ஆசிரியர் தகுதித் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

TNTET 2017 HALL TICKET DOWNLOAD | ஆசிரியர் தகுதித் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது

TNTET HALL TICKET DOWNLOAD

  • ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால் டிக்கெட் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் | ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் ஆன்லைனில் தயாராக உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் காகர்லா உஷா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து விண் ணப்பதாரர்களுக்கும் ஹால் டிக்கெட் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது. இந்த இணையத் தளத்தில் விண்ணப்ப எண் அல்லது விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • ஒரு சில விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் தங்கள் புகைப் படத்தை ஒட்டவில்லை. எனினும் அத்தகைய விண்ணப்பதாரர் களுக்கும் ஹால் டிக்கெட் பதி வேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் புகைப்படம் இல்லாத ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதுடன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு சிறப்பு படிவத்தையும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அந்த படிவத்தில் தேவை யான விவரங்களை குறிப்பிட்டு தங்கள் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்தை ஒட்டி அந்த படிவத்தில் அரசிதழ் பதிவுபெற்ற அரசு அதிகாரியிடம் (Gazetted Officer) சான்றொப்பம் பெற வேண்டும்.
  • தேர்வு நேரத்தின்போது அந்த படிவத்தையும் ஸ்டாம்ப் அளவுள்ள புகைப்படத்தையும் தேர்வுக் கூட மேற்பார்வை யாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 29-ம் தேதி அன்றும் (சனிக் கிழமை), பட்டதாரி ஆசிரியர் களுக்கான தகுதித் தேர்வு 30-ம் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) நடை பெறவுள்ளன. 2 தேர்வு களுக்கும் சேர்த்து 8 லட்சத்து 46 ஆயிரம் பேர் விண்ணப் பித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
TNTET HALL TICKET DOWNLOAD