மத்திய மாநில அரசின் முன்னணித் திட்டங்கள்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for மத்திய மாநில அரசின் முன்னணித் திட்டங்கள்

 

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்

 • பெண்களின் உரிமைகளுக்காகவும் தேவதாசி என்கிற ஆணாதிக்க-அடிமைத்தன முறையை எதிர்த்தும் போராடியவரான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரிலான இத்திட்டம் 1989-ஆம் ஆண்டில் கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது தொடங்கப்பட்டது. படித்த-ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அரசின் சார்பில் நிதியுதவி அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமும் செயல்பாடும் ஆகும்.

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணத் திட்டம்

 • மருத்துவரும் பெண்கள் உரிமைகளில் அக்கறை காட்டியவருமான டாக்டர் தர்மாம்பாள் பெயரிலான இத்திட்டம் 1975-ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, கணவனை இழந்த கைம்பெண்கள் (விதவைகள்) மறுமணம் செய்துகொள்ள அரசுநிதியுதவி அளித்து வருகிறது.

.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண உதவித் திட்டம்

 • தந்தை பெரியாரின் வாழ்விணையரும் பெரியாருக்குப் பிறகு திராவிடர் கழகத்தை வழிநடத்திய பெண் தலைவருமான மணியம்மையார் பெயரில் ஏழை கைம்பெண்களின் மகள் திருமணத்திற்கு நிதியுதவி அளிக்கும் இத்திட்டம் எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் 1981-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம்

 • பிறப்பு அடிப்படையிலான சாதிப் பாகுபாடு பார்க்காமல் வெவ்வேறு நிலையிலான சாதிகளைச்சேர்ந்தவர்கள் அவற்றைப் புறந்தள்ளி கலப்புத் திருமணம் செய்துகொள்வதை ஊக்குவிக்கும் விதத்தில் அறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க ஆட்சிக்காலத்தில் இந்த கலப்புத்திருமண உதவித் திட்டம் கொண்டு வரப்பட்டது. 2011-இல் இத்திட்டத்திற்கு டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி அம்மையாரின் பெயர் சூட்டப்பட்டது.

சேவை இல்லங்கள்

 • ஏழை-விதவை-கலப்புத் திருமணம் செய்து கொண்ட பெண்கள் மற்றும் விதவைகளின் மகள் ஆகியோருக்கான இந்தத் திருமண நிதியுதவித் திட்டங்களைப் போலவே பெண்களின் சமூகப் பாதுகாப்புக்கானத் திட்டங்களும் தமிழக அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் முக்கியமானவை சேவை இல்லங்கள். இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலேயே ஓமந்தூர் ராமசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இத்திட்டம் தொடங்கப்பட்டு பல மாவட்டங்களிலும் இன்றளவிலும் சேவை இல்லம் எனும் விடுதிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்

 • திராவிட அரசியல் இயக்கத்தின் தாழ்த்தப்பட்ட சமூகத்து பெண் தலைவரும், அண்ணா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவரும்பின்னர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றவருமான சத்தியவாணிமுத்து அம்மையார் பெயரால் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் 1979-80-ஆம் ஆண்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
 • சத்தியா அம்மையார் அரசு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம்1979-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்.
 • அவர்களின் தாயார் சத்தியா அம்மையாரின் பெயர் சூட்டப்பட்டது.

தொட்டில் குழந்தைத் திட்டம்

 • தமிழகத்தின் சில மாவட்டங்களில் பெண் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி, திருமணம் செய்துகொடுப்பதில் உள்ள சமூக- பொருளாதாரப் பிரச்சினைகளால் அவை பிறந்த உடனேயேகள்ளிப்பால், சூடான கஞ்சி, நெல்மணி இவற்றைக்கொடுத்து கொன்று விடும் கொடிய வழக்கம் நிலவிவந்தது. இதனைத் தடுத்து, பெண் குழந்தைகளைப்பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 1992-ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர்ஜெயலலிலிதாவினால் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தொட்டில் குழந்தைத் திட்டம் தொடங்கப்பட்டது.

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்

 • ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் பெற்றோரின் மனப்போக்கை மட்டுப்படுத்தி, சிறுகுடும்பமுறையை ஊக்குவித்து, பெண் கல்வியை மேம்படுத்துதல்-பெண் சிசுக் கொலையைத் தடுத்தல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக 2001-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் இது.

சத்துணவுத் திட்டம்

 • இத்திட்டம் எம்.ஜி.ஆரால் 1-7-1982 அன்று தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் ஊரகப் பகுதிகளில் 2 முதல் 5 வயதிற்குட்பட்ட முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகள் மற்றும் 5 முதல் 9 வயதிற்குட்பட்ட ஆரம்பப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கும் சத்துணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மத்திய அரசின் முன்னணித் திட்டங்கள்ஸ்வாச் பாரத் அபியான் (தூய்மை இந்தியா)

 • மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2, 2014 அன்று தூய்மை இந்தியா திட்டம் மிகுந்த ஆரவாரத்துடன் தொடங்கப்பட்டது.
 • கையில் துடைப்பத்துடன், நாட்டின் மாபெரும் தூய்மை திட்டமென எதிர்பார்க்கப்படும், 62,000 கோடி ரூபாய் செலவிலான தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார்.
 • இத்திட்டத்தின் பிரதான இலக்கு 2019-க்குள் இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்பதேயாகும்.

