நதிநீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு விடிவுகாலம் எப்போது?… கே.எஸ்.இராதாகிருஷ்ணன் ஆதங்கம்

Image result for The final solution to the problem when the State Water
•  நதிநீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு விடிவுகாலம் எப்போது என்பது குறித்து பிரபல வரலாற்று எழுத்தாளர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.
• அதில், “மத்திய அரசு நேற்றைக்கு நதிநீர் இணைப்புத்திட்டத்தை விரைவு படுத்த பி.என். நவலவாலா தலைமையில் சிறப்புக்குழு ஒன்றைத் திருத்தி அமைத்துள்ளது.
• 1983லிருந்து நதிகள் தேசியமயமாக்கப்பட்டு, தேசிய நதிகளை இணைக்கவேண்டும் என்றும், கேரளாவில் உள்ள அச்சன்கோவில்-பம்பை ஆகிய நீர்படுகைகளை தமிழக வைப்பாற்றோடு இணைக்கப்பட்டு கேரளாவில் மேற்குநோக்கிப்பாயும் நதிகளின் உபரிநீரைத் தமிழகத்திற்கு திருப்ப வேண்டும்.

மாவட்டங்களுக்கு குடிநீர் வசதி:
• இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, உதகை, ஈரோடு, கரூர் மாவட்டங்கள் மட்டுமில்லாமல் மற்ற மாவட்டங்களுக்கு குடிநீர்வசதியும் கிடைக்கும் என பொதுநல வழக்காகத் தொடுத்தேன்.
30 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு:
• இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் நான் தொடர்ந்த பொதுநல வழக்கிற்கு 30ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 27-02-2012 அன்று தீர்ப்பு வழங்கியது.

நதிநீர் இணைப்பு ஆராய்வு குழு:
• அந்தத் தீர்ப்பில் மத்தியஅரசு நதி நீர் இணைப்புகளைப் பற்றி ஆராய ஒரு ஆக்கப்பூர்வமான குழுவை அமைத்து, ஆறுமாதங்களுக்கு ஒருமுறை கூடி, இந்த முக்கிய பிரச்சனைக்கு அவசியம் தீர்வு காணவேண்டும். ஒருபக்கத்தில் வெள்ளம், ஒருபக்கம் வறட்சி என்ற நாட்டின் நிலையை சரி செய்ய இது உதவுவதோடு இதுஒரு முக்கியப்பிரச்சனை.

ஆக்கப் பூர்வமான நடவடிக்கை:
• இதைப்பற்றி ஆக்கப்பூர்வமான நடவடிக்கை வேண்டுமென்று தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, மற்றும் நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், சுவந்திரகுமார் அடங்கிய நீதிபதிகள் குழு நதிநீர் இணைப்பைக் குறித்து முதல் தடவையாக தெளிவான தீர்ப்பை வழங்கியது. சங்கரன் கோவில் சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகள் அப்போது இருந்ததால், உடனே இந்தத் தீர்ப்பு பற்றி முழுமையாக அறியமுடியவில்லை.
குழு அமைக்க கோரிக்கை:
• 2012 மார்ச் மாத இறுதியில் நானும், நாடாளுமன்ற உறுப்பினர் தங்கவேலு அவர்களும் மன்மோகன்சிங் அரசில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த ஹரீஷ் ரவுத்தை சந்தித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், இது குறித்து குழு அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை மனுவையும் அளித்தோம்.

மனு பரிசீலினை:
• ஆனால் அன்றைய மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. திரும்பவும் அக்டோபர் மாதம் அமைச்சர் ஹரீஷ் ரவுத்தைச் சந்தித்து மனுகொடுத்தும் நீங்கள் அதை பரிசீலிக்கவில்லை.
உச்ச நீதிமன்ற ஆணை நடைமுறை
• உச்சநீதிமன்ற ஆணையை நடைமுறைப்படுத்தாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய உள்ளேன் என்று குறிப்பிட்டவுடன், 02-11-2012ல், உத்தரவு எண் : BM/683-707 என்ற உத்தரவின் மூலம் ஒரு குழுவை அமைத்தார்கள்.
குழுவின் உத்தரவு சரியில்லை:
• அந்தக் குழு ஒப்புக்காக நீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்றி விட்டோம் என்று சொல்வதற்காக நியமிக்கப்பட்டது. ஆனாலும் அந்தக்குழுவின் உத்தரவை முறைப்படி சரியாக வெளியிடவில்லை.

