வரிசை அட்டவனையில் ஒர் தொகுதியில் கீழ்நோக்கிச் சென்றால் அணுக்களின் உருவ அளவு அதிகரிக்கிறது. தொடரில் வலது நோக்கி நகர்ந்தால் உருவ அளவு குறைகிறது.
  • கீழ்நோக்கி தொகுதிகளில் நகர்ந்தாலும், தொடரில் இடது நோக்கி நகர்ந்தாலும் தனிமங்களின் உலோகப் பண்புகள் அதிகரிக்கின்றன.
  • உலோகத் தொகுதியில் கீழ்நோக்கி நகர்ந்தால் உலோகங்களின் வினைதிறன் அதிகமாகிறது.
  • தொகுதி I -ன் அடிப்படையில் உள்ள தனிமம் மிகவும் வினைதிறன் உடைய தனிமம் ஆகும்.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.