திருஞானசம்பந்தர்

Deal Score+38

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

 • இவருடைய இயற்பெயர் ஆளுடைய பிள்ளை.
 • சமயக் குரவர் நால்வரின் முதலாவதாக குறிப்பிடப்படுபவர்.
 • தேவாரத்தின் முதல் நூலைப்பாடியவர். 23 பண்களில் (இசைகளில்) திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.
 • திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் முதன் முதலில் சந்தித்த இடம் திருப்புகலூர்.
 • திருமறைக்காடு (வேதாரண்யம்) கோயில் கதவு திறக்கவும், மூடவும் பதிகம் பாடியவர் திருஞானசம்பந்தர் ஆவார்.
 • கூன்பாண்டியனின் வெப்ப நோயைப் போக்கியவர் திருஞானசம்பந்தர்.
 • திருஞானசம்பந்தர் வைகையாற்றில் இட்ட ஏடு கரையேறிய இடம் திருஏடகம்.
 • திருநாவுக்கரசருக்கு அப்பர் என்ற பெயரைக் கொடுத்தவர் திருஞானசம்பந்தர்.
 • பால் குடித்தபோது பாடியது முதல் பாடல் தோடுடைய செவியன் எனத் தொடங்கும் பாடல்.
 • கதவு திறக்கப் பாடிய பாடல் இரக்கம் ஒன்றிலிர் என்று தொடங்கும் பாடல்.
 • மன்னனின் நோய் தீர்க்கப் பாடிய பாடல் மந்திரமாவது நீறு என தொடங்கும் பாடல்.
 • காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்பதும் இவர் இயற்றிய பாடலே.
 • நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் என்று திருஞானசம்பந்தரைப் புகழ்ந்தவர் சுந்தரர்.
 • தி்ருஞானசம்பந்தர் பிறந்த ஊர்– சீர்காழி
 • தாய்-பகவதியார்
 • தந்தை-சிவபாத இருதயர்
 • உமையம்மையால் ஞானப்பால் ஊட்டப்பெற்றதால் மூன்று வயதில் பாடல் பாடத் தொடங்கினார்.
 • திராவிட சிசு என திருஞான சம்பந்தரை அழைத்தவர்– ஆதிசங்கர்
 • நாளும் இன்னிசையால் தமிழ்ப்பரப்பும் ஞானசம்பந்தர் என போற்றியவர்-குமரகுருபர்
 • கூன் பாண்டியனை சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியவர்-திருஞானசம்பந்தர்
 • திருநீலகண்டரை தன்னுடன் வைத்திருந்கவர்– திருஞானசம்பந்தர்
 • திருஞான சம்பந்தர் இறைவனோடு கலந்த வயது-16
 • சம்பந்தர் இறைவனோடு கலந்த ஊர்-திருப்பெருமணநல்லூர்.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]