Thirukkural| TNPSC | TET Study Materials | திருக்குறள்
Review Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

images (1)

திருக்குறள்

  • திருக்குறள் = திரு + குறள்
  • இரண்டு அடிகளாலான குறள் வெண்பாக்களால் ஆனது.
  • திருக்குறளை திருவள்ளுவர் எழுதினார்.
  • திருக்குறள் முப்பால்களை கொண்டது. அவை அறத்துபால், பொருட்பால், காமத்துப்பால் (இன்பத்துப்பால்) ஆகியவை ஆகும்.
  • திருக்குறள் 133 அதிகாரங்களையும் 1330 குறள்களையும் கொண்டது.
  • திருக்குறளில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைந்துள்ளன.
  • திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.
  • உலக மொழியில் உள்ள அறநூல்களில் முதன்மையானது திருக்குறள். இது பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • உலக மொழிகளில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். நூற்றேழு மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது.
  • மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812-இல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.

சிறப்புப்பெயர்கள்

  • உலகப்பொதுமறை, முப்பால், வாயுறை வாழ்த்து, பொதுமறை, பொய்யாமொழி, தெய்வநூல், தமிழ்மறை, முதுமொழி உத்தரவேதம், திருவள்ளுவம்.
  • திருவள்ளுவ மாலை என்பது திருக்குறளின் பெருமை குறித்துச் சான்றோர் பலர் பாடிய பாக்களின் தொகுப்பாகும்.
  • திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் பரிமேலழகர்.
  • அறத்துப்பாலில் – 38 அதிகாரங்கள்,
  • பொருட்பாலில் 70 அதிகாரங்கள்,
  • இன்பத்துப்பாலில் 25 அதிகாரங்கள் உள்ளன.
  • விக்டோரியா மகாராணி, காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள்.
  • திருக்குறளுக்கு உரைசெய்த பதின்மர், தருமர், தாமத்தர், பரிதி, திருமலையர், பரிப்பெருமாள், மணக்குதவர், நச்சர், பரிமேலழகர், மல்லர், காளிங்கர்.
  • திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் – வீரமாமுனிவர், ஜி.யூ.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

 

Click Here To Get More Details