Thooimai India Thittam

தூய்மை இந்தியா திட்டமாகும்.

Review Score+74

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 • இந்தியா போன்ற பரந்த மக்கள்தொகை கொண்ட நாட்டில் சுத்தமென்பது மிகவும் அடிப்படையான ஒன்றாகும். இதை குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப் பட்ட திட்டமே “ஸ்வாச் பாரத் அபியான்’ எனும் தூய்மை இந்தியா திட்டமாகும்.
 • இந்திய நகரங்களுக்கு தூய்மையான தோற்றத்தை அளிப்பது
 • மட்டுமின்றி,நாட்டுமக்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை வளர்த்தெடுப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

 

cleanindiamodi_01

 

 • தூய்மையான இந்தியா என்பது நமது தேசத்தந்தை காந்தியின் கனவாகும்.
  ஆங்கில அரசுக்கு எதிராகப் போராடுகையில், அவரது தாரக மந்திரமாக இருந்த வாக்கியம்-
 • சுதந்திரத்தைவிடவும் மிக முக்கியமானது சுத்தம் என்பதாகும்.
 • மக்கள்தொகை வெகுவாக அதிகரித்திருக்கும் இன்றைய சூழலிலில் அவரது வாக்கியம் இன்னும் பொருத்தமான உண்மையாக மாறியிருக்கிறது.
 • இந்தியா சுதந்திரம் பெற்று அறுபதுஆண்டுகளுக்கு மேலாகியும், நாம் நாட்டையும் நகரங்களையும் குறைந்தபட்ச சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன்வைக்க போராடி வருகிறோம்.
 • இதனை மனதில்கொண்டே பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, காந்தியின் 145-வது பிறந்த நாளான 2014, அக்டோபர் 2-ல் இத்திட்டத்தை தொடங்கிவைத்தார். காந்தியின் 150-ஆவது பிறந்தநாளான 2019, அக்டோபர் 2-க்குள் இத்திட்டத்தின் குறிக்கோள் எட்டப்படவேண்டும்.
 • எனினும் இத்திட்டம் வெறும் ஐந்தாண்டுமட்டுமல்ல, நாட்டின் அனைத்து மூலைகளும் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் எட்டும்வரை தொடரும்.

 

இந்தியாவில் திட்டத்தின் தேவை

 

 • இந்தியாவின் பல பகுதிகளில் திறந் தவெளிகளில் மலஜலம் கழிக்கப்படுகிறது. அது உயிருக்கே தீங்குவிளைவிக்கும் நோய்கள்வர காரணமாகிறது. அனைவருக்கும் கழிப்பிட வசதி செய்துதந்து திறந்தவெளியில் மலஜலம் கழிப்பதைத் தவிர்க்கவேண்டும்.
 • பல இடங்களில் கழிப்பறை வசதியிருந்தாலும் அவை ஆரோக்கியமில்லாத பழம்பாணி கழிப்பறைகள். அவை நவீன நீருற்றி அகற்றும் கழிப்பறைகளாக மாற்றப்படவேண்டும்.
 • நாட்டின் பல பகுதிகளில் மனிதர்களே கழிவகற்றும் அவலம் தொடர்கிறது. இது உடனடியாகத் தடைசெய்யப்படவேண்டும்.
 • நாட்டின் பல பகுதிகளில் கழிவு மேலாண்மை பழமையான முறையில் மேற்கொள்ளப்படுகிறது. அது அப்பகுதி யிலுள்ள அனைவருக்குமே தீங்கு பயப்ப தாகும்.
 • திடக்கழிவு மேலாண்மை, மறுசுழற்சி, அறிவியல்ரீதியாக ஆரோக்கியமாக கழிவை அகற்றுதலே தற்போதைய தேவையாகும்.
 • தனிப்பட்ட சுகாதாரம் அத்தியாவசிய மான ஒன்றாகும். எனவே சுத்தம், சுகாதாரம் குறித்த உணர்வை ஒவ்வொரு இந்தியனிடமும் தோற்றுவிப்பதற்கான அடிமட்ட அளவிலான முயற்சிகள் தேவை.
 • கிராமப்புற மக்களிடம் நவீன வாழ்க்கை முறை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே தூய்மை இந்தியா திட்டம் வெற்றிபெற முறையான சுகாதாரம் மற்றும் சுத்தமான சுற்றுப்புறம் இதனால் விளையும் நன்மைகள் குறித்து தகவல்கள் அவர்களது உள்ளங்களைத் தொடவேண்டும்.
 • இத்திட்டம் அரசாங்கம், மக்கள் என்ற இருதரப்போடு மட்டுமின்றி தனியாரின் பங்கேற்பும் அவசியம். நவீன தொழில் நுட்பத்தின் துணையோடு சுகாதார மறுமலர்ச்சி ஏற்பட வேண்டுமெனில்தனியார் பங்கேற்பும் தேவை.
 • பஞ்சாயத்து ராஜ், உள்ளூர் சமூகங்கள் போன்றவர்களின் பங்கேற்பும் இத்திட்டத்தின் வெற்றிக்குத் தேவை.

