Tholkappiam | TNPSC | TET Study Materials | தொல்காப்பியம்
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

2016-05-20_16-20-09

  • தொல்காப்பியத்தை மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் ‘தமிழின் உயிர் நூல்‘ என்றும் முனைவர் சு.வெ.சு ‘மனித பண்பாட்டின் விதை‘ என்றும் குறிப்பிடுவர்.
  • தொன்மைமிக்க இலக்க நூலின் ஆசிரியர் – தொல்காப்பியர்.
  • ‘வேறெந்த மொழிநூல் இல்லாத பழைமை, பெருமை, அழகு, அருமையும் அமைந்தது‘ சோமசுந்தர பாரதியார்.

நூலின் அமைப்பு:

  • எழுத்து, சொல், பொருள் – ஒவ்வொரு அதிகாரமும் மூன்று பகுதிகள்.
  • ஒவ்வொரு அதிகாரமும் 9 பிரிவுகள் கொண்டது 1610 நூற்பாக்கள் உடையது.

இந்நூலின் சிறப்பு:

  • முதலில் பொதுவிதிகள் கூறி பின்னர் சிறப்பு விதிகளை எடுத்துரைத்து இறுதியில் விடுபட்ட இலக்கண இயலை கூறுவது.

தொல்காப்பியர் 

  • இடைச்சங்க காலத்தவர், இலக்கண வல்லுநர்.
  • அகத்தியரின் பன்னிரு மாணவர்களில் ஒருவர் என்பர்.
  • காப்பியக்குடியில் தோன்றியதால் தொல்காப்பியர் எனப்பட்டார் என்கிறார் இளம்பூரணர்.
  • திரணதூமாக்கினியார் என்பது தொல்காப்பியரின் இயற்பெயர் என்பது அறிஞர் சிலரின் கருத்து, இதை மறுப்பவர் பலர்.
  • தொல்காப்பியம் என்ற நூலை எழுதியதால் தொல்காப்பியர்‘ எனப் பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
  • பனம்பாரனாரின் தொல்காப்பியப் பாயிரத்தில் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் என்று தமிழகத்தின் எல்லை வரையறுக்கப்படுகிறது.
  • பாயிரத்தில் பனம்பாரனார் தொல்காப்பியரை ‘ஐந்திரம் நிறைந்த ‘தொல்காப்பியன்‘ என்கிறார்.
  • ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்‘ என்பதற்கு ஐந்திரம் என்ற நூலில் புலமைபெற்றவர் தொல்காப்பியர் என்பது பொருள்.
  • பாணினி முனிவர் இயற்றிய ‘அஷ்டத்யாயி‘ என்ற இலக்கண நூலுக்கு முன்பு செல்வாக்குடன் திகழ்ந்தது ஐந்திரம்.
  • தொல்காப்பியத்தில் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ப, மொழிப, என்மனார் புலவர் என்று வருவதால் காப்பியர் காலத்துக்கு முன் எண்ணிலடங்காத் தமிழ் நூல்கள் இருந்தது தெளிவு.
  • தொல்காப்பியர் ‘முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி‘ தொல்காப்பியத்தை படைத்தார் என்கிறார் பனம்பாரனார்.

 

Click Here To Get More Details