தமிழகத்துக்கு கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: காவிரி மேலாண்மை வாரியத்தின் பணிகள் என்ன?

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for The historic victory of the Tamil Nadu Cauvery Management Board and what works ?

 

 • காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது தமிழகத்துக்கு கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகும்.

 

 • பழைய சென்னை மாகாணம், மைசூர் மாகாணம் இடையேயான காவிரி நீர் பங்கீடு ஒப்பந்தம் காலாவதியானதைத் தொடர்ந்து அப்போதைய மத்திய அரசு “காவிரி உண்மை அறியும் குழு”வை அமைத்தது.

 

 • இந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் 1976-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல் கர்நாடகம் பின்வாங்கியது. தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கொடுக்காமல் கர்நாடகம் புதிதாக அணைகளை கட்டியும், பாசனப் பரப்பளவை அதிகரித்தும் தமிழகத்தை வஞ்சித்தது.

 

 • இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 1990-ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியது. அதன்பிறகு 2007-ல் இறுதி தீர்ப்பு வழங்கியது.

 

 • தமிழகத்தின் விடா முயற்சி காரணமாக இந்த தீர்ப்பு மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டது.

 

 • அணைகளில் தண்ணீர் திறப்பை முழு அதிகாரம் படைத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து செயல்படுத்த வேண்டும் என்று நடுவர் மன்றம் இறுதித்தீர்ப்பில் கூறியது. ஆனால் மத்தியில் இருந்த அந்த அரசும் மேலாண்மை வாரியம் அமைக்க முன்வரவில்லை. அதிகாரமற்ற காவிரி கண்காணிப்புகுழு மட்டுமே அமைக்கப்பட்டது. இதனால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை.

 

 • இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அதன் பேரில் மத்திய அரசு 4 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

 

 • இது தமிழகத்துக்கு கிடைத்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாகும். காவிரி டெல்டா விவசாயிகள் இந்த தீர்ப்பை பட்டாசு வெடித்து வரவேற்றுள்ளனர். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு போராட்டத்துக்குப் பின் தமிழகத்துக்கு நீதி கிடைத்துள்ளது.சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்று மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைத்தாக வேண்டும். முதலில் இதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிடும்.

 

 • அதன்பிறகு மேலாண்மை வாரியம் செயல்படுவதற்கு தலைமை அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். தொடர்ந்து அணைப்பகுதியில் கேம்ப் ஆபீஸ்கள் அமைக்கப்படும். இதில் பணியாற்ற தேவையான அதிகாரிகளை மத்திய அரசு நியமிக்கும். இந்த அதிகாரிகளை நீர்ப்பாசனத்துறையில் பணியாற்றிய என்ஜினீயர்களாக 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

 

 • வாரியத்தின் தலைவராக தலைமை பொறியாளர் அந்தஸ்தில் அதிகாரியும், 2 உறுப்பினர்களும் மத்திய மாநில அரசுகளின் பிரதிநிதிகளும் இதில் இடம் பெற்று இருப்பார்கள்.

 

 • காவிரி அல்லாத மாநிலங்களைச் சேர்ந்தவர் வாரிய தலைவராக நியமிக்கப்படுவார்.

 

 • மாநில அரசுகளின் பிரதிநிதிகளை மட்டுமே மாநில அரசுகள் நியமிக்கும். தலைவர் மற்றும் உறுப்பினர்களையும் கேம்ப் ஆபீசில் பணியாற்றுபவர்களையும் மத்திய அரசு நியமிக்கும்.

 

 • இது முழுக்க மத்திய அரசின் அமைப்பாக இருக்கும். அணையில் நீர் திறப்பு, மூடுவது போன்ற முடிவுகளை எடுக்கும் அதிகாரம் வாரியத் தலைவருக்கு உண்டு. முன்னதாக உறுப்பினர்களும், மாநில பிரதிநிதிகளும் தங்கள் ஆலோசனைகளையும், எதிர்ப்புகளையும் தெரிவிக்கலாம்.

 

 • தொழில் நுட்ப ரீதியாக அணைகளில் நீர் இருப்பு, வரத்து, மழை வெள்ளம் போன்றவற்றை ஆய்வு செய்து உத்தரவு பிறப்பிக்கப்படும். இதற்காக வானிலை அதிகாரி ஒருவரும் வாரியத்தில் இடம் பெற்று இருப்பார்.

 

 • அணை திறப்பது, மூடுவது போன்றவற்றில் கர்நாடக அரசு இனி தலையிட முடியாது. மத்திய அரசின் பொறுப்புக்கு சென்று விடும். எனவே இனி காவிரி நீரை வைத்து கர்நாடகத்தில் யாரும் அரசியலாக்க முடியாது.

 

 • காவிரி மேலாண்மை வாரியத்தின் மூலம் தமிழகத்தில் லோயர் பவானி, அமராவதி, மேட்டூர் அணைகளும், கேரளாவில் பனசுர சாகர் அணையும், கர்நாடகத்தில் ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, கிருஷ்ணராஜ் சாகர் அணைகளும் கண்காணிக்கப்பட்டு நீர்மட்டம், நீர்வரத்து, நீர் இருப்பு ஆகியவை கணக்கிடப்படும்.

 

 • தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலுவில் கணக்கிடப்படும். பருவமழை காலங்களில் பெய்யும் மழை அளவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]