 

நகர்ப்புறங்களில் தூய்மை இந்தியா

 

 • நகர்ப்புறங்களில் தனிநபர் பயன்படுத்தும் நிலத்தின் அளவு குறைவு. அத்தோடு நீர்போன்ற மறுவள ஆதாரங்களும்குறைவு. எனவே நகரத்தில் சுற்றுச்சூழலானது சரியான கழிவு மேலாண்மையின் துணையுடன் நிர்வகிக்கப்படவேண்டும்.
 • சேரி போன்ற நகர்ப்புற பகுதிகளில் ஒவ்வொரு குடும்பமும் தனியே கழிவறை வசதியைக் கொண்டிருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது சிரமம். அத்தகைய இடங்களில் பொதுக் கழிவறைகளை அமைத்து அவற்றை திறமையாகக் கையாள்வது அவசியம்.
 • நகர்ப்புறங்களில் தூய்மை இந்தியா திட்டத்துக்காக கிட்டத்தட்ட ரூ 10,000 கோடிவரை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதி திடக்கழிவு மேலாண்மை, பொதுக் கழிப்பறை உருவாக்கம்,
 • பொதுமக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம், தனிநபர் கழிவறை கட்டுவதற்கான மான்யம் என்ற வகையில் செலவிடப்படும்.

 

கிராமப்புறங்களில் தூய்மை இந்தியா திட்டம்

 

 • நாட்டின் அனைத்து கிராமப் பகுதி களுக்கும் முறையான சுகாதார வசதி, கழிவு மேலாண்மையை உறுதிசெய்வதே கிராம தூய்மை இந்தியா திட்டத்தின் இலக்காகும்.
  கிராமப் பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான, வசதியான வாழ்வை உறுதிசெய்வது.
 • கிராமம் முழுமையும் சுகாதாரமாகப் பேணவும், ஒருவருக்கொருவர் சுற்றுச்சூழலை சுத்தமாகப் பேண உதவிக் கொள்ளவும் பயிற்றுவித்தல்.
 • நவீன, பலன்மிக்க சுகாதார தொழில் நுட்பத்தை நாட்டின் நகரம், சிறுநகரம், கிராமங்களுக்குக் கொண்டுவருதல்.

 

பள்ளி, கல்லூரிகளில் தூய்மை இந்தியா திட்டம்

 

 • நல்லதொரு தேசத்தை உருவாக்க,அத்தேசத்தின் குழந்தைகளிடமும்,இளைஞர்களிடமும் இருந்து தொடங்குவதே சிறந்த வழியாகும். எனவே தூய்மை இந்தியா திட்டத்தை விதைக்க
 • பள்ளியும் கல்லூரிகளுமே மிகச்சரியான இடம்.
 • அதன்படி 2014 ஆண்டு முதலே கேந்திரீய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகளில் பிரச்சாரம் செய்துவருகிறது.