தொல்காப்பியம் சிறப்புகள்

Deal Score-1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

 • எழுத்து, சொல், பொருள் என முன்று அதிகாரங்கள் கொண்டது.
 • அதிகாரத்துக்கு 9 இயல்கள்  வீதம்  27 இயல்களுடன்  1611 நூற்பாக்களை உடையது.
 • எழுத்துகளின் வகை, அவை வரும் இடங்கள், எழுத்துகளின் தோற்றம், உச்சரிப்பு மாற்றங்கள் பற்றி கூறுவது எழுத்ததிகாரம்.
 • எழுத்ததிகாரம் நூன்மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், உருபியல் உள்ளிட்ட 9 இயல்களையும் 488 நூற்பாக்களையும் கொண்டது.
 • தமிழ் எழுத்துகளின் வகைகளையும், எழுத்துகளை உச்சரிக்க ஆகும். கால அளவான மாத்திரை பற்றியும் சொல்வது  நூன்மரபு.
 • எழுத்து எனப்படும் அகரம் முதல் ளகரம் இறுவாய் முப்பஃது என்ப என்பதே தொல்காப்பியத்தின் முதல் நூற்பா.
 • ஒரு சொல்லில் முதலில், இறுதியில் வரும் எழுத்துகள் எவை? வராத எழுத்துகள் எவை?  என்பதைப் பற்றி விளக்குவது மொழிமரபு.
 • பிறப்பியலில் வயிற்றில் பிறக்கும் எழுத்து எது? தொண்டையில் பிறக்கும் எழுத்து எது?  என்பது போன்ற கருத்துகள் விளக்கப்படுகின்றன.
 • இன்றைய மொழியியல் பிரிவுகளில் ஒன்றான ஒலியியல் துறையின் கருத்துகள் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் பிறப்பியலில் சொல்லியிருப்பதைக் கண்டு வியக்கின்றனர் மேல்நாட்டு வல்லுநர்கள்.
 • அரசியல், தத்துவவியல் துறைகளுக்கு அடித்தளமிட்ட கிரேக்க அறிஞர்கள் சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில் போல மொழியியல் துறைக்கு அடித்தளமிட்ட ஓர் உலக அறிஞர் தொல்காப்பியர்.
 • புணரியல் எழுத்துகள் ஒன்றோடு ஒன்று சேரும் போது ஏற்படும் மாற்றங்களை விளக்குகிறது
 • உருபியலில் தமிழிலுள்ள வேற்றுமை உருபுகள் விளக்கப்படுகின்றன.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]