தேசிய பாலர் தூய்மைத் திட்டம்

 • தூய்மை இந்தியா திட்டத்தின் பகுதியாக தேசிய பாலர் தூய்மைத் திட்டம் குழந்தைகள் தினத்தன்று தொடங்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் இலக்கை எட்டுவதில் குழந்தைகள் பிரதான பங்குவகிப்பர் என்பதை உணர்ந்தே இத்திட்டம் வகுக்கப்பட்டது.
 • மாநில அரசுகள் கிராமப்புற சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக 1999 வரை மத்திய அரசின் உதவியுடனான கிராமப்புற சுகாதார திட்டத்தையும் Central Rural Sanitation Programme (CSRP), 1999 முதல் 2012 வரை முழுமையான சுகாதார நடவடிக்கையையும் அதன்பின்நிர்மல் பாரத் அபியான் திட்டத்தையும் மத்திய அரசு மேற்கொண்டு வந்தது.

பிரதமரின் மக்கள் பணத்திட்டம்

 • நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் வங்கிக் கணக்கு வைத்திருக்கச் செய்வதற்கான தேசிய இலக்குடன் தொடங்கப்பட்ட திட்டமே பிரதமரின் மக்கள் பணத் திட்டமாகும்.
 • பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா எனும் இத்திட்டத்தின் தொடக்க நாளிலேயே நாடெங்கும்உள்ள5 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. உலக அளவில் ஒரே நாளில் இத்தனை பெரும் எண்ணிக் கையில் வங்கிக் கணக்கு துவங்கப்பட்டதில் இது ஒரு சாதனையாகும்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்ô மாதிரி கிராமத் திட்டம்

 • பிரதமர் நரேந்திரமோடி செங்கோட்டையில் தனது முதல் சுதந்திர தின உரையை ஆற்றுகையில், பாராளுமன்ற உறுப்பினர் களுக்கான மாதிரி கிராமத் திட்டத்தை அறிவித்தார். அதன்படி 2016-க்குள் பாராளுமன்ற உறுப்பினர் தம் தொகுதிக்குள் ஒரு மாதிரி கிராமத்தை உருவாக்கிக் காட்ட வேண்டுமென கூறினார்.

முழுமையான முன்னேற்றம்

 • இத்திட்டம் தனித்தன்மையும், மாறுதலை ஏற்படுத்துவதும், வளர்ச்சியை நோக்கிய முழுமையான அணுகுமுறை உடையதுமாகும். விவசாயம், உடல்நலம், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், வாழ்க்கைத் தொழில் போன்ற பலவற்றில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை இத்திட்டம் சாத்தியப்படுத்துகிறது.

ஒருங்கிணைந்த கங்கை பாதுகாப்புத் திட்டம்

 • பெருமளவு நிதியையும் அறிவையும் கங்கை நதி பாதுகாப்புக்காக செலவழித்தும் உரிய பலன் கிடைக்கவில்லை. இதற்குக் காரணம் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படாததே. எனவே புதிய அரசு ஒருங்கிணைந்த கங்கை நதி பாதுகாப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது.

மேக் இன் இந்தியா

 • இந்திய பொருளாதாரத்துக்கு உலகளவிலான அங்கீகாரம் கிடைக்கக்கூடிய நோக்கில், செப்டம்பர் 25, 2014 அன்று மோடி “மேக் இன் இந்தியா’ திட்டத்தை தொடங்கினார். கடந்த பல ஆண்டுகளில் நாட்டின் உற்பத்தித் துறையை புத்துயிர் பெறச்செய்ய, ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் செய்த முயற்சிகளிலேயே மிகவும் விரிவான திட்டம் இதுவாகும்.
 • FDI-என்பதற்கு வெளிநாட்டு நேரடி முதலீடு (Foreign Direct Investment) என எப்படி பொருளுண்டோ அதேபோல, முதலில் இந்தியாவை முன்னேற்று என்றும் (எண்ழ்ள்ற் உங்ஸ்ங்ப்ர்ல் ஒய்க்ண்ஹ) புரிந்துகொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார்.

டிஜிட்டல் இந்தியா திட்டம்

 • இந்த நிதியாண்டில் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு மாற்றத்தைக் கொண்டுவருவதே இத்திட்டத்தின் இலக்காகும்.
 • அரசுத் துறைகளையும் இந்திய மக்களையும் ஒருங்கிணைப்பது இத்திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும். காகிதபூர்வமான பணிகளை குறைத்துக் கொண்டு, குடிமக்களுக்கு மின்னணு வழியிலான சேவை கிடைக்கப் பெறுவதை இத்திட்டம் உறுதிசெய்யும்.

ஷியாமபிரசாத் முகர்ஜி ரூர்பான் மிஷன்

 • கிராமப்புறங்களின் உட்கட்டமைப்பு வசதியை பலப்படுத்தும் இத்திட்டம், முந்தைய அரசின் (Providing Urban Amenitieas ro Rural Areas) திட்டத்தோடு பலவிதங்களில் ஒற்றுமையை உடையது. எனினும் இத்திட்டம் செயல்படுத்தப்படாத காரணத்தால், இது தோல்வியடைந்ததற்கான காரணங்களை கருத்தில் கொண்டு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

ஸ்மார்ட் சிட்டிஸ்

 • பதவிக்கு வந்த வெகு விரைவிலேயே, பிரதமர் மோடி, இந்தியாவில் 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்க உள்ளதாக பிரம்மாண்டமாக அறிவிப்பு செய்தார். பெரிய நகரங்களைச் சுற்றி 100 துணை நகரங்கள் உருவாக்குவதற்கு முதலீடுகள் செய்யப்படும்.
 • சிறந்த வாழ்க்கைத்தர மதிப்பீடுகளுடன், உருவாகி வரும் புதிய நடுத்தர மக்களை இலக்காகக்கொண்டு உருவாக்கப்படுவதே ஸ்மார்ட் சிட்டியாகும். இத்தகைய நகரங்களின் முதுகெலும்பாக தகவல் மற்றும் தொலை தொடர்பு தொழில்நுட்பம் திகழும்.

