திருமுருகாற்றுப்படை

maanavan

 • இயற்றியவர் – நக்கீரர்.
 • இப்பாடல் பத்துப் பாடலில் கடவுள் வாழ்த்து பாடலாகவும் அமைந்துள்ளது.
 • இவ்வாற்றுப் படையில் முருகர் கடவுளை பற்றிய ஒரு கதை உண்டு.
 • ஒரு பூதம் மலைக்குகையிலே 999 பேரை அடைத்து வைத்திருந்தது. ஆயிரமாவது ஆள் ஒருவரை தேடிக் கொண்டு இருந்தபோது நக்கீரர் அகப்பட்டார்.
 • அவரை அடைத்து வைத்துவிட்டு குளிக்கச் சென்றது. அப்போது நக்கீரர் தான் வணங்கும் முருகன் மீது அவன் அருளைப்பெற பாடி விடுவிக்கப் பெற்றது திருமுருகாற்றுப்படை.
 • பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும்.
 • இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது.
 • இந்நூலை இயற்றியவர் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார்.
 • இவரது இயற்பெயர் கீரன் என்பதாம்.
 • நெடுநல்வாடையை இயற்றியவரும் இவரே.
 • இந்நூல் ஆற்றுப்படுத்தப்படுவர்கள் பெயரைச் சார்ந்து வழங்காமல் பாட்டுடைத் தலைவன் பெயரைச் சார்ந்து விளங்குகிறது.
 • இந்நூலின் பாட்டுடைத் தலைவன் செந்தமிழ் தெய்வமாகிய முருகப் பெருமான். இந்நூல் முருகன் எழுந்தருளியுள்ள ஆறு படை வீடுகளை பாராட்டும் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 • ஞாயிறு தோன்றுவதைக் காட்டிக்கொண்டு தொடங்குகிறது.
 • அருளைப் பெற ஆற்றுப்படுத்துகிறது. பிற ஆற்றுப்படைகள் பொருளைப் பெற ஆற்றுப்படுத்துகின்றன.  பொருளைப் பெற  ஆற்றுப்படுத்தும் பிற ஆற்றுப்படைகள்; பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, மலைபடுகடாம்.
 • தொல்காப்பிய மரபு – 1037பாடாண் திணையின் துறைகளில் ஒன்று ஆற்றுப்படை.
 • கூத்தரும் பாணரும் பொருநரும் விறலீயும் ஆற்றிடைக் காட்சி உறதை் தோன்றியப் பெற்ற பெருவளம் பெறா அா்க்கு அறிவுறீஇ சென்று பயன் எதிரச் சொன்ன பக்கம்‘ திருமுருகாற்றுபடை முதுவாய் இரவலனை ஆற்றுப்படுத்துகிறது.

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.