வங்கி ஆகின்றன ரேஷன் கடைகள்..! அரசின் புதிய திட்டம்

Image result for digital ration card

 

  • இந்தியாவில் உள்ள ரேஷன் கடைகளில் வங்கி சேவையை தொடங்க மத்திய நிதித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

 

  • இதுகுறித்து நிதித்துறை வட்டாரங்கள் கூறுகையில், “இந்தியாவில் உள்ள ரேஷன் கடைகளுடன் மக்களுக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. குறிப்பாக கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளின் பயன்பாடு மிகவும் முக்கியமானதாகும். தற்போது வங்கி சேவை கிடைக்காமல் பல கிராமங்கள் இந்தியாவில் உள்ளன. அங்கெல்லாம் வங்கி சேவை தொடங்குவது என்பது தற்போதுள்ள சூழ்நிலையில் எட்டாத கனியாகும். இதனால் வங்கிகள் இல்லாத கிராம மக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியதுள்ளது. இந்த சிரமத்தை தவிர்க்க வங்கித்துறையும், நிதித்துறையும் சமீபத்தில் ஒரு ஆலோசனை நடத்தியது. அதில் ரேஷன் கடைகள் மூலம் வங்கி சேவையை கிராம மக்களுக்கு கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது. அந்த துறையும் வங்கி சேவைக்கு சம்மதம் தெரிவித்துள்ளது.

 

  • இன்றைய சூழ்நிலையில் ரேஷன் கடைகளில் அதற்கான சாத்தியகூறுகளும் உள்ளன. இப்போது ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்கள் இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் அதற்கான இயந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விரைவில் கம்ப்யூட்டர்மயமாக உள்ள ரேஷன் கடைகளில் இனி வங்கி சேவைகளையும் மக்களுக்கு எளிதில் வழங்க முடியும். இதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. வங்கிகள் தரப்பில் அதற்கான சாப்ட்வேர் ரேஷன் கடைகளில் உள்ள கம்ப்யூட்டர்களில் இணைப்பு கொடுக்கப்படும். இந்த சேவைக்கு தேவைக்கு ஏற்ப வங்கி ஊழியர்கள் ரேஷன் கடைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

 

  • முதற்கட்டமாக இந்தியாவில் 50 ஆயிரம் ரேஷன் கடைகளில் இந்த சேவை தொடங்கப்படவுள்ளது. இதன்பிறகு அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த சேவை விரிவுப்படுத்தப்படும். இந்த சேவை நிச்சயம் மக்களுக்கு பயன்அளிக்கும்” என்றனர்.

 

  • ஏற்கனவே மக்கள் மத்தியில் அதிக நம்பிக்கை பெற்ற தபால்துறை கடித போக்குவரத்து மட்டுமல்லாமல் பார்சல் சேவை, சேமிப்பு, பொருட்கள் விற்பனை என பலபரிமான வளர்ச்சியை பெற்று விட்டது. அதோடு வங்கிகளைப் போல ஏ.டி.எம். மையங்களை கூட தபால்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதுபோல ரேஷன் கடைகளிலும் வங்கி சேவை என்பது கிராம மக்களுக்கு வரபிரசாதாமாக அமையும்.
TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.