சர்தார் படேல் நகர்ப்புற வீடமைப்புத் திட்டம்    

 • மத்திய அரசு 2022-க்குள் சர்தார் படேல் நகர்ப்புற வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகளை கட்டியெழுப்பத் திட்டமிட்டுள்ளது. இதன் பயனாளிகள் பொருளாதாரரீதியாக பலவீனமான பிரிவினரும், குறைந்த வருவாய் உடையவர் களுமாக இருப்பர்.
 • PPP – எனப்படும் பொதுத்துறை-தனியார் கூட்டமைப்பின்கீழ் இவ்வீடுகள் கட்டப்படும்.
 • நாடெங்கும் சேரிகளற்ற நகர்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

14 – வது நிதி கமிஷன் அறிக்கை

 • இந்தியாவின் நிதிக்குழு, குடியரசுத் தலைவரால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 280-வது பிரிவின்படி அமைக்கப்படுகிறது. இந்தக் குழு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையிலான பொருளாதாரத் தொடர்புகளை வரையறை செய்வதற்காக அமைக்கப்படுகிறது.
 • அரசியலமைப்புச் சட்டப்படி, ஒவ்வொருஐந்து வருடத்திற்கும் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் அடங்கிய ஒரு நிதிக்குழுஅமைக்கப்படும்.
 • இந்த 14-வது நிதிக்குழு ஜனவரி 2, 2013-இல்நியமனம் செய்யப்பட்டது.

நிடி ஆயோக் குழு

 • மத்திய அரசு, 65 ஆண்டு காலமாக நடப்பிலிருந்த திட்டக்குழுவை நீக்கிவிட்டு, நிடி (நிடி ஆயோக்) குழு எனும் பிரதமர் தலைமை வகிக்கும் புதிய அமைப்பை உருவாக்கியுள்ளது இவ்வமைப்பில் மாநில முதல்வர்களும் யூனியன் பிரதேச ஆளுநர் களும் இடம்பெறுவர்.
 • 2014, ஆகஸ்டு 15-இல் இந்திய பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்புச் செய்தபடி, இந்தியாவை உருமாற்றுவதற்கான தேசிய அமைப்புக் குழு (NITI -National Institution for Transforming India Aayog)அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அமைச்சரவைக் குழு தீர்மானத்தின் மூலம் 1950, மார்ச் 15-இல் உருவாக்கப்பட்ட திட்டக்குழு இனி செயல்படாது. NITI என்பதன் பொருள் கொள்கை; ஆயோக் என்பதன் பொருள் கமிஷன்.
 • நிடிக்குழுவின் துணைத் தலைவர், தலைமைசெயலாக்க அலுவலர் போன்றேர் பிரதமரால் நியமிக்கப்படுவர். இக்குழுவின் பணியானது இந்திய அளவிலான வளர்ச்சிக்குத் துணைபுரிவதாகும்.

இந்திய அரசியலமைப்பின் 122-வது சட்டதிருத்தம்

 • மத்திய அரசு, 2014 டிசம்பர்-19 அன்று மக்களவையில் அரசியலமைப்பு சட்ட மசோதாவை(122-வது திருத்தம்) அறிமுகம் செய்தது. இது இந்தியஅரசிலமைப்பின் 246-வது சட்டப்பிரிவாகும். இந்த மசோதா பொருட்கள் மற்றும் சேவை வரியை (Good and Services Tax – GST) விரைவில் இந்தியாவுக்கு அறிமுகம் செய்யும்.
 • இந்த திருத்த மசோதாவானது பகுதி 246ஆ, 269ஆ,279ஆ,-ஐ சேர்ப்பதோடு 2003-இல்88-வது திருத்தமாகச்சேர்க்கப்பட்ட 268ஆ, வை நீக்குகிறது. ஏழாவதுஅட்டவணையின் மத்திய அரசு பட்டியலிலுள்ளபகுதி 92,92ஈ மற்றும் மாநில அரசு பட்டியலில் உள்ளஅரசு பட்டியலிலுள்ள பகுதி 52, 55-இவற்றையும்நீக்குகிறது.

டிஜிட்டல் இந்தியா திட்டம்

 • டிஜிட்டல் இந்தியா திட்டம் (உண்ஞ்ண்ற்ஹப் ஒய்க்ண்ஹ லி உஏட) என்பது பல்வேறு அமைச்சகங்கள் பங்கேற்கும் நடவடிக்கையாகும். இதன் நோக்கம் இந்தியாவை மின்னணுசார்ந்த, தகவல் மூலம் அதிகாரம் பெறப்பட்ட சமூகமாக மாற்றுவதும் பொருளாதார அறிவு உள்ள சமூகமாக மாற்றுவதுமே ஆகும்.
 • இந்தத் திட்டமானது இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையால் தேசிய மின்னணு அரசாள்கை திட்டத்தின் புனர் நிர்மாணமாக ஆனால் அதைவிடப் பேரளவினதாக உருவாக்கப்பட்டு உள்ளது.
 • அமைச்சரவையால் இந்த டிஜிட்டல் இந்தியா திட்டம் ஆகஸ்டு 2014 அன்று அனுமதிக்கப்பட்டது. 2108-ஆம் ஆண்டுக்குள் இலக்குகளை அடைய வேண்டும் என்ற குறிக்கோளும் நிர்ணயிக்கப்பட்டது.