 

15 மாதத்திற்குப் பிறகு:
• திரும்பவும் இதைக் குறித்து உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்ற பின்தான் ஒரு வருடத்திற்கு மேலாக, அதாவது 15 மாதத்திற்கு பிறகுதான் முறையான உத்தரவும் வெளியிடப்பட்டது.
நிலுவையில் இருக்கும் வழக்கு:
• ஏனெனில், அன்றைய மன்மோகன்சிங் அரசு இந்திரா காந்தி விரும்பிய நதிநீர் இணைப்புத் திட்டத்தை ராகுல் விரும்பவில்லை என்ற காரணத்தினால் கிடப்பில் போட்டது. இதற்கிடையில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் பொழுது ஒரு செய்தியைச் சொல்லவேண்டும்.
மன்மோகன் சிங் தலைமையிலான அரசு:
• வாஜ்பாய் பிரதமராக இருந்தபொழுது, இன்றைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் நதிநீரிணைப்பு குறித்தான சாத்தியங்களை அறிய குழு அமைக்கப்பட்டு, அக்குழு 80சதவிகிதப் பணிகளை முடித்து இதுபற்றிய அறிக்கையை இறுதிப்படுத்தும் நேரத்தில் மன்மோகன்சிங்கின் யு.பி.,ஏ முதல் அரசு 2004ம் ஆண்டு பதவியேற்றது.

 

சுரேஷ் பிரபு குழுவின் காலம்:
• அப்போது, சுரேஷ் பிரபு குழுவின் காலம் முடியும் தருவாயில் இருக்கும் பட்சத்தில் அந்தக்குழுவுக்கு ஆறுமாத கால நீட்டிப்புத் தந்திருந்தால் அறிக்கையை தாக்கல் செய்திருக்கும். ஆனால் கோடிக்கணக்கில் செலவு செய்து தயாரிக்கப்பட்டு உழைத்த அறிக்கையின் பயன் விரயமாகிவிட்டது.
காலத்தை நீட்டிப்பதாக உறுதிமொழி
• இது குறித்து, உடனே அப்போது உச்சநீதிமன்றத்தில் என் வழக்கின் மூலமாக கவனத்திற்கு கொண்டு வந்தேன். அன்றைக்கு அரசு வழக்கறிஞர் மன்மோகன்சிங்அரசுக்கு இதில் அக்கறையும், ஆர்வமும் இருக்கின்றது. குழுவின் காலத்தையும் நீட்டிப்போம் என்று சொன்ன உறுதிமொழியை மத்திய சர்கார் காப்பாற்றாமல் கிடப்பில் போட்டது.

நாடாளுமன்றத் தேர்தல்:
• காங்கிரஸ் அரசு பத்தாண்டு காலமும் நதிநீர் இணைப்பு என்பது ஒரு ஒவ்வாமையாகக் கருதியது. இந்நிலையில் மறுபடியும் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தபோது, நாடாளுமன்றத்தின் தேர்தல் 2014ல் நடந்தது.
உமாபாரதியிடம் கோரிக்கை மனு:
• 2014ம் ஆண்டு மே மாதம் மோடி அரசு பதவியேற்றபின், 24-07-2014அன்று இன்றைய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியைச் சந்தித்து நானும் தங்கவேலுவும், ஹரீஷ் ரவுத்திடம் அளித்த மனுவைப் போன்றே அமைச்சர் உமாபாரதியிடமும் கோரிக்கை மனுக்களையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு நகலையும் அளித்தோம்.
வாஜ்பாயின் கனவுத் திட்டம்:
• அவற்றைப் பெற்றுக் கொண்ட உமாபாரதி ” இன்றைக்கு இதை அமைச்சரவையில் பேசினோம், இது எங்கள் வாஜ்பாயின் கனவுத் திட்டம், உறுதியாக நிறைவேற்றுவோம்” எனக்கூறினார்.
பணிக்காக வாழ்த்து:
• உங்களின் 30ஆண்டுகால வழக்குப் பணியும், உச்சநீதிமன்றத்தில் நீங்கள் பெற்ற உத்தரவும் தான் எங்களுக்கு இந்தப்பணியை எடுத்து செய்ய அவசியப்படுத்துகிறது என்று சொல்லி என்னை இதுகுறித்து வாழ்த்தவும் செய்தார்.

 

TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS

 

No Comments

Sorry, the comment form is closed at this time.