இணை திறன் எலக்ட்ரான்கள்

Deal Score+4

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

இணை திறன் எலக்ட்ரான்கள்

  • ஓர் அணுவின் வெளிக்கூடு இணையும் திறன் கூடு எனப்படும். அதிலுள்ள எலக்ட்ரான்கள் இணைதிறன் எலக்ட்ரான்கள் எனப்படும்.

தனிமங்களின் இணைதிறன்

  • அணுக்கள் இணைந்து மூலக்கூறுகள் உண்டாகின்றன. ஒரு தனிமத்தின் அணுக்கள் ஒரு குறிப்பிட்ட இணையும் திறனைப் பெற்றுள்ளன. அதற்கு இணைதிறன் என்று பெயர்.
  • ஹைட்ரஜனின் இணைதிறனை 1 எனக் கொண்டு மற்ற தனிமங்களின் இணைதிறன் கணக்கிடப்படுகிறது. ஒரு தனிமத்தின் இணைதிறன் என்பது அத்தனிமத்தின் ஒர் அணுவுடன் இணையக்கூடிய ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கை ஆகும்.
  • ஹைட்ரஜன் குளோரைடில் ஒரு குளோரின் அணுவுடன் ஒரு ஹைட்ரஜன் அணு இணைந்துள்ளது. எனவே குளோரின் இணைதிறன் 1 ஆகும்.
  • ஆக்சிஜனின் இணைதிறன் மதிப்பைக் கொண்டும் ஒரு தனிமத்தின் இணைதிறனைக் கணக்கிடலாம்.
  • ஹைட்ரஜன், சோடியம், குளோரின், பொட்டாசியம் ஆகியவற்றின் இணைதிறன் 1 ஆகும். கார்பனின் இணைதிறன் மதிப்பு 4 ஆகும்.
  • ஆக்சிஜன், கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம் ஆகியவற்றில் இணைதிறன் மதிப்பு 2 ஆகும். அலுமினியம் மற்றும் நைட்ரஜன் ஆகியவற்றின் இணைதிறன் மதிப்பு 3 ஆகும்

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]