தேசிய நீதிமன்ற நியமனக் குழு சட்டம்

 • இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசியநீதிமன்ற நியமனக் குழு மசோதா (National Judicial
 • Appointment Commission -NJAC) (2014)-NJAC) (2014)-இல் ஒ டிசம்பர் 31- ஒப்புதல் அளித்தார்.
 • இதன்மூலம் தேசிய நீதிமன்ற நியமனக் குழு மசோதாசெயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.
 • இம்மசோதா 99-வது அரசியலமைப்பு சட்ட திருத்தமும், இந்திய அரசியலமைப்புப் பின் 124-வது சட்டப்பிரிவு ஆகும்.
 • மேல்மட்ட நீதிமன்ற அமைப்புகளுக்கான நீதிபதிகளை நியமிக்கும் பழைய முறை இம்மசோதாவால் முடிவுக்கு வரும்.

வர்த்தக நீதிமன்ற மசோதா – 2015

 • ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.பி. ஷா தலைமை வகித்த 20-வது இந்திய சட்டக்குழு, ஜனவரி 29, 2015 அன்று மத்திய அரசிடம், “வர்த்தகப் பிரிவு மற்றும் வர்த்தக மேல்முறையீட்டுப் பிரிவு உயர்நீதிமன்றங் கள் தொடர்பான “வர்த்தக நீதிமன்ற மசோதா 2015′-ஐ சமர்ப்பித்தது. இது இந்திய சட்டக் குழுவின் 253-வது அறிக்கையாகும்.
 • அந்த அறிக்கையில், விவாதங்கள் முடிவின்றி ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படாமல் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவு காணும் விதத்தில் இந்தியாவில் வர்த்தக நீதிமன்றங்களை அமைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் 309-வது பிரிவு நீக்கம்

 • இந்திய தண்டனைச் சட்டத்தின் 309-வது பிரிவை மத்திய அரசு நீக்கம் செய்துள்ளது. எனவே தற்கொலை முயற்சி இனி குற்றச்செயலாகக் கருதப்படாது.
 • இந்திய தண்டனைச் சட்டத்தின் 309-வது பிரிவின்படி தற்கொலை முயற்சி செய்தவர் குற்றவாளியாகக் கருதப்படுவதோடு அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

பாரம்பரிய மேம்பாடு மற்றும் விரிவாக்கத் திட்டம்

 • மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை ஜனவரி 1, 2015 அன்று தேசிய பாரம்பரிய நகர் மேம்பாடு மற்றும் விரிவாக்கத் திட்டத்தைத்(National Heritage City Developement and Augmentation Yojana -HRIDAY) தொடங்கி வைத்தது. இத்திட்டத்தின் கீழ்இந்தியாவின் பாரம்பரியமும் சிறப்புமுடைய நகரங்கள்பேணிப் பாதுகாக்கப்பட்டு அதன் செழுமைமிக்ககலாச்சாரமும் பாரம்பரியமும் மறுமலர்ச்சிஅடைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
 • இந்த திட்டம் மத்திய கிராம மேம்பாட்டு அமைச்சர் எம். வெங்கைய நாயுடுவால் தொடங்கி வைக்கப்பட்டது.

சாந்தகுமார் கமிட்டி அறிக்கை

 • இந்திய உணவுக்கழகத்தை மறுசீரமைப்பது குறித்த அறிக்கையை ஜனவரி 21, 2015-இல் சாந்தகுமார் கமிட்டி பிரதமர் நரேந்திர மோடியிடம் அளித்தது.
 • இதனையடுத்து சாந்தகுமார் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக பரிந்துரைத்தது.
 • இந்திய உணவுக் கழகத்தின் மறுசீரமைப்புக் குழு ஆகஸ்டு 2014-இல் சாந்தகுமாரை தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்டது. இது எட்டு உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழுவாகும்.

கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை

 • சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 2010,மார்ச் 4 -இல் மாதவ் காட்கில் தலைமையில் 14 உறுப்பினர்களைக் கொண்ட சுற்றுச்சுழல் நிபுணர்குழுவை அமைத்து மேற்குத் தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளையும், வன உயிரிகளையும் பற்றி ஆராய்ந்து அறிக்கை தரக் கோரியது. அக்குழு 2011, ஆகஸ்டு 30-இல் தன் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையைச் சமர்ப்பித்தது.
 • இவ்வறிக்கைக்கு, மேற்குத் தொடர்ச்சி மலையைஉள்ளடக்கிய ஆறு மாநிலங்களிலிருந்தும் எதிர்ப்புகள்வரவே, 2013 அக்டோபர் 18-இல் சுற்றுச் சூழல் மற்றும்வனத்துறை அமைச்சகம் கஸ்தூரிரங்கன் தலைமையில்புதிய குழு அமைத்து அதன் பரிந்துரைகளைத்தெரிவிக்குமாறு கேட்டது.
 • மாதவ் காட்கில் குழுவின் அறிக்கையை ஆராய்ந்து, 2013 ஏப்ரல் 15-இல் கஸ்தூரி ரங்கன் குழு தன் அறிக்கையைச் சமர்ப்பித்தது.

