மின்னஞ்சலைக் கண்டுபிடித்த தமிழர்

Image result for மின்னஞ்சலைக் கண்டுபிடித்த தமிழர்

 

  • இன்றைய உலகின் தகவல் பரிமாற்றத்தில் மாபெரும் பங்கு வகிப்பது மின்னஞ்சல். மெயில் என்று பொதுவாக அழைக்கப்படும் மின்னஞ்சல் (email) தகவல் தொழில்நுட்ப யுகத்தின் புரட்சிகரமான கண்டுபிடிப்பு. இதை உருவாக்கியவர், அமெரிக்காவில் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாளராகவும், பல நிறுவனங்களின் உரிமையாளராகவும் விளங்கும் வி.ஏ.சிவா அய்யாதுரை.
  • தகவல் தொடர்புக்கான புதிய கணினி நிரலை உருவாக்கினார். அது 50,000 வரிகள் கொண்டதாக இருந்தது. அதற்கு இ மெயில் என்று பெயரிட்டார், 14 வயதுச் சிறுவனான சிவா. எலக்ட்ரானிக் மெயிலிங் என்பதன் சுருக்கமே அது. இப்படித்தான் மின்னஞ்சல் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு 1982-இல் அமெரிக்காவில் முறைப்படி காப்புரிமையும் பெற்றார் சிவா அய்யாதுரை.

காப்புரிமை யுத்தம்

  • சிவா இமெயிலைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே, கணினியில் சிறு தகவல்களை அனுப்பும் முறை இருந்தது. ரேமண்ட் டாம்லின்சனின் கண்டுபிடிப்பானது இரு கணினிகளிடையே சிறு தகவலை அனுப்ப மட்டுமே உதவியது. ஆனால், சிவா உருவாக்கிய மின்னஞ்சல் முறையானது, எந்தக் கணினியிலிருந்தும் பிற கணினிகளுக்கு இணைய வழியில் தகவல்களை அனுப்பக் கூடியதாகும். தவிர, இன்று பயன்பாட்டிலுள்ள INBOX, OUTBOX, FROM, TO, SUBJECT, CC, BCC, DATA, BODY, FORWARD, REPLY ஆகிய மின்னஞ்சலின் அங்கங்கள் அனைத்துமே சிவா உருவாக்கியவை. இதன்மூலமாக, சிறு தகவல்கள் மட்டுமின்றி, படங்கள், ஒளி – ஒலி இணைப்புகளையும் அனுப்ப முடிகிறது.
  • ஸ்மித்சோனியன் தேசிய அமெரிக்க வரலாற்று அருங்காட்சியகம், சிவாவின் சாதனையை அங்கீகரித்து, மின்னஞ்சலைக் கண்டுபிடித்தது அவர்தான் என்று 2012-இல் அறிவித்தது. நியூயார்க் டைம்ஸ் அவரை “டாக்டர் இமெயில்’ என்றே குறிப்பிட்டது.

அமெரிக்க அதிபரின் பரிசு

  • 1993 – இல் அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன், தனக்கு வரும் பல்லாயிரக் கணக்கான மின்னஞ்சல்களை எளிதாகக் கையாள தானியங்கி முறையை உருவாக்குவோருக்கு பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்தப் போட்டியில் பல பெரிய நிறுவனங்கள் பங்கேற்றன. ஆனால் தனிநபராக சிவா அய்யாதுரை எக்கோ மெயில் (ECHO MAIL) என்ற மின்னஞ்சல் கட்டுப்பாட்டு முறையை உருவாக்கினார். அதற்கு பரிசும் கிடைத்தது. 1994-இல் அந்த மின்னஞ்சல் கட்டுப்பாட்டு முறையை அடித்தளமாகக் கொண்டு எக்கோ மெயில் டாட் இன்க் நிறுவனத்தைத் துவங்கி, அமெரிக்க நிறுவனங்களுக்கு சிவா உதவி வருகிறார்.
  • இதனிடையே, மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (எம்.ஐ.டி.) சேர்ந்த சிவா, மின்னியல் மற்றும் கணினி அறிவியலில் இளநிலை பொறியியல் பட்டம் (1986) பெற்றார். பிறகு, எம்ஐடி மீடியா லேபாரட்டரியில் பயின்று காட்சி ஊடக அறிவியலில் முதுநிலைப் பட்டம் (1989) பெற்றார்.
  • தொடர்ந்து எம்.ஐ.டி.யில் பயன்பாட்டு இயந்திரவியலில் முதுநிலைப் பட்டமும் (1990), சிஸ்டம்ஸ் பயாலஜியில் முதுநிலைப் பட்டமும் (2007) பெற்றார். அவரது கல்வி, ஆராய்ச்சிப் பணிகள், 1978-இல் துவங்கி இன்று வரை, பல்வேறு நிறுவனங்களில் தொடர்கின்றன. தற்போது எம்.ஐ.டி.யில் பேராசிரியராக உள்ளார். மேலும், சர்வதேச இன்டகிரேடிவ் சிஸ்டம்ஸ் கல்வி ஆராய்ச்சிக்கான மையத்தில் (ICIS) இயக்குநராக ஆராய்ச்சிகளிலும் ஈடுபடுகிறார். தவிர கணினி தொடர்பான பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் அவரால் துவங்கப்பட்டுள்ளன.

பாரம்பரிய மருத்துவத்தில் ஆர்வம்

  • சிவாவின் தந்தைவழிப் பாட்டி சின்னத்தாய், கிராமத்தில் சித்த மருத்துவராக இருந்தவர். அதனால் சித்த மருத்துவம் மீது ஈடுபாடு கொண்ட சிவா, அதனை மேற்கத்திய முறையிலும் கணினிமயமாக்கப்பட்ட வடிவிலும் ஆராய்ந்து வருகிறார்.
  • இந்த மருத்துவ ஈடுபாடு காரணமாக, அவர் உருவாக்கிய சைட்டோசால்வ் (CytoSolve), அனைத்து ஆய்வக ஆராய்ச்சிகளையும் உள்ளடக்கிய புதுமையான ஆராய்ச்சி முறையாகும். உடலியக்கத்தையும், மருந்தின் செயல்பாட்டையும் கணினி மூலமாகவே பொருத்தி ஆராயும் இம்முறை முழுமையாக வெற்றி கண்டால், மருத்துவத் துறையில் பெரும் புரட்சி நிகழும்.
TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS

 

No Comments

Sorry, the comment form is closed at this time.