Review Score0

maanavan

  • சமரச சன்மார்க்கத்தை முதன்முதலில் உலகிற்கு அளித்தவர் சைவசித்தாந்தப் பெரியார்.
  • மௌனகுரு என்பவரிடம் அருளும், ஆசியும் பெற்று அவரைத் தம் குருவாக ஏற்றுக்கொண்டார்.
  • இவரது பாடல்கள் ‘‘தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு” என்னும் தொகுப்பில் அமைந்துள்ளது.
  • பராபரக்கண்ணி, எந்நாட்டுக்கண்ணி, ஆனந்தக்களிப்பு போன்றவை இவரது பாடல்களின் தலைப்புகள் ஆகும்.
  • ‘‘கண்ணி” என்னும் சொல்லிற்கு இரண்டிடிப்பாடல் என்பது பொருள்.
  • தாயுமானவரின் காலம் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு
  • தாயுமானவரின் பாடல்கள் ‘திருப்பாடல் திரட்டு” என்னும் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
  • திருப்பாடல் திரட்டு பாடல்கள் கண்ணிகளாகவும், வெண்பாக்களாகவும் அமைந்துள்ளன.
  • தாயமானவர் என்று பெயர் சூட்டப்பட்ட காரணம் திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளியுள்ள இறைவனான தாயுமானவர் திருவருளால் பிறந்தமையால் ஆகும்.
  • இவரது பாடல்கள் தமிழ்மொழியின் ‘‘உபநிடதம்” எனப்போற்றப்பெறும் சிறப்பினை உடையது.
  • இவர் பாடியவை 1542 பாடல்களையும், 5 உட்பிரிவுகளையும் கொண்டவை ஆகும்.
  • தனது ஆசிரமம் அமைந்த இடமான இராமநாதபுரம் லெட்சுமிபுரத்தில் 1744-ம் ஆண்டு முக்தி பெற்றார்.
  • குனங்குடி மஸ்தான் சாகிபு இவரது பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

 

Click Here To Get More Details