சுப்ரமணியன் கமிட்டி அறிக்கை

 • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட நான்கு உறுப்பினர் களைக் கொண்ட உயர் மட்டக் குழு 2015 ஜனவரி முதல் வாரத் தன்று தன் அறிக்கையை சமர்ப்பித்தது. இக்குழு சுற்றுச்சூழல், வனம் சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி பெற ஒற்றைச்சாளர நடைமுறையை அமல்படுத்த பரிந்துரைத்துள்ளது.
 • முன்னாள் அமைச்சரவைச் செயலாளரான டி. எஸ். ஆர். சுப்ரமணியன் தலைமை யில், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுதல் குறித்த பல்வேறு சட்டங்களை மீளாய்வு செய்வதற்காக இக்குழு அமைக்கப்பட்டது.
 • சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் – 1986
 • வனப் பாதுகாப்புச் சட்டம் – 1980
 • கானுயிர் பாதுகாப்புச் சட்டம் – 1972
 • நீர் மாசு கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டம் – 1974
 • காற்று மாசு கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டம் – 1981
 • இவற்றை மீளாய்வு செய்திருக்கிறது.

தீன்தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா

 • ராஜீவ் காந்தி கிராமப்புற மின்மயமாக்கல் என்ற திட்டம் (Rajiv Gandhi Grameen Vidyutikaran Yojana- RGGVY) 2005-இல் அறிமுகமானது.
 • கிராமங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க தேவையான மின்வழித்தடத்தை இலவசமாக ஏற்படுத்தி தருவது இந்த திட்டத்தின் நோக்கம்.
 • மத்திய அரசு ராஜீவ்காந்தி கிராமப்புற மின் விநியோகத் திட்டத்தை 2005 ஏப்ரல்5-ஆம் தேதி துவங்கப்பட்டது. இந்த மின்விநியோக திட்டம் கிராமப்புற வேளாண் மற்றும் வேளாண்சார்ந்த தொழில்கள் நவீனமயமாக்கலுக்கு முக்கிய காரணியாக அமையும். அத்துடன் கிராமம் மட்டுமல்லாது கிராமத்தையொட்டிய மக்களும் பயன் பெறுவார்கள்.
 • இந்நிலையில் மத்திய அரசு ராஜீவ்காந்தி கிராமப்புற மின்மயமாக்கல் திட்டப் பெயரை “தீன்தயாள் உபத்யாயா கிராம் ஜோதி யோஜனா’ (Deendayal Upadhyaya Gram Jyoti Yojana – DUGJY) என மாற்றம் செய்துள்ளது.

குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்தம் – 2015

 • உலகின் பல நாடுகளிலும் குழந்தை தொழிலாளர் கள் முறை இருந்து வருகிறது. பல்வேறு தொழில் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குகின்றனர். உலகமெங்கும் 5 வயது முதல் 14 வயது வரையிலான 15 கோடியே 80 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் வீட்டு வேலை தவிர்த்து பிற வேலைகளில் ஈடுபடுவதாக ஐநா சபையின் யுனிசெப் அமைப்பு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
 • இந்தியாவில் 14 வயதுக்குட்பட்ட தொழிலாளர் களை குழந்தை தொழிலாளர்கள் என சட்டம் வரையறை செய்துள்ளது.
 • 1986-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குழந்தை தொழிலாளர் (ஒழிப்பு மற்றும் சீரமைப்பு) சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக, குழந்தை தொழிலாளர் (ஒழிப்பு மற்றும் சீரமைப்பு) மசோதா 2012 திருத்தப்படுகிறது.
 • மத்திய அரசு குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளது

புதிய காப்பீட்டு திட்டங்கள்

 • பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்ததும் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பென்சன் திட்டம், காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
 • இதன் முதல் படியாக ஏழைகளும் பயன்பெறும் வகையில் அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் திட்டம் அமல்படுத்தபட்டது. இதில் கோடிக்கணக்காக மக்கள் சேர்ந்தனர்.
 • அவை: பிரதன் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jothi Bima Yojana – PMJJBY), அடல் பென்சன் யோஜனா (AtalPension Yojana) பிரதன் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (Pradhan Mantri Suraksha Bima Yojana -PMSBY)

119-வது அரசியலமைப்பு சட்ட திருத்தம்

 • இந்திய பாராளுமன்றத்தில் மே-7, 2015-இல் 119-ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா, லோக் சபாவின் ஒருமித்த ஒப்புதலுடன் நிறைவேறியது.
 • இந்த திருத்த மசோதா 1974-இல் இந்தியா- பங்களாதேஷ் செய்துகொண்ட எல்லை தொடர்பான ஒப்பந்தத்தில் திருத்தங்களை முன்வைக்கிறது.
 • இதன்படி இந்தியாவும் பங்களாதேஷும் தம் எல்லைப்புற பகுதிகளில் சில இடங்களைபரிமாற்றம் செய்துகொள்ளும்-அப்படி பரிமாற்றம் செய்துகொள்ளும் பகுதிகளில் வசிப்பவர்கள், அப்பகுதி எந்நாட்டின் எல்லைக்குள் வருகிறதோ அதன் குடிமக்களாவர் அல்லது அவர்கள் முன்புஅப்பகுதி எந்நாட்டின் உரிமையாக இருந்ததோ அந்நாட்டுக்குச் சென்று அதன் குடிமகனாகவும் மாறலாம்.

