ஆசிரியர் தகுதித் ( T.E.T) தேர்வில் பங்கேற்பதற்கான தகுதிகள்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

ஆசிரியர் தகுதித் ( T.E.T) தேர்வில் பங்கேற்பதற்கான தகுதிகள்:

 

  •     இந்தியாவில் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த, நாடு முழுவதும் மிக அதிக அளவிலான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ளது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களின் தரத்தை உறுதிப்படுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

 

தமிழ்நாடு அரசுத் தேர்வு

 

  •     தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் வழிகாட்டுதலின் படி, தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை இந்தத் தேர்வுக்கான அரசாணையை வெளியிட்டது.இதன்படி, தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்.

 

தேர்வில் பங்கேற்பதற்கான தகுதிகள்

 

  1. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ள விதிமுறைகளின் படி ஆசிரியர் பட்டயம், பட்டப்படிப்பு முடித்தவர்கள்.
  2. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படிப்பவர்கள்.

 

தேர்வுத் தாள்கள்

 

  •     இத்தேர்வுகள் இரண்டு தாள்களைக் கொண்டது. தேர்வு வினாக்கள் அனைத்தும் ஒரு மதிப்பெண் வினாக்களாக இருக்கும். ஒவ்வொரு தாளுக்கும் மொத்த மதிப்பெண்கள் 150. ஒவ்வொரு தேர்வுக்குமான காலம் 90 நிமிடங்கள்.

 

முதல் தாள்

 

  •     முதல் தாளுக்கான கேள்வி அமைப்பு கீழ்காணும் தலைப்பில் குறிப்பிட்ட மதிப்பெண்களுக்குரியதாக இருக்கும்

1.குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை – 30 மதிப்பெண்

2.மொழித்தாள் -1 (கற்பிக்கும் மொழி)- 30 மதிப்பெண்

3.மொழித்தாள் -2 (விருப்ப மொழி)- 30 மதிப்பெண்

4.கணிதம் – 30 மதிப்பெண்

5.சுற்றுச்சூழலியல் – 30 மதிப்பெண்

(ஆசிரியர் பயிற்சி (பட்டயப் படிப்பு) முடித்தவர்கள் மட்டும்)

  

இரண்டாம் தாள்

 

  •     இரண்டாம் தாளுக்கான கேள்வி அமைப்பு கீழ்காணும் தலைப்பில் குறிப்பிட்ட மதிப்பெண்களுக்குரியதாக இருக்கும்

1.குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை – 30 மதிப்பெண்

2.மொழித்தாள் -1 (கற்பிக்கும் மொழி)- 30 மதிப்பெண்

3.மொழித்தாள் -2 (விருப்ப மொழி)- 30 மதிப்பெண்

4.கணிதம் – 30 மதிப்பெண்

5.சுற்றுச்சூழலியல் – 30 மதிப்பெண்

(கல்வியியல் பட்டம் பெற்றவர்கள் மட்டும்)

 

பிற தகவல்கள்

 

  • ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் (ஆசிரியர் பயிற்சி (பட்டயப் படிப்பு) முடித்தவர்கள் மட்டும்) முதல் தாளையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் (கல்வியியல் பட்டம் பெற்றவர்கள்) இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் (ஆசிரியர் பயிற்சி (பட்டயப் படிப்பு) மற்றும் கல்வியியல் பட்டம் பெற்றவர்கள் என இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்கள்) இரண்டு தாள்களையும் எழுத வேண்டும்.
  • இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால், அது 7 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் இந்தத் தேர்வில் தனது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ள மீண்டும் தேர்வு எழுதலாம்.
  • இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழில் பதிவு எண், தேர்வெழுதிய ஆண்டு, மாதம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.