திருநாவுக்கரசர்

Deal Score+7

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

 

 • திருநாவுக்கரசரின் இயற்பெயர் மருள்நீக்கியார். இவரது தமக்கை திலகவதியார்.
 • வாகீசர், அப்பர், ஆளுடைய அரசு, தாண்டக வேந்தர், தருமசேனர் ஆகிய வேறு பெயர்களும் திருநாவுக்கரசருக்கு வழங்கப்படுகின்றன.
 • திருஞான சம்பந்தர் இவரை அப்பரே என்று அழைத்ததால் அப்பர் எனப்பட்டார்.
 • திருநாவுக்கரசர் தாண்டகம் என்ற செய்யுள் வகையில் சிறந்த பாடல்கள் இயற்றியதால் தாண்டக வேந்தர் எனப்பட்டார்.
 • திருநாவுக்கரசர் முதலில் சமணத்தைத் தழுவியவர் ஆவார்.
 • இவரது சூலைநோய் (வயிற்று வலி) தீர்க்க தம் தமக்கை திலகவதியாரால் திருநீறு அளிக்கப் பெற்றவர். பின்னர் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினார்.
 • முதலாம் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் திருநாவுக்கரசர் ஆவார்.
 • மாசில் வீணையும் மாலை மதியமும் – திருநாவுக்கரசர்.
 • என் கடன் பணி செய்து கிடப்பதே – திருநாவுக்கரசர்.
 • தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன் – திருநாவுக்கரசர்.
 • அப்பர் திருநாவுக்கரசு நாயனார்கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், அறுபத்து நான்கு நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்.
 • இவர் திருஞானசம்பந்தர் அப்பர் (தந்தை) என்று அழைத்தமையால்,. அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார்.
 • திருநாவுக்கரசர் என்ற பெயர்க் கொடுத்தவர்- சிவபெருமான்
 • தாய்-மாதினியார், தந்தை – புகழனார்
 • பெற்றோர் இட்ட பெயர் – மருள் நீக்கியார்.
 • சமணம் சார்ந்த பொழுது ஏற்ப்பட்ட பெயர்-தருமசேனர்
 • தமக்கை – திலகவதியார்

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]