முத்ரா வங்கி

 • பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8, 2015 -இல் சிறு மற்றும் குறு தொழில் முனைவர்களுக்கு கடனுதவி அளிக்கும் முத்ரா வங்கித் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். ஙண்ஸ்ரீழ்ர் மய்ண்ற்ள் உங்ஸ்ங்ப்ர்ல்ங்ம்ங்ய்ற் ஹய்க் தங்ச்ண்ய்ஹய்ஸ்ரீண்ய்ஞ் ஆஞ்ங்ய்ஸ்ரீஹ் என்பதன் சுருக்கமே முத்ரா ஆகும். இவ்வங்கி சிறு தொழில் முனைவோருக்கு ரூ. 10 லட்சம் வரையிலான கடன்களை எளிதில் பெற வசதி செய்யும்.
 • முத்ரா வங்கிக்கென 2015 மத்திய பட்ஜெட்டில் ரூ.20,000 கோடியும், அடுத்ததாக கடன் உத்தரவாத நிதியாக ரூ. 3,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒற்றுமை தினம்: அக்டோபர்-31

 • ஒரு நாட்டின் வரலாற்றில் ஒரே தினம் இரு பெரும் ஆளுமைகளை நினைவுகூரும் நாளாக அபூர்வமாகவே அமையும். அக்டோபர்-31 அத்தகைய ஒன்று. இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாயின் பிறந்த நாளும், இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திராகாந்தியின் நினைவு நாளும் அக்டோபர் 31 தான்.
 • சர்தார் வல்லபாய்படேலின் சோர்வில்லாத முயற்சியின்றி, அரசியல் நடவடிக்கைகளின்றி இன்றைய ஒன்றுபட்ட இந்தியா உருவாகியிருக்காது. எனவே அவரது பிறந்த நாள் தேசிய ஒற்றுமை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 • படேலின் 139-வது பிறந்தநாள் (அக்டோபர் 31, 2014) நாடெங்கும் சிறப்புற கொண்டாடப்பட்டது. நியூடெல்லியின் ராஜ்பத்தில், “ஒற்றுமை ஓட்டம்’ என்ற பெயரில் பாரதப் பிரதமர் மோடியால் படேல் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடங்கி வைக்கப் பட்டது.

செல்வமகள் சேமிப்பு கணக்குத் திட்டம்

 • 2011-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு பற்றிய புள்ளி விவரங்கள் சில அதிர்ச்சி தகவல்களையும் அளித்துள்ளது.
 • 0 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் காணப்படும் ஏற்றத்தாழ்வு அச்சம் தரும் உண்மையாக உள்ளதை மறுப்பதற்கில்லை.
 • இந்த புள்ளி விவரங்களின்படி ஆயிரம் ஆண்களுக்கு 918 பெண் குழந்தைகளே உள்ளனர். இந்த குறைவான பாலின விகிதம் நாட்டின் எல்லா பகுதிகளிலும் (ஊரகப் பகுதியானாலும் சரி, நகர் புறங்களானாலும் சரி) காணப்படுகிறது. கவலை தரும் இப்போக்கை மாற்றி அமைக்க உடனடி நடவடிக்கை அவசியம் என்பது எல்லா நிலைகளிலும் உணரப்பட்டுள்ளது.
 • இந்த நிலைமையை மாற்றி அமைக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், முன் முயற்சிகளையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. பெண் குழந்தைகளைப் பேணவும், கல்வி அறிவு புகட்டவும் வகை செய்யும் “பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ’ இயக்கம் “ஜன்தான்’ மற்றும் “சுகன்யா சம்ரித்தி’ கணக்கு போன்ற தேசிய திட்டங்கள் சிலவற்றை பட்டியல் இடலாம்.

இந்தியாவின் முதல் கடன் தகவல்நிறுவனம்

 • சிபில் (ஈஒஇஒக) எனப்படுவது கடன் தகவல் அலுவலமாகும். இதுதான் இந்தியாவின் முதல் கடன் தகவல் நிறுவனமாகும்.
 • இந்தியாவின் நிதித்துறை மேம்பாட்டிற்கு இது பெரும் பங்காற்றுகிறது.
 • அதாவது வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு உதவியும் வாடிக்கையாளர்களை சிறந்த வட்டி விகிதத்தில் விரைவான முறையில் கடன்களைப் பெறவும் இது உதவுகிறது.
 • தனிநபர் சார்ந்த கடன்கள் மற்றும் கடன் அட்டைகள் குறித்த விபரங்கள் அனைத்தையும் சிபில் சேகரித்து பாதுகாக்கிறது.

பெண் குழந்தையைக் காப்போம் பெண் குழந்தைக்குக் கற்பிப்போம்

 • 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு புள்ளி விவரம் குழந்தைப் பாலின விகிதம் (ஈஐஒகஉ நஊல தஆபஒஞ) இதுவரை இல்லாத அளவுக்கு 918 என குறைந் திருக்கும் போக்கை வெளிப்படுத்தி உள்ளது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷய மாகும்.
 • இந்த புள்ளிவிவரம் கூறும் குழந்தைப் பாலின விகிதத்தில் உள்ள சரிவு பெண் குழந்தைகளைக் காப்பதற்கு உடனடியாகச் செயல்பட வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் விளைவாக அரசு “பெண்குழந்தையைக் காப்போம். பெண் குழந்தைக்குக் கற்பிப்போம்’ (இங்ற்ண் இஹஸ்ரீட்ர், இங்ற்ண் டஹக்ட்ஹர்) என்ற திட்டத்தை அறிவித்து உள்ளது.

