தேசிய குடற்புழு நீக்க தினம்

Review Score0

2016-10-06_17-26-16

 

  • வாழப்பாடி: தமிழகம் முழுவதும், தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, 1 முதல் 19 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் இலவச குடற்புழு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை வாயிலாக நடக்கிறது.

 

  • கைகளை கழுவாமல் சமைத்தல், பரிமாறுதல் மற்றும் காய்கறிகள் பழங்களை கழுவாமல் உண்ணுதல், திறந்தவெளியில் மலம் கழித்தல், தன் சுத்தம் பேணாமை போன்ற காரணங்களினால் மனிதர்களை குடற்புழுக்கள் தொற்றி நோய் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

 

  • சிறுவர் – சிறுமியர் குடற்புழுவால் ரத்தசோகை நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய் பரவலை கட்டுப்படுத்திட, 10 ம் தேதியை தேசிய குடற்புழு நீக்க தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வாயிலாக, 1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் இலவசமாக ‘அல்பன்டசோல்’ என்னும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

  • முகாமில் விடுபட்டவர்களுக்கு, 15 ம் தேதி குடற்புழு மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தும்பல் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு மாத்திரை வழங்கிட, ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு, மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமையிலான குழுவினர் பயிற்சி அளித்தனர்.

 

 

LATESTS GOVERNMENT JOBS