தேசிய சட்ட உதவி ஆணைக்குழு

 • இந்திய அரசியலமைப்பின் 39ஆ பிரிவில் புதிய அரசு கொள்கையினை நெறிபடுத்தும் கோட்பாட்டின் படி ஏழைகளுக்கான இலவச சட்ட உதவி ஆணைக்குழு சட்டம் 1987 இயற்றப்பட்டது.
 • நாடு முழுவதும் ஏழை குடிமக்களுக்கு இலவச சட்ட உதவி கிடைப்பதற்கான சட்டப்படியான அமைப்புகளை ஏற்படுத்தும் அந்தச் சட்டம், 1995 நவம்பர் ஒன்பதாம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதனை அடுத்து 1995 டிசம்பர் ஐந்தாம் தேதி தேசிய சட்ட உதவிகள் ஆணைக்குழு ஏற்படுத்தப் பட்டது.
 • தேசிய அளவிலான அந்த ஆணைக் குழுவைப் போலவே, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், வட்ட அளவிலும், ஆணைக் குழுக்களை ஏற்படுத்த அந்தச் சட்டம் வகை செய்கிறது.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்

 • இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் இந்தியாவை உலக உற்பத்தி மையமாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்ட கொள்கை முயற்சியாகும்.
 • புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், உற்பத்தியைப் பெருக்குவதற்காகவும் அறிவிக்கப் பட்டுள்ள இந்தத் திட்டம் உற்பத்தித் துறை எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களை வெவ்வேறு வகையான குறுக்கீடுகள் மூலம் தீர்த்து வைக்கின்றன.
 • நடைமுறை தாமதத்தைக் குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிகவும் முக்கியமானது தொழில்துறை உரிமங்களைப் பெறுவதற்காக 24 மணிநேரமும் விண்ணப் பிக்கக்கூடிய வகையில் உருவாக்கப் பட்டுள்ள மின்னணு வணிக (ஊலிஇண்க்ஷ்) இணையதளம் ஆகும்.

பிரதம மந்திரி விவசாய பாசனத் திட்டம்

 • ஒவ்வொரு விவசாயியின் நிலத்திற்கும் நீர் வசதி ஏற்படுத்தவும், அந்த நீரை பயனுள்ள வகையில் பயன்படுத்தவும் 2015-16 மத்திய பட்ஜெட்டில் ரூ.5300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி குறு நீர் பாசனம், நீர் சேமிப்பு மேம்பாடு, பிரதம மந்திரியின் விவசாய நீர்ப்பாசன திட்டம் ஆகியவை பயன்பெறும்.
 • பிரதம மந்திரியின் விவசாய நீர்ப்பாசன திட்டம் பிஜேபி கட்சியின் தேர்தல் வாக்குறுதியாகும். இந்த திட்டத்திற்கு நிதியமைச்சர் 2014-15-க்கான தனது முதல் பட்ஜெட்டில் ரூ.1000 கோடி ஒதுக்கினார்.
 • ஆனாலும் திட்டம் துவங்கவில்லை. ஜூலை இரண்டாம் தேதி பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையில் கூடிய அமைச்சரவை 2015-16 முதல் 2019-20 வரையிலான அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.50,000 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்தது.

டிஜிட்டல் இந்தியா

 • டிஜிட்டல் இந்தியா தொழில்நட்பம் என்பது இந்தியா இப்போது எதிர்கொண்டு வரும் சில சவால்களில் இருந்து மீள்வதற்கு மக்களுக்கு உதவும் வகையில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் முயற்சியாகும்.
 • டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிந்த மக்கள் எல்லையில்லாத வாய்ப்புகளுக்கு அத்தொழில் நுட்பத்தை பயன்படுத்த வகை செய்யும் திட்டம் இதுவாகும்.

சுரக்ஷா பீமயோஜனா

 • நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு எத்தகைய காப்பீடு வசதியும் இல்லை, இதற்காக பிரதம மந்திரி சுரக்க்ஷா பீமாயோஜனா விரைவில் அறிமுகப்படுத்தப்படும். ஆண்டு ஒன்றுக்கு ரூ. 12 பிரீமியம் செலுத்துவதன் வாயிலாக, விபத்தினால் ஏற்படும் இழப்பிற்கு ரூ. 2 லட்சம் காப்பீடு கிடைக்கும்.

அடல் ஓய்வூதிய திட்டம்

 • அடல் ஓய்வூதிய திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்படும். பயனாளிகளின் பங்களிப்பு மற்றும்காலத்திற்கேற்றவாறு ஓய்வூதியம் வழங்கப்படும்.
 • இத்திட்டத்தில் மக்கள் சேருவதை ஊக்குவிக்கும்வகையில் அரசு 50 சதவீத பிரீமியத் தொகையை செலுத்தும். 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதிக்கு முன் தொடங்கப்படும் புதியகணக்குகளுக்கு 5 ஆண்டு காலத்திற்கு ஆண்டுஒன்றுக்கு ரூ. 1000 வழங்க வரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி

 • பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனாஎன்ற 3-வது சமூக பாதுகாப்பு திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. இயற்கை அல்லது விபத்தால் ஏற்படும் மரணங்களுக்கு ரூ. 2 லட்சம் வரை காப்பீடு பெற இத்திட்டம் வழிவகை செய்கிறது.
 • அதற்கான பிரிமீயம் தொகை ஆண்டு ஒன்றுக்கு ரூ.330 ஆகும். 18 முதல் 50 வயது வரை உள்ளவர் களுக்கு பொருந்தும். இத்திட்டத்திற்கு நாள் ஒன்றுக்கு செலுத்தப்படும் தொகை ஒரு ரூபாய்க்கும் குறைவாகும்.

தூய்மை பாரதம்

 • சமூகத்தின் நலனுக்கு ஏற்ப சுற்றுச் சூழலும் வீடும் தூய்மையாக இருக்க வேண்டியது அவசியமாகும். தூய்மை பாரத இயக்கத்தின் ஒரு முயற்சியாக வழங்கப்படும் நிதிக்கு 100 சதவீதம் வரை விலக்கு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதே மாதிரியான வரிவிதிப்பு முறையை கங்கை தூய்மை நிதி திட்டத்திலும் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியம்

 • மத்திய அரசு விரைவில் தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தை துவக்க உள்ளது. இந்த நிதியத்தில் ஆண்டுதோறும் ரூ. 20,000 கோடி பரிமாற்றம் செய்யப்படுவதை அரசு உறுதி செய்யும். இது கடன் அளிப்பதற்கான நம்பிக்கையை அதிகரிக்கும். இதன் மூலம் இந்திய ரயில்வே நிதி கழகம், தேசிய வீட்டுவசதி வங்கி போன்ற உள்கட்டமைப்பு நிதி நிறுவனங்களுக்கு பங்கு முதலீடு அதிகரிக்கும். இந்த பங்கு முதலீடுகளை நிதி நிறுவனங்கள் பல மடங்காக பெருக்க முடியும்.

தேசிய திறன் இயக்கம்

 • மத்திய அரசு விரைவில் தேசிய திறன் இயக்கத்தை துவக்கும். இந்த இயக்கம் மத்திய திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் ஆரம்பிக்கப்படும். இந்த இயக்கம் பல்வேறுஅமைச்சகங்கள் எடுத்துவரும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும். இதன் மூலம் 31 துறைகளில் உள்ள திறன் மேம்பாட்டு மன்றங்களின் பலன்களின் தரத்தை அரசு உயர்த்த முடியும்.

தேசிய விவசாய சந்தை

 • மத்திய அரசின் இந்த புதிய திட்டத்தின்படி அறுவடைக்குப் பின்னான விவசாய பொருட்களின் மேலாண்மை பெருமளவில் வளப்பட வாய்ப்புள்ளது.
 • ஜூலை 2, 2012-இல் மத்திய அரசின் பொருளாதார குழு ஒப்புதல் அளித்த ஒரு மத்திய திட்டத்தின்படி விவசாயத்துறையில் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 • நாட்டிலுள்ள 585 மொத்த வணிக சந்தைகளை கணினி வலைதளத்தின் மூலம் இணைப்பதற்காக 2015-16 லிருந்து 2017-18 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.

மின் நிர்வாகம்

 • டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கம் என்பது இந்தியாவை டிஜிட்டல் ஆளுமை பெற்ற சமூகமாக மாற்றவதும், அறிவுசார் எதிர்காலத்திற்கு தயார்படுத்து வதும் ஆகும்.
 • அனைத்து மின் நிர்வாகம் மற்றும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு இணைப்புத் திட்டங்கள் ஆகியவற்றை தீவிரமாக செயல்படுத்துவதுதான் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கமாக தெரிகிறது.

பிரதம மந்திரி அவாஸ் யோஜ்னா

 • பிரதம மந்திரி அவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீட்டு வசதி ஏற்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அனைவருக்கும் வீடு திட்டத்தில் வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 2 கோடி புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 • நாட்டில் அதிகபட்சமாக உத்திர பிரதேசத்தில் 13 நவீனமயம் நகரங்கள் அமைக்கப்பட உள்ளன. அதற்கு அடுத்து தமிழகத்தில் 12 நவீனமயம் நகரங்கள் உருவாக்கப்பட உள்ளன.

அம்ருத் திட்டம்

 • அம்ருத் திட்டம், அதல் இயக்கம் அடிப்படையில் நகர்புறங்களின் சூழலை மேம்படுத்துவதுடன்
 • அவற்றைப் பொருளாதார வளர்ச்சி மையங்களாக உருவாக்கும் நோக்கத்துடன் இப்பொழுதுள்ள நகர்புறங்களின் வடிவமைப்பை மாற்றி அமைப்பதும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய புதிய நகரங்களை அமைக்கும் இரு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியது.
 • அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் நகர்ப்புறங்களை மேம்படுத்துவதற்காக இந்த இரண்டு இயக்கங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் இந்தியா வாரம்

 • புதுடெல்லியில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், டிஜிட்டல் இந்தியா வாரத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
 • டிஜிட்டல் தொழில்நுட்பம் அல்லது டிஜிட்டல் மயமாக்கல் என்பது, பொது மக்களையும், பொருட் களையும், சேவை களையும், இணைப்பதற்கான சமீபத்திய புதுமையாகும். தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, இணையதளம் மற்றும் பிற தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
 • தற்போது நடைமுறையில் உள்ள தொழில்நுட்பப் புரட்சியின் ஓர் அங்கம்தான் டிஜிட்டல் தொழில் நுட்பமாகும்.

பாலின சமத்துவ விகிதம்

 • இந்தியாவின் பாலின சமத்துவ விகிதம் (ஈநத) அதிர்ச்சியூட்டும் விதத்தில் சரிவடைந்ததை அடுத்து 2014-ஆம் ஆண்டு “பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22, 2015-இல் ஹரியானாவின் பானிபட்டில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

பசுமைப் போக்குவரத்து

 • எந்த விதமான போக்குவரத்து நடைமுறையும் அல்லது வாகனப் பயன்பாடும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருந்து, சுற்றுச்சூழல் மீது பாதிப்பு ஏற்படுத்தாமல் இருந்தால் அதுவே பசுமைப் போக்குவரத்து எனப்படும்
 • மூலவளங்களை திறனுடன் பயன்படுத்துதல், போக்குவரத்து அமைப்பில் மாற்றம், ஆரோக்கியத்தை உறுதி செய்யும் பயணங்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளை உள்ளடக்கியதாகவும் இருக்கும்.
 • மேலும் தனியார் வாகனக் கட்டுபாடு, சூரியசக்தி, காற்று, மின்சாரம், பயோஃபியூல் போன்ற புதுப்பிக்கத் தக்க எரிபொருள்களை வாகனங்களுக்கு பயன்படுத்துதல் முதலான செயல்களும் மேற்கொள்ளப்பட வேண்டும்.